வன்னியர் :
வன்னியர் என்ற சாதி பெயரை 1900
பிறகே பள்ளிகள் உபயோகம்
செய்கின்றனர் என்றும் ,
அது எங்களை
போன்ற பல சாதிக்கு பட்டமாக
உண்டு என்பதையும் கூறும்
நண்பர்களுக்காக இந்த பதிவு .
தமிழகத்தில் நாங்களும் ஆட்சி
செய்தோம் ,
நாங்கள் ஆண்ட பரம்பரை
என்று பலர் கூறினாலும் விஜயநகர
அரசு தமிழகம் வரும் பொழுது
வன்னியர் மற்றும் முகலாயர் தவிர பிற
சாதியினர் பெரிய அளவில் ஆட்சி புரிந்தனரா என்று
அறியமுடியவில்லை .
வன்னியர்களின் சம்புவராய அரசு
அப்போது பேரரசாக இருந்தது .
முகலாயர் ஆட்சிக்கு அஞ்சி வடக்கு
நோக்கி நகர்ந்த மக்களுக்கு
“அஞ்சா புகலிடம்” அமைத்தான் சம்புவராயன்.
இனி செய்திக்கு வருவோம் .
இப்படி விஜயநகர பேரரசிற்கு முன்பே
க்ஷத்ரியனாக ஆட்சி செய்த பள்ளிகள்
“வன்னியர் “ என்று அப்போதே
வன்னியர் என்று அழைக்கபட்டமைக்கும்,விஜயநகர அரசின் காலத்தின் பின்பும் அழைக்க
பட்டமைக்கும் ஏராளமான ஆதாரம்
உண்டு .
விஜயநகர அரசிற்கு முன்பே
பள்ளிகள் வன்னியன் என்று அழைக்க
பட்டமைக்கு ஆதாரமாக சில
கல்வெட்டு செய்தி இதோ :
ஒரே அரச குலத்தவர் தங்களை பள்ளி
என்றும் வன்னியர் என்றும்
அழைத்துகொள்ளும்
குறிப்புகளை பதிகிறேன் படியுங்கள் :
Sambuvaraya Dynasty : (சம்புவராயர்ராஜ்ஜியம் ):
"முன்னூற்றூர்குடிப் பள்ளி செங்கேணி சம்புகராஜன்நாலாயிரவன்
அம்மையப்பனான
ராஜேந்திரசோழச்சம்புகராஜன்" (A.R.E.
அம்மையப்பனான
ராஜேந்திரசோழச்சம்புகராஜன்" (A.R.E.
No.422 of 1902).
"அத்திமல்லன்சம்
புகுலப்பெருமாளானராஜகம்பீரசம்புவராயனென்" (S.I.I. Vol-I,
No.74, Page-105).
"செங்கேணிஅம்மைய
ப்பன்வன்னியநாயன்
சம்புவராயன் (A.R.E. No.234 of 1910).
"வன்னியனானஅம்மைஅப்பந்
சம்புவராயன் (A.R.E. No.184 of 1904).
"ஸ்வஸ்திஸ்ரீ சம்புகுலச்சக்ரவத்தி
திருமல்லிநாதன்
சம்புவராயப்பெரு
மாள்திருவெங்கடம
ுடையானுக்கு"
(Tirupathi Devasthanam Inscription, Vol-I, No.183,
page-170).
"சம்புவர் குலபதி பன்னாட்டார் " (A.R.E.
No.276 of 1934-44).
(Raja Raja Chola-III, 1227 A.D, Valikandapuram,
Perambalur Distt)
"கங்காதேவிஎழுதிய 'மதுராவிஜயம்'
என்னும்நூல்
சம்புவராயர்களை 'வன்னியஅரசர்கள்'
என்று
குறிப்பிடுகிறது" (Madhuravijayam, S. Thiruvenkatachari,
year-1957, page-24).
இங்கு வன்னியர்கள் “பள்ளி ,
வன்னியநாயன் ,பன்னாட்டார் , மல்லன் “
என்றெல்லாம் அழைத்துகொள்ளும்
செய்தியை தந்துவிட்டேன் .
---------------------------------------------------------------------------------------------------------------------
Nilagangaraiyar Chieftains / Pangalanattu
Gangaraiyar Chieftains : (நீலகங்கரையர்
மற்றும் பங்களனாட்டு கங்கரையர்கள் ):
"ஆமூரிருக்கும் பள்ளி
ஆம்மூரிபிச்சநாத
ராஜேந்திரசோழ நீலகங்கரையன்" (A.R.E.
