Chera Dynasty:
1.Athiyamān Nedumān Añji
அதியமான் பட்டத்தோடு ,
அதியமான் ஆண்ட தர்மபுரியில்
இன்றும் வன்னியர்கள் உள்ளார்கள்.
பொன்னியின் செல்வனில் கூட
#அதியமான் ,
#வல்வில்_ஓரி ஆகியோர்
சம்புவராயர் மன்னர்களின் முன்னோர் என்று கல்கி அவர்கள்
கூறுவார் படித்து பாருங்கள்..
சம்புவராயர் யார் என்றும் வட
தமிழகம் சென்று கேட்டால்
தெரியும் #வன்னியர்
என்று.
#சாம்புவரயார்கள் வம்சம் இன்றும் உள்ளது இவர்கள்
முன்னோர்களே
#அதியமான்கள்.
#சேரன்_தம்பி எனப்படும் அதியமான்
வன்னியர் என்று பொன்னியின்
செல்வன் கூட சொல்கிறது..
அடுத்து
#சேரரை_அக்னி_குலத்தவன் என்று திருவிளையாடல்
புராணம் , வில்லி பாரதம்
சொல்கிறது..
அனற் புதல்வன்
என்று சேரன் பேரூர் புராணத்தில்
குறிப்பிடப்படுகிறான்.
#வன்னியர் இனத்தார் விருதுப் பெயர்களில்
"#சேரநாட்டுக்கு_அதிபதி" ,
"#வயநாட்டுக்கு_அதிபதி"
போன்றவை அடக்கம்.
#சேரர்_வழிவந்த
#மழவர்_இனம் :
மழவராயர் என்ற
பட்டத்துடன் வன்னியர் பலர்
உண்டு.
அதியமான் நெடுமான் அஞ்சி “#மழவர்_பெருமகன்” எனக்
குறிப்பிடப்படுகிறான்.
#வள்ளல்_ஓரி மழவர் பெருமகன் எனக்
குறிப்பிடப்படுகிறான். (மழவர்
பெருமகன் மாவள் ஓரி)
அதியமான்
ஒருவர் “வஞ்சியர் குலபதி எழினி” எனக் கல்வெட்டொன்றில்
கூறப்படுள்ளார்.
இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான்
மரபினரே என்பது தெரிய
வருகிறது.
சேரரும் , அதியரும்
முறையே
“மழவர் மெயம்மறை ” என்றும் “மழவர் பெருமகன் ” என
அழைக்கப்பட்டனர் .
இதமூலம் மழவர்
என்பாரும் சேரர் குடியினர்
என்பது விளங்கும் .
சேரர் வில்
இலச்சினையைப்
பெற்றவர் .
கொல்லி மழவரும் வில் இலச்சினையை பெற்றவர் .
#வன்னியர்_பள்ளி இனத்தவரின் குலச்
சின்னமும் வில்தான்.
மன்னர் காலத்தில் விஜயதசமி நாட்களில்
வில் பயிர்ச்சி எடுப்பது
#வன்னியர்_மரபு .
சிலை எழுபதில் வன்னியர் எடுத்த வில்லே வில்
என்று வில்லின்
சிறப்பை பற்றி கம்பர்
பாடியுள்ளார் .
வன்னியர் ஏந்திய
வில்லே, வில்:
மலையினிற்
பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற்
றுண்டோ கலையினி லுரைப்ப
வெண்ணெண் கலையன்றிக் கலைமற்
றுண்டோ அலையினி லுகாந்த
நீத்தத் தலையன்றி யலைமற்
றுண்டோ சிலையினிற் றிறங்கூர் #வனியர் சிலையன்றிச் சிலைமற்
றுண்டோ ?
எனவே சேரர், மழவர்
என்பார் வன்னியர் இனத்தவர் .
சேரரின் கிளைக் குடியினராகக்
கருதப் பட்டவர்கள் மழவர்கள்.
இவர்கள் போர்க் குடியினர் மழவராயர்,மானங்காத்த மழவராயர்
போன்ற பட்டங்கள்
வன்னியருக்குண்டு.
