Friday, February 26, 2016

**********************************

வன்னியர்களின் குல தெய்வம் திரெளபதி அம்மன்:

**********************************
வாணை தொட்டது வேள்வி தீ...!

வேள்வியில் உதித்தால் பெண் ஒருத்தி...!

பெண் குலம் போற்றும் பத்தினி தீ...!

அவளது நாமம் திரெளபதி...!

தலைவிரித்தாடும் அதர்மத்தை தரைமட்டம் ஆக்கிட அவதரித்தாள்...!

தேவர்களின்(கடவுள்கள்) ஆணை நிறைவேற்றி...!

தர்மத்தை காத்திட வந்துதித்தாள்...!

பாஞ்சாலத்தின் இளவரசி....!

பத்தினி நேருப்புபாம் பாஞ்சாலி...!

பல்லுயிர் காக்கும் ஆண்டவனால்...!

அக்னியில் உதித்தால் திரெளபதி...!
=============================
இன்றும் தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா மற்றும் வட இந்தியா,இலங்கை ஆகிய இடங்களில் வாழும் அக்னிகுலசத்ரியர்களின்(வன்னியபள்ளி) குல தெய்வம் ஆகும்.
---------------------------------------------------
வன்னியர்கள் மட்டும் வழிபடும் அக்னி கடவுள் ஆகும்.

வட இந்தியா இராசபுத்திரர்கள் மற்றும் தென் இந்தியா இராசபுத்திரர்களான வன்னியபள்ளிகளின் குல தெய்வம் திரெளபதி அம்மன் ஆகும்.
---------------------------------------------------
இன்று அளவிலும் பாண்டவர்களின் வம்சா வழிகளாக கருத்தப்படுவது கர்நாடகா வன்னியர்களான திகளர்(தீ குலத்தோர்) ஆகும்.
இவர்களையே தென் இந்தியா இராசபுத்திரர்கள்.
---------------------------------------------------
**********************************
#இவன் விமல் இரத்தினம் சத்ரியன்
**********************************
---------------------------------------------------


அக்னிகுலக்ஷத்ரியர்கள்:

(AgniKulaKshatriyas):
---------------------------- 
அக்னிகுலத்தில் இருந்து தோன்றிய 

க்ஷத்ரிய குலங்கள்: 
================
1. சூரியகுலம்.
2. சந்திரகுலம்.
3. நாக குலம். 
4. தீப குலம். 
5. இந்திரகுலங்கள் ஆகும்.
----------------------------
அக்னியே க்ஷத்ரியர் குலத்தின் 

மூத்தகுலம். 
----------------------------
தமிழ் க்ஷத்ரியகுல பேரரசுகள்:
================
1. சேரர் - அக்னிகுலம். 
2. சோழர் - சூரியகுலம். 
3. பாண்டியர் - சந்திரகுலம். 
4. பல்லவர் - அக்னிகுலம்.
---------------------------
இந்தியாவில் போற்றப்படும் 

பள்ளிகுல க்ஷத்ரியர்களின் 

குலங்களாக இன்றும் 

நடைமுறையில் உள்ளவைகள்.
----------------------------
1. வன்னியகுலக்ஷத்ரியர் - 

தமிழ்நாடு.

2. அக்னிகுலக்ஷத்ரியர் - ஆந்திரா 

மற்றும் தெலுங்கனா.

3. சம்பு(தீ)குலக்ஷத்ரியர் - கர்நாடகா.

4. பள்ளிகுலக்ஷத்ரியர் (வர்மா) - 

கேரளா.

5. சூரியகுலக்ஷத்ரியர்
(இராசபுத்திரர்) - ராஜஸ்தான்.

6. சந்திரகுலக்ஷத்ரியர்
(இராசபுத்திரர்) - குஜாராத்.

7. பள்ளிவாரியர்ஸ் 

(இராசப்புத்திரர்) - 

பூனே(மகாராஸ்டீரா).

8. தீபகுலக்ஷத்ரியர் 

(இராசப்புத்திரர்) - கொல்கத்தா.

9. பள்ளிகுலக்ஷத்ரியர் 

(இராசப்புத்திரர்) - ஓரிசா.

10. அக்னிகுலக்ஷத்ரியர் 

(இராசப்புத்திரர்) - 

டெல்லி,ஜார்கண்ட் & நேபாளம்.
--------------------------
மெலே குறிப்பிட்டுள்ள அனைத்து 

க்ஷத்ரியர்களும் பாண்டவர் வம்சா 

வழிகள். இவர்களின் குல தெய்வம் 

திரெளபதி அம்மனும் மற்றும் 

கிருஷ்ணர்.
--------------------------
வேறு எந்தவொரு 

சமுதாயத்திற்கும் குல கடவுள் 

திரெளபதி அம்மன் கிடையாது. 

