Sunday, May 10, 2015






பள்ளி குலத்தவன்:


"வன்னியர்", "வன்னிய நாயன்", "பள்ளி", "சம்பு குலத்தவன்" என்ற எல்லாப் பெயர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தையே குறிப்பதாகும் என்று சில "கள்ளர் சமூகத்து" நண்பர்களுக்கு தெரியவில்லை போலும். அவர்கள் "பள்ளி" வேறு "வன்னியர்" வேறு என்று தங்களுக்கு தானே கற்பனை கதைகள் எழுதி இன்பம் அடைகிறார்கள். ஆனால் அவர்களுடைய கூற்று தவறானதாகும்.
வன்னிய குல க்ஷத்ரியர்களுக்கு மேற்குறிப்பிட்ட "பெயர்கள்" பண்டையகாலம் முதல் வழங்கப்படுகிறது என்பதை "சோழர்கள் காலத்து கல்வெட்டு சான்றுகளுடன்" (புகைப்படக் காட்சியுடன்) இங்கே கொடுத்துள்ளேன். வினா தொடுப்பவர்களுக்கு அத்தகைய பழமையான சான்றுகள் ஏதும் கிடையாது என்பதே உண்மையாகும்.
கிழே கொடுக்கப்பட்டிருக்கும் சோழர்கள் காலத்து கல்வெட்டுச் சான்றுகள், வன்னிய குல க்ஷத்ரியர்களான "சம்புவராய மன்னர்களை" பற்றி குறிப்பிடுவதாகும். சம்புவராய மன்னர்கள் சோழ மன்னர்களை "தங்கள் வம்சத்தவர்கள்" (க்ஷத்ரியர்கள்) என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.
----- xx ----- xx ----- xx -----
"அத்தி மல்லன் சம்புகுலப் பெருமாளான
ராஜகம்பீர சம்புவராயனென்"
(S.I.I. Vol-I, No.74, Page-105), (Tirumalai, near Polur), (Raja Raja Chola-II, Year 1157-1158 A.D).
----- xx ----- xx ----- xx -----
"செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன்
சம்புவராஜன்"
(A.R.E. No.234 of 1910), (Padi, Chennai), (Tribhuvana Viradeva - Kulottunga Chola-III, Year 1216-1217 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஓய்மாநாட்டு முன்னூற்று செங்கேணி மிண்டன் சியன் அம்மை அப்பன் சம்புவராயனேன்" (Line 2 & 3).
"வன்னியனான அம்மை அப்பன்" (Line 10)
(S.I.I. Vol-XVII, No.205), (Thiruvakkarai, Villupuram), (Rajadhiraja Chola-II, Year 1165 - 1166 A.D).
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முன்னூற்றூர் குடிப்பள்ளி செங்கேணி சம்புகராஜன் நாலாயிரவன் அம்மையப்பனான ராஜேந்திர சோழச் சம்புகராஜன்"
(A.R.E. No.422 of 1922), (Vayalur, Vandavasi), (Vikrama Chola, Year 1128 - 1129 A.D)
----- xx ----- xx ----- xx -----
"ஒய்மாநாட்டு முஞ்நூறான பண்டிதசோழச்
சருப்பேதிமங்கலத்து குடிப்பள்ளி செங்கேணி
சாத்தன் நாலாயிரவனான கரிகாலசோழச் செங்கேணி
நாடாழ்வான்"
(S.I.I. Vol-VII, No.854), (Gidangil, Tindivanam), (Vira Rajendra Chola, 1069 A.D)
----- xx ----- xx ----- xx -----

Thanks To : Nmurali Naicker Anna.

No comments:

Post a Comment