Thursday, February 25, 2016



சேரர்களின் தொன்மை: 

==================
மேலைக்கடலுக்கும்(அரபிக்கடல்),மேலைமலைத் தொடர்க்கும் (மேற்குதொடர்ச்சி மலைகள்) இடைப்பட்ட நிலப்பகுதி சேரநாடு எனப்படும். 
---------------------------------
தமிழ் பேரரசுகளை நிரல்படுத்தும் தமிழ் நூல்கள் சேர,சோழ,பாண்டிய மற்றும் பல்லவ எனச் சேரரை முதலில் வைத்துதான் குறிப்பிடுகின்றன.
---------------------------------
சேரரது அடையாளச் சின்னமாக வில்லையும், பனம்பூ மாலையையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
---------------------------------
பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றை நிரல்படக்கூறும் நூலாகும்.
---------------------------------
வடமொழியில் உள்ள இருக்குவேதம், தைத்திரியம், வால்மீகி இராமயணம், வியாசபாரதம்  ஆகிய நூல்களில் சேரர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
---------------------------------
தர்மனின் இராயசூய யாகத்திற்கு வந்திருந்த மன்னருள் சேரரையும் குறிப்பிட்டுள்ளது மகாபாரதம்.
---------------------------------
ஏன்னென்றால் சேரர்கள் அக்னிகுலத்தவர்கள் ஆயிற்றே , பாண்டவ புத்திரன் ஆனா தர்மனும் அக்னிகுலத்தில் இருந்து தோன்றிய சந்திரகுலத்தவன் ஆயிற்றே பிறகு எப்படி பந்தம் விட்டு போகும்.
----------------------------------
சேரன் செங்குட்டுவன்:
=================
தமிழையும்,தமிழனையும் பழித்து கூறியதால் வடநாட்டு மன்னன் கனக விஜயனை வென்று கல் சுமக்க வைத்த சேர வன்னிய மாமன்னன் சேரன் செங்குட்டுவன்.
----------------------------------
சேரன் செங்குட்டுவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன்.
----------------------------------
இமயம் சென்று கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வந்து பத்தினி வழிபாடு இயற்றியவன். 
----------------------------------
சேரன் செங்குட்டுவனின் சிறப்பை அறியத் துணைநிற்கும் இலக்கியச் சான்றுகள் பதிற்றுப்பத்து (41- 50), புறநானூறு
(369),சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்) ஆகியன ஆகும்.
----------------------------------

No comments:

Post a Comment