க்ஷத்ரிய சமுதாயமான 

பள்ளிகுலத்தவர்களுக்கு மட்டுமே 

உரியவள் எங்கள் திரெளபதி 

அம்மன்.
--------------------------
பெருமையும்,கர்வமும் 

கொள்கிறேன் இப்பிறவில் நான் 

ஒரு பள்ளி குலத்தவனாய் 

பிறந்தற்கு. 


பெருமை கொள்கிறேன் ஒரு தமிழ் 

க்ஷத்ரியனாய்.

கர்வம் கொள்கிறேன் ஒரு இந்திய 

க்ஷத்ரியனாய்.
------------------------------
All India AgnikulaKshatriyas:
------------------------------
Agnikula Only Emerged From the 

Kshatriyas Head.
=================
A Head Of Agnikula May tribe a some 

kshatriya kulas:

They Are : 

1. Solar(Suryakula).
2. Lunar(ChandraKula).
3. Naga(NagaKula).
4. Torch(Deepakula).
5. Indirakula.
-------------------------------
Kshatriya clans head Of capital is an 

Agni(Fire) clans.
-------------------------------
Tamil Kshatriya Dynasties:
=================
1. Cheras - AgniClans.
2. Cholas - SolarClans.
3. Pandyas - LunarClans.
4. Pallavas - AgniClans.
-----------------------------
Kshatriyas Pallikulas Venerated in 

India as the Groups Meant In Practice 

Today Such As:
-----------------------------
1. VanniyaKula Kshatriyas (Pallis) - 

TamilNadu.

2. AgniKula Kshatriyas (Varmas) - 

Andhra & Telugana.

3. Sambu(Agni)Kula Kshatriyas 

(Thigalas) - Karnataka.

4. PalliKula Kshariyas(Varmas) - 

Kerala.

5. SuryaKula Kshatriyas (Rajputs -

Varmas) - Rajesthan.

6. ChandraKula Kshatriyas (Rajputs - 

Varmas) - Gujarat.

7. PalliWarriors (Rajputs) - Pune.

8. DeepaKula Kshatriyas (Rajputs) - 

Kolkatta.

9. Palli(Agni)Kula Kshatriyas 

(Rajputs) - Orrisa.

10. AgniKula Kshatriyas - 

Delhi,Jaargant & Nepal.
-------------------------------
As Mentioned at the Top P10 Lines all 

are Pandava Clans Kshatriyas.
Their Pride God as Draupadi & Sri 

Krishanar Clans.
------------------------------
No Other Society has no Tribal God 

Draupadi Amman.
Kshatriyas Community Clans Of 

Pallis Only fit for Our Draupadi 

Amman.
------------------------------
A Proud To be an Tamil Kshatriya.
but,
I Top Pride in an Indian Kshatriyas.
--------------------------------
#VimalRathinamKshatriyas.
--------------------------------










சோழர்:

=============================
சோழர்களை(Chozhas) பற்றி கரந்தைச் செப்பேட்டுகளும் கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகள் கூறும் காப்புச் செய்யுட்கள் சொல்லும் சோழ்ர்களின் குடிப்பெயர்கள்
=============================
சோழர்களின் குடிப் பெயரே வர்மாக்கள் தான் யாரும் தங்கள் சாதி பெயரை தன் பெயரின் பின்னால் இட்டுகொள்ளாமல் போகவில்லை.
---------------------------------------------------
தங்கள் பெயரின் பின்னால் சோழ வம்சம் என்று இட்டுக்கொண்டது போல்  தங்கள் பெயரின் பின்னால் தங்கள் குடிப் பெயரை முடி சூட்டி கொண்டுதான் சென்று உள்ளார்கள்.
---------------------------------------------------
சோழர்களை(Chozhas) பற்றி கரந்தைச் செப்பேட்டுகளும் கரந்தைச் செப்பேட்டுத் தொகுதிகள் கூறும் காப்புச் செய்யுட்கள் சொல்லும் சோழ்ர்களின் குடிப்பெயர்கள்.
---------------------------------------------------
சோழ்ர்களின் குடிப்பெயர்கள்:
---------------------------------------------------
1. சுந்தரசோழன் இராசகேசரிவர்மன்(Rasakesari Varman)

2. உத்தமசோழன் பரகேசரிவர்மன்(parakesarivarman)

3. இராசராசசோழன்   இராசகேசரிவர்மன்(RasakesariVarman)

