-------------------
மாமல்லன் நரசிம்மவர்மபல்லவன்:
=====
நரசிம்மவர்மபல்லவன் முதலாம் மகேந்திரவர்மரின் மகன்.
மாமல்லை என்னும் மாபெரும் கலை கூடத்திற்கு அடித்தளம் இட்டவன் இவனே.
அதனாலே இவன் மாமல்லன் என்னும் சிறப்புபெயரை பூண்டுகொண்டான்(1).
-------
வாதாபி தலைநகர சாளூக்கிய மைந்தன் புலிகேசியை வெற்றிக்கொண்டு வாதாபி கொண்டான் என்றும் நரசிங்க போத்தைரையன் என்னும் பட்டங்களால் மக்களால் போற்றப்பட்டவன். இன்றும் அவனுடைய 13 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு வாதாபியில் உள்ளது(2).
-------
இலங்கை மண்னை ஆண்ட மானவர்மனுக்கு போரில் துணையாக தன் கப்பற்படையை இருமுறை ஈழத்திற்கு அனுப்பியவன். நரசிம்மன் தன் படையை அனுப்பிய இரண்டு முறையும் அவன் வெற்றிக்கொண்டான். சிம்மரின் படை மாமல்லையை வந்த அடைந்த பிறகு சிறிது காலத்தில் நயவஞ்சக்கத்தால் மானவர்மன் தோற்கடிக்கப்பட்டான்.
அதே மானவர்மன் போரில் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியை வந்தடைந்த போது அவனுக்கு அடைக்களம் தந்தவன் நரசிம்மவர்மனே(3).
-------
நரசிம்மவர்மரின் படைத்தலவனாக இருந்தவன் காடுவெட்டி பரஞ்சோதி தொண்டைமான் ஆகும். இவர் தான் மகேந்திரவர்மரின் மருமகன் ஆவார். வாதாபி போருக்கு தலைமை தாங்கியவரும் அவரே. அப்போரில் இலங்கை மன்னன் மானவர்மனும் பங்கு பெற்று இருந்தான்(4).
-------
யுவன்சுவாங் (அ) இயன்சிங் என்னும் சீனநாட்டு எழுத்தாளன் நரசிம்மவர்மனின் காலத்தில் காஞ்சியை வந்து அடைந்தான் என்பது வரலாறு(5).
-------
நரசிம்மன் காலத்தில் மாமல்லை கலைகூடம் ஆக்கப்பட்டது.மகேந்திர வர்மரை போலவே குடைவரைக்கு பெயர் போனவன் நரசிம்மவர்மனே(6).
-------
காஞ்சி கயிலாசநாதனுக்கு இவன் பேரன் இரண்டாம் நரசிம்மன் ஆனா, இராஜ்சிம்மனே அடிதளமிட்டு கற்றளியை எடுபித்தவன். நரசிம்மவர்மனின் கால சிறபங்களே அதிகம் மாமல்லை ஆன தற்போதைய மாமல்லபுரத்தை தாங்கி நிற்கிறது(7).
-------
No comments:
Post a Comment