Tuesday, April 25, 2017

க்ஷத்திரியசித்தன் மகேந்திரபல்லவன்


 
-----------------
பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் காடவன் குணபரன் க்ஷத்திரியசித்தன் மகேந்திரபல்லவன்:
-------
வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரம் எடுத்தான் மகேயந்திரப்பள்ளி.



-------
பாடல் சொல்லும் விளக்கம்: மகேந்திரபல்லவன் சைவனானது பற்றியது.
=====
நாவுக்கரசர், சமணசமயத்தவனாக இருந்த மகேந்திரவர்மனைச் சைவசமயத்தில் சேர்த்தார் என்று கூறுவர் புலவர்கள். இதற்குப் பெரியபுராணச் செய்யுள் ஆதாரமாக உள்ளது. (செய்யுள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது).

ஆனால்,பெரியபுராணம் மகேந்திரன் பெயரை குணபரன் என்றும். பல்லவ அரசர்களின் பொதுப்பெயராகிய காடவன்,பல்லவன் என்னும் பெயர்களை குறிப்பிடுகிறது.


பாடலில், காடவ அரசன் சைவ சமயத்தைச் சேர்ந்தபிறகு பாலிப்புத்திரத்திலிருந்து சமணக்பள்ளியை(கோவிலை), (அப்பர் தரும் சேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த அதே சமணப்பள்ளியை) இடித்து அந்தக் கற்களைக் கொண்டுப்போய் திருவதிகைச் சிவன் கோயிலிலே குணபரவீச்சரம் என்னும் கோயிலை கட்டினான் மகேந்திரன் என்று பெரியபுராணம் குறிப்பிடுகிறது.




பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் குணதர வீச்சரம் என்றே கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பதே இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்ற பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன்,குணதரன் என்னும் இரண்டு சொற்களூம் ஒரெ அரசனைக் குறிக்கின்றன. 
குணபரன் மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்களில் ஒன்று ஆகும்.
ஆகவே, அப்பரால் சைவனாக்கப்பட்டவன் மகேந்திரவர்மன் தான் என்றும், அவ்வரசனே தனது சிறப்புப் பெயராகிய குணபரன்('குணதரன்') என்னும் பெயரால் குணதர வீச்சரம் கட்டினான் என்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று ஆகும்.

அய்யா மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய "மகேந்திரவர்மன்" என்னும் புத்தகத்தில் பக்கம் 37 மற்றும் 47'ல் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
---------
ஏன்னெவென்றால், ஒரு சில வரலாற்று திருட்டு பெருச்சாளிகள் பிற்காலத்துப் சோழ பேரரசுக்கு உட்பட்டு இருந்த காடவராய மன்னர்களே காடவர்களின் முதல் தோற்றம் என்று புலுவிக்கொண்டு சுற்றுவது தவறானது என்று சொல்லப்படுகிறது. 

ஏன் என்றால்? காடவன் என்பது பல்லவ அரசர்களின் பொதுப்பெயர் என்று மகேந்திரவர்மனை பற்றி பாடிய சேக்கிழார் பெருமான் தெளிவாக எடுத்துரைத்து உள்ளார் கி.பி 6ம் நூற்றாண்டிலே தன்னுடைய பெரியபுராணத்தில். 
இதிலிருந்து காடவ பள்ளிகளே பல்லவர்கள் என்று தெள்ள தெளிவாக தெரியவருகிறது. 

பிற்கால காடவ மன்னர்களில் சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த காடவன் கோப்பெருங்சிங்கன் சோழ அரசனான தன் மாமன் மூன்றாம் இராஜராஜனையே சிறைப்பிடித்தான் என்பது வரலாறு.
---------

No comments:

Post a Comment