4. இராசேந்திரசோழன் பரகேசரிவர்மன்(ParakesariVarman)

5. வீரராஜேந்திரசோழன்  இராசகேசரிவர்மன்(RasakesariVarman)

6. குலோத்துங்கசோழன்  இராசகேசரிவர்மன்(RasaKesariVarman)
---------------------------------------------------
சோழர்கள் தாங்கள் என்று கொண்டாடும் மற்ற சமூகங்களுக்கு என் கேள்வி நீங்கள் வர்மாக்கள் குடிப்பெயர் கொண்டவர்களா..
இல்லை அதையும் வன்னியர்களின் குடிப்பெயர் இல்லை என்று சொல்லப்போறிங்களா வரலாற்று திருடர்களே.
---------------------------------------------------
அன்றிலிருந்து இன்று வரையிலும் வன்னிய பள்ளிகள் மட்டுமே வர்மாக்கள் ஆகும்.

இன்று அளவிலும் வர்மாக்களாக வாழ்ந்து வரும் கேரளா(Kerala) வர்மாக்களும்(varmas) வன்னிய பள்ளிகளே(VanniyaPallis).
---------------------------------------------------
ஆந்திராவில்(Andra) வாழும் வர்மாக்களும்(Varmas) பள்ளிகளே(Pallis).

வட இந்திய சத்ரிய வம்சமான  இராசப்புத்திர(Rajputs) வர்மாக்களும்(Varmas) பள்ளிகளே(Pallis).

வேறு யவருக்கும் இல்லாத குடிப்பெயர் கொண்ட ஒரே சத்ரிய(kshathriya) சாதியான வன்னிய பள்ளிகளுக்கு மட்டுமே உள்ள அதீத குடிப்பெயர் வர்மா (varmas)ஆகும்.

சத்ரியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
---------------------------------------------------

Thursday, February 25, 2016



சேரர்களின் தொன்மை: 

==================
மேலைக்கடலுக்கும்(அரபிக்கடல்),மேலைமலைத் தொடர்க்கும் (மேற்குதொடர்ச்சி மலைகள்) இடைப்பட்ட நிலப்பகுதி சேரநாடு எனப்படும். 
---------------------------------
தமிழ் பேரரசுகளை நிரல்படுத்தும் தமிழ் நூல்கள் சேர,சோழ,பாண்டிய மற்றும் பல்லவ எனச் சேரரை முதலில் வைத்துதான் குறிப்பிடுகின்றன.
---------------------------------
சேரரது அடையாளச் சின்னமாக வில்லையும், பனம்பூ மாலையையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
---------------------------------
பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றை நிரல்படக்கூறும் நூலாகும்.
---------------------------------
வடமொழியில் உள்ள இருக்குவேதம், தைத்திரியம், வால்மீகி இராமயணம், வியாசபாரதம்  ஆகிய நூல்களில் சேரர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
---------------------------------
தர்மனின் இராயசூய யாகத்திற்கு வந்திருந்த மன்னருள் சேரரையும் குறிப்பிட்டுள்ளது மகாபாரதம்.
---------------------------------
ஏன்னென்றால் சேரர்கள் அக்னிகுலத்தவர்கள் ஆயிற்றே , பாண்டவ புத்திரன் ஆனா தர்மனும் அக்னிகுலத்தில் இருந்து தோன்றிய சந்திரகுலத்தவன் ஆயிற்றே பிறகு எப்படி பந்தம் விட்டு போகும்.
----------------------------------
சேரன் செங்குட்டுவன்:
=================
தமிழையும்,தமிழனையும் பழித்து கூறியதால் வடநாட்டு மன்னன் கனக விஜயனை வென்று கல் சுமக்க வைத்த சேர வன்னிய மாமன்னன் சேரன் செங்குட்டுவன்.
----------------------------------
சேரன் செங்குட்டுவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன்.
----------------------------------
இமயம் சென்று கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வந்து பத்தினி வழிபாடு இயற்றியவன். 
----------------------------------
சேரன் செங்குட்டுவனின் சிறப்பை அறியத் துணைநிற்கும் இலக்கியச் சான்றுகள் பதிற்றுப்பத்து (41- 50), புறநானூறு
(369),சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்) ஆகியன ஆகும்.
----------------------------------



#சோழர்வரலாறு

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட
மூவேந்தர்களுள்
ஒரு குலத்தவராவர். 
மற்ற
இரு குலங்கள் சேரர்களும்
,பாண்டியர்களும் ஆவர்.
சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது...

சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப்
போன்று சோழர் என்பது பண்டைக்
காலந்தொட்டே ஆட்சி செய்து ஒரு குடும்பம் அல்லது குலத்தின்
பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது.