எந்த வகையில்
பார்த்தாலும் இப்பட்டம்
நமக்கு சாலப்பொருந்தும்.
மழவராயர் = மழவர் +அரையர் மழவர் தலைவர் என்பது இதன் பொருள்.
மழவர் என்பவர் யார்? அவர்கள் ஒர்
போர்க் குடியினர். மழவர் தாயகம்
எது தெரியுமா? #மழகொங்கம்
எனப்பட்ட
பகுதி. இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.
இப்பகுதியில் தொன்றுதொட்டு
வாழ்ந்துவருபவர்கள் யார்?
#வன்னியர்கள்தான்.
தகடூர் மழவர்
என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரியை ஆண்ட அதியமான்
மழவர் மரபினன்.
மழபாடி - மழவர்
படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில்
சிறந்து விளங்கிய
பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே.
மேலும் சோழர்களோடும்,
பாண்டியர்களோடும் மண
உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம்
பெற்றோராய் மழவர்கள்
விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.
மழவர் அடிப்படையில் சேரர்
தொடர்புடையவர்கள்.
#சேரர்_குலச்_சின்னம் - வில்
#மழவர்_குலச்_சின்னம் - வில்
#வன்னியர்_குலச்சின்னம் -வில்.
மழவர்கள் யார் என்பதைக் குறித்து உண்மைக்கு மாறான
தகவல்களைப் படித்தவர்கள்
அதே மழவர் குறித்த சில
அறிஞர்களின் கருத்தை மட்டும் அறிய ஏனோ மறந்துவிடுகின்றனர்.
மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள்
பின்வருமாறு தம் நூல்களில்
கூறியுள்ளனர். வரலாற்றாசிரியர்
#திரு.ராசமாணிக்கனார் :அரியலூர்
மழவராயர்கள் வன்னியருள்
படையாட்சி மரபினர்.
போர்வீரர் குடியினராக
இருப்பதாலும்,படையாட்சி மரபினர்
என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர்
வழி வந்தவர் எனக் கருத
இடமுள்ளது.
"தமிழ்த்தாத்தா"
திரு.உ.வே.சாமிநாதையர்: மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட
போர்க்குடியினர். இவர்கள்
தற்போது வன்னியர் வகுப்பினராக
வாழ்ந்து வருகிறார்கள்.
இன்னொரு செய்தி :அறிஞரான
திரு.உ.வே. சாமிநாதையர்அவர்களின்
மூதாதையர்களில் ஒருவர்
வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட
அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான
வித்வானாகத் திகழ்ந்தவர். இன்றும்
தென்னார்க்காடு மாவட்டம் என சொல்லப்படும் கடலூர் ,
விழுப்புரம் பக்கத்தில்
மழவராயனூர்
என்று ஊரே இருக்கிறது .
இங்கே வாழ்பவர்கள் அனைவரும்
#படையாட்சி(வன்னியர் ) என பொதுவாக
அழைக்கப்படுவார்கள் .. ஆனால் ,
திருமணம் போன்ற
சுபகாரியங்களின்
பத்திர்க்கைகளில் தம்
பெயருக்கு பின்னால் மழவர் அல்லது மழவராயர்
என்று எழுதுவர் . அதுமட்டுமா ,
மழவரான சேர மன்னர்கள்
#அக்னி_குல_க்ஷத்ரியர் .. இன்று தமிழகத்தில்
#அக்னி_குலத்தவர்
என்று கூறப்படுபவரும்
#வன்னியர் ..
இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது .. எனவே அதியமான் பரம்பரையினர்
இன்றும் என்றும் வன்னியர்களே மற்ற
எந்த சாதிகாரரும்
உரிமை கொன்டாட முடியாது
தகடுர் சரித்திரம் என்றநூல்
அதியமானை வன்னியரின்
உட்பிரிவு #பள்ளி என்றும்
அக்னி குலத்தவர்
கூறுகிறது இதை இம்மக்களே
கூத்தாடி தன் பெருமைகளை விளக்கி வருகின்றன.
No comments:
Post a Comment