Tuesday, April 25, 2017

வேளிர்(அக்னி) இருக்கவேள் அரசர் || புறநானூற்று இலக்கியம்:


புறநானூற்று இலக்கியம் போற்றும் வேளிர்(அக்னி) இருக்கவேள் அரசர்: 
======
"நீயே, வடபால் முனிவன் தடவினூள்(அக்னிகுண்டத்தில்)தோன்றிச்,
செம்புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை, உவரா ஈகைத், துவரை ஆண்டு, 
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த 
வேளிருள் வேளே!"
======
புறநானூறு பாடல் குறிப்பிடும் வேளிர் அரசர்களின் தோற்றம்:
======
பலருக்கு புறம் 201 பாடல் என்றாலே பயம் வந்துவிடும். உடனே அவர்கள் அது "அக்னி குண்டம் இல்லை", நான்கு மலைகளின் இடைப்பட்ட பகுதி என்று சம்பந்தமே இல்லாத கருத்தை வலிந்து சொல்லுவார்கள்.

தடவு என்றால் "ஓமகுண்டம்" என்பது தான் பொருளாகும். பல சான்றுகள் க்ஷத்ரியர்கள் "ஓமகுண்டத்தில் இருந்து பிறந்தார்கள்" என்று சொல்வதால், தடவு என்பது "ஓமகுண்டமே" ஆகும்.

யாரவது நான்கு மலையின் இடையில் தோன்றுவார்களா ? சங்கத் தமிழ் புலவர் கபிலர் என்ன அறிவு இல்லாதவரா ?

புலவர் கபிலர் சொன்னது "நானோ அந்தணன், நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்று தான் சொன்னார்கள். அதாவது நான் "பிராமணன்", நீயோ "அக்னி குண்டத்தில் தோன்றிய க்ஷத்ரியன்" என்று தான் சொன்னார்கள் :-

"பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை 
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்"


பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறியவேண்டும்.
----------
நச்சினார்கிகினியர் மூல உறையின்படி, வேளிரென்பவர் கண்ணன் வழியினராயின், அவரை நாம் யாதவர் என்றே அழைக்கலாம்: என்னெனின்-- அப்பெருமான் அவதாித்த யது வம்சத்திலென்பது அனைவரும் அறிந்தது.
இனி, இவ்வேளிர் துவாரகையினின்று தென்னாடு புகுந்த பழைய யாதவராயின், அன்னோர்வரலாறு பண்டைத் தமிழ் நூல்களிற் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணன் காலத்தை அடுத்துத் தெற்கே வந்தேறியவராக நச்சினார்க்கினியர் கூறுதலின், அவர்கள் செய்தியை நன்குவிளக்கக்கூடிய அக்காலத்து நூல்கள் இருந்திருக்க வேண்டும்.
எனினும், பிற்பட்ட கடைச்சங்கச் செய்யுளில், இவ்வேளிர் வரலாற்றைக் குறிக்கும் செய்திகள் இல்லாமல் போகவில்லை.
கடைச்சங்கத்தவராகிய கபிலர் என்ற புலவர் பெருமான் இலங்காேவேள் என்ற சிற்றரசனை நோில் அழைக்குமிடத்தில்:-
"நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே"###
எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன.

பாடல் விளக்கம்: 
நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்தில் தோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பொிய கோட்டை உடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை-என்பதாம்.
இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையில் இருந்து வந்து தென்னாட்டை ஆண்ட சிற்றரச வகுப்பினர் என்பது நன்கு விளக்கம்.
--------
வடபால் முனிவன் ஓம குண்டத்தில் தோன்றிய வேளிர்கள்:
=====
The Sangam Age (2200 Years) "Purananuru" (poem-201) was written by the great poet "Kabilar" and the same has been scrutinized and verified by the eminent scholars, Dr. U.V. Swaminatha Iyer, Thiru. Devaneya Pavanar and Thiru. Natana Kasinathan Iyya. All the scholars had/have no objection to the "Purananuru-201 Poem".

Even, Thiru. Devaneya Pavanar in his book "Dravida Thai" (Page-55 to 57) clearly says that, the "Hoysala Kings" are the descendants of sangam age "Velir Irungovel". who came from the "Fire-pit" (Agni-kunda) and ruled the "Dwaraka". Thiru. Devaneya Pavanar further says that, the king "Vira Vallala Deva-III", who referred/mentioned in the "Arunachala Puranam" had ruled "Thiruvannamalai".

Therefore, "Devaneya Pavanar" agreed that, the Sangam Age "Velir Irungovel" descendants are "Hoysala Kings" and the "Vira Vallala Deva-III", who had ruled "Thiruvannamalai" belongs to "Vanniya Kula Kshatriya" (Agni Kula Kshatriya), since the 14th century A.D. Arunachalapuranam clearly says "Hoysala Vira Vallala Deva-III" as "Vanni Kulathinil Varum Manna" (வன்னி குலத்தினில் வரு மன்னா) and "Anal Kulathon" (அனல் குலத்தோன்). Meckenzie Manuscript "Yakshagana" also says the "Arunachalapuranam" 7th chapter story of Hoysala King "Vira Vallala Deva-III".

Appended below are the "Dravida Thai" of Thiru. Devaneya Pavanar (Page - 55 to 57) :

கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். 

மைசூரில் தற்போது ஹலெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.

நச்சினார்க்கினியர், 
"அகத்தியனார்........துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் "மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்" 

என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.

பண்டைச் சேரநாட்டின் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.

கடைக்கழக காலத்தில் மைசூர்த் துவரை நகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழ்ச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றிக் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையுறு செய்யவந்த ஒரு புலியை அவர் எவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டானென்றும் கூறப்படுவன் :

"நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்ட னுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒளியற் கண்ணிப் புலிகடி மா அல்" (புறம் : 201)

என்று கபிலர் பாடுதல் காண்க.

பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக் கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.

திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும்."
---------

1 comment:

  1. Hello There ,, I would like to connect with you regarding https://vanniyagounderusa.wixsite.com/vanniyar

    ReplyDelete