சேர, சோழ,
பாண்டியர் ஆகிய மூவரும்
சகோதரர்களே என்று கூறப்படுகி
றது..
இது மரபு வழிச்செய்தி வரலாற்று
இது எவ்வாறாயினும்


சோழ அரச
மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும்
பண்டைக்காலம்
முதலே இப்பெயராலேயே குறிப்ப
சோழர் குலம் வளம் பொருந்திய
காவிரி ஆற்றுப் படுகைப்
பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப்
பண்டைத் தமிழ் இலக்கியங்கள்
புகழ்ந்து பாடுகின்றன.
#அக்னி_புத்திரர்களுக்காகவும் காந்தமன்
என்ற மன்னனின்
வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின்
கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவிரி..

நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக
விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக்
காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து,
காவிரியாறு பெருக்கெடுத்து ஓடியது அரசன் முதல் சாதாரண உழவன்
வரை சோழநாட்டு மக்கள்
அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக்
கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய
நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம்
பெருமையுற்று விளங்கியதாயின
கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப்
பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர்.

பழைய சோழமண்டலப் பகுதிகளிலே,
உறையூர், பழையாறு போன்ற
இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின.

கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும்
வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம்,
பதினோராம் நூற்றாண்டுகள்
சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது.

கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி நிலவியது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும்
அதற்கு முந்திய
காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என
வரலாற்று ஆய்வாளரினால்
குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில்
#கரிகால்_சோழன் புகழ்
பெற்று விளங்கினான்.

9 ஆம் நூற்றாண்டுக்குப் பின்
வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில்,
முதலாம்
#இராஜராஜ சோழனும்,
அவனது மகனான முதலாம்
#இராஜேந்திர_சோழனும், இந்திய
வரலாற்றில் குறிப்பிடத்தக்க
மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம்,
பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில்,
சோழர் வலிமை மிகவும் உயர்
நிலையில் இருந்தது. அக்காலத்தில்
அந்நாட்டையாண்ட மன்னர்களில்,
முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும்
முதன்மையானவர்கள். அவர்கள்
காலத்தில் சோழநாடு படையிலும்,
பொருளாதாரத்திலும்,
பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும்
செல்வாக்குக் செலுத்தியது.
இவர்களுடைய
எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும்,

தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது வெற்றிக் கொண்ட இந்த இடங்களில் தங்கள்
#குலமான_பள்ளி_இன மக்களை குடியேற்றியதாகவும் வரலாற்றுக் சேப்பேடுகளில் அறிய முடிகிறது .

இராஜராஜன்,
தென்னிந்தியா முழுவதையும்
வெற்றி கொண்டதுடன்,
தெற்கே இலங்கையின் வடக்குப்
பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான்.
இராஜேந்திரன் காலத்தில் சோழர்
படை வட இந்தியாவிலுள்ள கங்கைக்கரை வரை சென்று பாடலிபுத்திர
மன்னனான மகிபாலனைத்
தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள
கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித்
தோற்கடித்ததாகவும் தெரிய
வருகிறது.

இந்திய அரசர்களுள் கடல்
தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள்
சோழர்களே ஆவர்.

தமிழ் மரபுகளின்படி பண்டைய
சோழ நாடு தற்காலத் தமிழ்
நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர்
மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தத
சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால்
பொதுவாக, மட்டமான நில
அமைப்பைக் கொண்டது.
காவிரி ஆறும், அதன்
கிளை ஆறுகளுமே சோழ
நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள்.
பொன்னி என்றும்
அழைக்கப்படுகின்ற
காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின்
பண்பாட்டில் சிறப்பான இடம்
இருந்தது.

ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும்
காவிரி வெள்ளம் சோழ
நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக் ஏதுக்களில் ஒன்றாக இருந்தது.
ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட
ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள்
எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர் கி.பி 200 ஆம்
ஆண்டுக்கு முன் சோழரின்
தலை நகரமாக விளங்கியது.
அகழிகளாலும், மதிலாலும்
சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக
இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும்
அழைக்கப்பட்ட
காவிரிப்பூம்பட்டினம் காவிரிக்
கழிமுகத்துக்கு அண்மையில்
அமைந்திருந்த ஒரு துறைமுக
நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம்
பட்டினமும்,
இன்னொரு துறைமுக நகரான
நாகபட்டினமும் சோழநாட்டின்
முக்கிய துறைமுக நகரங்களாகப்
பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பள்ளினா மக்கள் வாழ்ந்த
நகரங்களுகும், வணிக மையங்களாக
விளங்கிப் பல மதத்தவரையும் கவரும்
இடங்களாக இருந்தன.

பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத்
துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க
காலங்களைச் சேர்ந்த ரோமரின்
நாணயங்கள் பல காவிரியின்
கழிமுகப் பகுதிகளில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர்
ஒன்பதிலிருந்து பதினொன்றாம்
நூற்றாண்டு வரை சோழப்பேரரசி
தலைநகரமாக விளங்கியது.

விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத்
தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல
பெற்றான்.
பல்லவ நாட்டைக்
கைப்பற்றிய
பிறகு காஞ்சியை இரண்டாம்
தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ
அரசர்கள் அங்கிருந்தும்
ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்த
எனினும் தஞ்சையே முக்கிய
நகரமாக விளங்கியது.

சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன்
முதன்மை இடத்தை இழந்தது.
இராஜராஜனின் மகன் முதலாம்
இராஜேந்திரன் கங்காபுரி என்ற
புதியதோர்
திருநகரை உருவாக்கி அதைத்
தன்குல
பள்ளிஇனமக்கள் வாழும் இடத்திலே தலை நகராகக் கொண்டான். 

பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம்
நூற்றாண்டு வரை கங்கைகொண்ட
சோழபுரம் தலைநகரமாக இருந்தது.
'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய
ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய்
இராஜேந்திரனின்
பெருநோக்குக்கும்
பெருமைக்கும் சின்னமாய்
விளங்கி இருந்தது.

கும்பகோணத்தை அடுத்துள்ள
பழையாறையில்
ஒரு அரண்மைனையும், முதலாம்
இராஜராஜனுடைய
பெயரிலேயே
அருள்மொழிவர்மா
என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின்
தமக்கை குந்தவை பல காலம்
விரும்பித் தங்கியிருந்தாள் என்றும்
இராஜராஜனும் சிலகாலம்
தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக்
குறிப்புகள் கூறுகின்றன.

முதலாம் இராஜேந்திரன்
மதுரையில் மிகப் பெரியதோர்
அரண்மனை கட்டியதும் தவிர
உத்திரமேரூர் போன்ற
இடங்களிலும் சோழர் அரண்மனைகள்
இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம்.

சாளுக்கிய
சோழர்களின் காலத்தில், சிதம்பரம்,
மதுரை, காஞ்சிபுரம்
ஆகியவையும் மண்டலத்
தலை நகரங்களாக விளங்கின.

சோழர்களின் கொடி
புலிக்கொடி.
சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம்
அவர்களது கொடியிலும்
பொறிக்கப்பட்டது. இப்புலிச்
சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன்
தோற்றத்தைப்பற்றி ஒன்றும்
கூறவில்லை.
அவர்கள் சூடும் மலர்
ஆத்தி.

கி.பி 957 முதல் கி.பி 973
வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர
சோழனுடைய இரண்டாவது மகனாவான்.
சுந்தர சோழனுக்கும், சேர
நாட்டு வானவன் மாதேவிக்கும்
ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர்

"#அருண்மொழிவர்மன்".


#இராஜகேசரி_அருள்மொழிவர்மன்
என்ற பெயராலேயே தன் ஆட்சியின்
தொடக்க காலத்தில் இம்மன்னன்
அழைக்கப்பட்டான்.

இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ
சோழன் எனப்பட்டான்...!

(988)தந்தை இறந்ததும் இவன்
உடனடியாகப் பதவிக்கு வரவில்லை.

தன் குல சத்ரிய வம்சப்படி 12 வருடகால உத்தம
சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டான்..!

#விசயாலய_சோழன் நிறுவிய சோழ
அரசு இவன் காலத்திலும்...
இவன் மகன்
#இராஜேந்திர_சோழன் காலத்திலும்
மிக உயர்நிலை எய்தியது.

இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில்
மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

கி.பி.1014'ல்
கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில்
#ராஜராஜ_சோழன் இறந்தார்.

அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு#பள்ளிப் படைக் கோயில் கட்டப்பட்டது.
( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )...

கலிங்கத்தை வென்றான் கருணாகரத் தொண்டைமான்:

=================
----------------------------------
கருணாகரத் தொண்டைமான்
குலோத்துங்க சோழனது
படைத்தலைவன்.

தொண்டை நாட்டை
 ஆண்டு வந்த அரசர் குல மரபினன்.


கரிகாலனை யடுத்துத்
தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி
 புரிந்தோனாவன். 

இவன் பல்லவத் 
தொண்டைமான் குலத்தைச்
 சேர்ந்தவன். 
-------------------------------
பல்லவ தொண்டைமான் குலம் என்பது வன்னியர்
 குலத்தையே குறிப்பது .

இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் 
தலைநகராகக் கொண்டு தொண்டை
 நாட்டை அரசாண்டு வந்தனர். 
--------------------------------
கம்பர் சிலை எழுபதில் கூட ,
தொண்டைமான் பட்டம் பெற்ற
கருணாகரனை வன்னியர் குல
வேந்தன் என்றும் சம்பு குலத்தவன்
 என்றுதான் அழைத்து இருக்கிறார் . 
-------------------------------
கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு,
சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக
 பல்லவநாட்டை ஆண்ட, முதற்
 குலோத்துங்க சோழனுடைய 
தளபதி  (கி.பி. 1070-1118) கருணாகரத்
தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி
கம்பர் பாடியது இந்நூல். 

இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு,
அணிகலன்கள் மற்றும் ஒரு
 செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம்
 பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக
அறியப்படுகிறது. 
-------------------------------
சிலையெழுபது எனும் நூல்
மூவேந்தர் ஆட்சிக்குப் பின்
தோன்றிய நூல் அல்ல. 
சிலை
எழுபது கி.பி.12 ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தது.
சோழர் ஆட்சியின் போது எழுதப்பெற்றது இந்நூல். 

இந்நூல் வன்னியர்
குலத்தினராகக் குறிப்பிடுவது
பள்ளி  இனத்தவரையே. 
இந் நூலில்
 வன்னியர் பள்ளி நாட்டார்,வீர
பண்ணாடர் என்றும் தழலிடை 
அவதரித்தோர் என்றும் குறிப்பிடப் படுகின்றனர்.


மேலும் சம்பு முனிவர் யாகத்தில்
 தோன்றியவர்
வன்னியர் என்றும் கூறப்பட்டுள்ளது. 
-------------------------------
கருணாகர தொண்டைமான் வன்னியர்
குலம் என கம்பர் பாடிய பாடல் 
பின்வருமாறு : 
=================
சம்புகோத்திரச் சிறப்பு: 
--------------------------------
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ
 ழாதோர் சூத்திரந் தவறில்வன்னி
 தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர் 
மாத்திரை யளவுஞான
 மறைப்பின்மா
தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்புக்
 கூறுவ தெவரை மாதோ. 4 
-------------------------------
வன்னியர் குலச் சிறப்பு:
==================
விதிகுலத்தோர் சிறப்புறச்செய்
வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா
லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற்
சொலும்வணிக குலத்தோரும் நதிகுலத்தோர் களுமெங்ஙன்
நாட்டினிலொப் பாவாரே. 6
-------------------------------
வன்னியர் குலச் சிறப்பு:
==================
மறைக்குலத்தி லுதித்தாலென்
மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென்
நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென்
முயற்சிசெய்தா லென்வன்னி இறைக்குலத்தி லுதித்தவரே
இகபரனென் றியம்புவரே. 7 --------------------------------- 
சிலை எழுபது: 
===================
சோழர்கள் பல்லவர்கள் வழியில் வந்தோரே  என்றும் சிலர்
கருதுகின்றனர். 

தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக்
கொடிபற்றி வந்ததென்று
கூறப்படுதலாயினும், பல்லவம்
என்பதற்குத் தளிரென்பது
பொருளாகலானும் இவ்விரு
பெயரும் ஒருவரைக் குறிக்கும். 
--------------------------------- 
பல்லவர் இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர்
காஞ்சியிலுமாக இருந்து பல்லவர்
என்னும் பெயருடன்ஆட்சி
புரிந்தோராதல் வேண்டும்,
தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே
தொண்டையர், பல்லவரெனப்பட்டனர்.
இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி  என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்க வேண்டுமென்று
கருதச் செய்கின்றன. 
--------------------------------- 
தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும்,
ஒரு வகுப்பினரையே குறிப்பன.

இவை அனைத்தும் வன்னியர்கள் தம் உயிர்க்கு இணையாக
பாதுகாக்கும் பட்டங்கள்.
---------------------------------  
கருணாகரத் தொண்டைமான் பன்னிரண்டாம் நூற்றாண்டில்
செயங்கொண்டாரால் பாடப்பட்டது 
கலிங்கத்துப் பரணி. 

கலிங்க நாட்டு
 அரசன் அனந்தவர்மனை வெற்றி
கொண்ட போர் தான் கலிங்கப்போர்.


இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக
 விளங்கியது. 
----------------------------------
பரணி என்றால் போரில்
 ஆயிரம் யானைகளைக் கொன்ற
வீரனைப் பாடும் பாடல் என்று
பொருள்.

கருணாகர
 தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க
சோழன் அனந்தவர்மனை வென்ற
கலிங்கப் போரைப் பற்றியதே
கலிங்கத்துப் பரணி. 
----------------------------------
இவன் தொண்டை
நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன்
ஆவான்.பல்லவப் பெரு மன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட
 சிற்றரசர்களில் ஒருவனாய் 
நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். 

இந்நட்பு
 காரணமாகவே குலோத்துங்கன்
 காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். 
----------------------------------
கருணாகரன் 
கலிங்கப் போருக்குப் 
படைத்தலைவனாய்ப் புறப்படும்
போது, இவனுடைய தமையனும்
 குலோத்துங்க சோழனின் 
நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் 
குறிக்கப்படுகிறது.
----------------------------------
"தொண்டையர்க் கரசு முன்வ
ருஞ்சுரவி துங்க வெள்விடை உயர்த்த
கோன் வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு மால் களிற்றின் மிசை
கொள்ளவே" -- (பாடல். 364).

என்ற பாடலால் இதை
 அறியலாம்.
---------------------------------- 
தமையன் தொண்டை
 நாட்டை ஆள,
குலோத்துங்கனுக்குப்
 படைத் தலைவனாய் அமைந்த
கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி
செய்தான் என அறியலாம். 

இவன்
 வண்டையர்க்கரசு என்றே பல
 இடங்களில் குறிப்பிடப் படுகிறான்.


வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் 
சிறந்திருந்த நகரங்களில் ஒன்று.


இக்காலத்தில் சென்னைக்கு
அருகில் உள்ள வண்டலூர்
வண்டை நகராக இருக்கலாம்
எனக் கூறுகின்றனர்.

அக்காலத்தில் வண்டைநகர்,
மல்லை (மாமல்ல புரம்), காஞ்சி,
மயிலை (மயிலாப்பூர்) என்பன
சிறந்த பட்டினங்கள் எனவும்
அவை அடங்கிய நாடே
தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால்
அறியலாம். 
---------------------------------
" வண்டை வளம் பதி பாடீரே
மல்லையும் கச்சியும் பாடீரே பண்டை மயிலையும் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே" -
பாடல் . 534.
---------------------------------
கருணாகரன் வன்னியர் குலம்
என்று பாடிய கம்பர்.

வன்னியரான கருணாகரன்
கையில் எடுத்த வில்லை
 பற்றியும் பாடியுள்ளார். 
==================
வன்னியர் ஏந்திய வில்லே,வில்:
==================
மலையினிற் பொலங்கொண் மேரு
மலையன்றி

மலைமற் றுண்டோ

கலையினி லுரைப்ப வெண்ணெண்
 கலையன்றிக்

கலைமற் றுண்டோ 
அலையினி லுகாந்த நீத்தத்
தலையன்றி 
யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர்
சிலையன்றிச் 
சிலைமற் றுண்டோ ? (3). 
----------------------------------
வன்னியரின் புகழ்:
==================
 ஆந்துணையாம் வன்னியர்போ

லார்துணைப்பட் டாதரிப்பார்
 போந்தரிகள் வணங்குமிவர்

புகழ்சிறிதோ யாம்புகழ்தற்
கேந்துகர மிரண்டினும்பொன்
னிலக்கமறச் சொரியினுமிவ் வேந்தர்புகழ்க் கிணைநாவால்
 வேறுபுகழ் கூறேமால். (49). 
---------------------------------
குலத்தலைவர் படைச் சிறப்பு:
===================
விடையுடையார் வரமுடையார்

வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. (8). ------------------------------------
சிலை எழுபது வன்னியரை
மலையமன்னரெனவும்
பல்லவரெனவும்
வருணிப்பதுகவனித்தற்பாலது.


சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டை மண்டலத்திலாண்ட கிழியூர் மலையமான்களையும்
பல்லவ மரபில் வந்த காடவ
அரசர்களையுமே நூல் 
இவ்வாறு குறிப்பிடுகின்றது . 

இக்குறுநில மன்னர் வன்னியராயிருந்தமைக்குக் கல்வெட்டுச் 
சான்றுகள் ஆதாரமாயுள்ளன. 
----------------------------------
பரிசுதரற் சிறப்பு: 
==================
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்

தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்

பொற்றண் டிகபூடணத்தோடு கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான் கருணாகரத் தொண்டை வன்னியனே . (68) 
---------------------------------
சேரர்களும்,பல்லவர்களும் அக்னிகுல க்ஷத்ரியர்கள் என்பதும் அக்னிகுலத்தவர்கள் வன்னியர்கள் அனைவரும் அறிந்ததே. 

அக்னியே எம் க்ஷத்ரிய குடிகளின் மூத்தோன்.
---------------------------------

Sunday, May 10, 2015




முதலாம் குலோத்துங்க சோழனின் 30-வது ஆட்சியாண்டில்:


முதலாம் குலோத்துங்க சோழனின் 30-வது ஆட்சியாண்டில் (கி.பி.1099 - 1100) திருவக்கரையில் வாழ்ந்த வன்னியர்களுக்கு "மதுராந்தகப் பேரரையன்", "மருத கண்டன்" என்ற பெயர்கள் சோழர்கள் காலத்தியக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குடிப்பள்ளி செங்காட்டு மொழக்கநான மருதாந்தகப் பெரியரையன்"
"பனையூர் நாட்டு வெளுங்கம்பாடிக் குடிப்பள்ளி மருத கண்டன்"
(S.I.I. Vol. XVII, No.226), Thiruvakkarai.

Thanks To : Nmurali Naicker Anna.





பள்ளி குலத்தவன்:


"வன்னியர்", "வன்னிய நாயன்", "பள்ளி", "சம்பு குலத்தவன்" என்ற எல்லாப் பெயர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தையே குறிப்பதாகும் என்று சில "கள்ளர் சமூகத்து" நண்பர்களுக்கு தெரியவில்லை போலும். அவர்கள் "பள்ளி" வேறு "வன்னியர்" வேறு என்று தங்களுக்கு தானே கற்பனை கதைகள் எழுதி இன்பம் அடைகிறார்கள். ஆனால் அவர்களுடைய கூற்று தவறானதாகும்.
வன்னிய குல க்ஷத்ரியர்களுக்கு மேற்குறிப்பிட்ட "பெயர்கள்" பண்டையகாலம் முதல் வழங்கப்படுகிறது என்பதை "சோழர்கள் காலத்து கல்வெட்டு சான்றுகளுடன்" (புகைப்படக் காட்சியுடன்) இங்கே கொடுத்துள்ளேன். வினா தொடுப்பவர்களுக்கு அத்தகைய பழமையான சான்றுகள் ஏதும் கிடையாது என்பதே உண்மையாகும்.
கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சோழர்கள் காலத்து கல்வெட்டுச் சான்றுகள், வன்னிய குல க்ஷத்ரியர்களான "சம்புவராய மன்னர்களை" பற்றி குறிப்பிடுவதாகும். சம்புவராய மன்னர்கள் சோழ மன்னர்களை "தங்கள் வம்சத்தவர்கள்" (க்ஷத்ரியர்கள்) என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.
----- xx ----- xx ----- xx -----
"அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான
ராஜகம்பீர சம்புவராயனென்"
(S.I.I. Vol-I, No.74, Page-105), (Tirumalai, near Polur), (Raja Raja Chola-II, Year 1157-1158 A.D).
----- xx ----- xx ----- xx -----
"செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன்
சம்புவராஜன்"
(A.R.E. No.234 of 1910), (Padi, Chennai), (Tribhuvana Viradeva - Kulottunga Chola-III, Year 1216-1217 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஓய்மாநாட்டு முன்னூற்று செங்கேணி மிண்டன் சியன் அம்மை அப்பன் சம்புவராயனேன்" (Line 2 & 3).
"வன்னியனான அம்மை அப்பன்" (Line 10)
(S.I.I. Vol-XVII, No.205), (Thiruvakkarai, Villupuram), (Rajadhiraja Chola-II, Year 1165 - 1166 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முன்னூற்றூர் குடிப்பள்ளி செங்கேணி சம்புகராஜன் நாலாயிரவன் அம்மையப்பனான ராஜேந்திர சோழச் சம்புகராஜன்"
(A.R.E. No.422 of 1922), (Vayalur, Vandavasi), (Vikrama Chola, Year 1128 - 1129 A.D)
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முஞ்நூறான பண்டிதசோழச்
சருப்பேதிமங்கலத்து குடிப்பள்ளி செங்கேணி
சாத்தன் நாலாயிரவனான கரிகாலசோழச் செங்கேணி
நாடாழ்வான்"
(S.I.I. Vol-VII, No.854), (Gidangil, Tindivanam), (Vira Rajendra Chola, 1069 A.D)
----- xx ----- xx ----- xx -----

Thanks To : Nmurali Naicker Anna.