No.159 of 1918).
"தூசிஆதிநாயகன் நீலகங்கரெயன்
வன்னியநாயநான
உத்தம நீதிக்கண்ணப்பன்" (S.I.I. Vol-III, Part I
& II, No.36, Page-82)
இங்கு நீலகங்கரைய மன்னர்கள்
தங்களை பள்ளி , வன்னியன் நாயன்
என்று அழைத்து கொள்ளும்
செய்திகளை தந்துவிட்டேன் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிலைஎழுபது:
சிலைஎழுபது என்னும் கம்பரின்நூல் பன்னிரெண்டாம் நூற்றாண்டில்
கருணாகர தொண்டைமானை பற்றி
பாடப்பட்டது .
அப்பொழுதே வன்னியன் என்றும்,
வன்னிய குல சிறப்பு, சம்புகுல சிறப்பு என்றும் கம்பர் உரைக்கிறார் .
இதில் கருணாகரன் வன்னிய குலத்தவன் ,
வன்னியன், பன்னாட்டான்
என்றும் குறிக்கிறார் .
"சம்புகோத்திரச் சிறப்பு சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ
ழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி
தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவுஞான
மறைப்பின்மா தவங்கூர் சம்பு கோத்திர வரசர்க் கொப்புக்
கூறுவதெவரை மாதோ"
4 வன்னியர் குலச் சிறப்பு விதிகுலத்தோர் சிறப்புறச்செய்
வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினா
லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற்
சொலும்வணிக குலத்தோரும் நதிகுலத்தோர் களுமெங்ஙன்
நாட்டினிலொப் பாவாரே.
6 வன்னியர் குலச் சிறப்பு மறைக்குலத்தி லுதித்தாலென்
மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலத்தி லுதித்தாலென்
நிதிபடைத்தா லென்னான்காம்
முறைக்குலத்தி லுதித்தாலென்
முயற்சிசெய்தா லென்வன்னி இறைக்குலத்தி லுதித்தவரே
இகபரனென் றியம்புவரே.
அடுத்து விஜயநகர பேரரசின்
காலத்தில் வாழ்ந்த அரசர்களும்
தங்களை வன்னியன் பள்ளி என்று
அழைத்தவை :
Mazhavarayar / Kadanthaiyar Chieftains :(அரியலூர் மழவராயர் ):
"ராசராசவளநாட்டு
ராசெந்திரசொழவளந
ாட்டுள்மிழலை
நாட்டுள்ச்செர்ந
்தசொழவளமாகியதலத்துள் வன்னியர்
குல கிரிலதரிலநாட்டு
க்அதிபதியராகியகுண்ணத்தூர்க்கட்
டியப்ப
நாயினார்குமாரர்
நாகயமளவாரயநயினாரவர்களும்
பென்னாடகம்பிரளை யங்காத்தகடந்தையார்கொத்திரத்தில்
பொன்னளந்தகடந்தை
குமாரன்பெரியனாய
க்கநயினாரவர்களும்
நம்முடகுண்ணத்தூ
ர்காணிக்கும்பென ்னாடககாணிக்கும்"
(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1),
1511 A.D.).
"மகாராஜராஜஸ்ரீ வன்னியகுல
சந்திரன் மகிதலத்தினில்
இந்திரன்"
(அரியலூர்அரசர்வ
ிஜயஒப்பிலாதமழவராயர்)
(இராமதாசபரமபாகவதர்,
கோதண்டராமசுவாமிசதகம்,
பாடல்-101)
இங்கு மழவராயர் வன்னியர் என்று
அழைத்து கொண்டு செய்தி போக ,
ராமசந்திர கவிராயர் என்னும்
வெள்ளாளர் மழவராயர் மன்னர் மீது
உள்ள கோவத்தில் பள்ளி என்று
திட்டும் செய்தியையும் பதிகிறேன் ..
"சும்மாபோகும் பள்ளிக்கேன்
அதிவீரபூபனெனும்பட்டந்தானே"
(இராமசந்திரகவிராயர்அரியலூர்
அரசரை "பள்ளி" என்றுகுறிப்பிடும்பாடல்),
(தனிப்பாடல்திரட்டு).
ஆனாலும் முதலியார் முதல்
பிராமணர் வரை பலர் அரியலூர்
மழவராயர் மன்னரின் கொடை
வளத்தை பாராட்டியதும் பல
பாடல்கள் உண்டு.
கிபி 1633 இல் இன்றைய சேலம்
மாவட்டத்தில் ஏற்ப்பட்ட கலவரம் பற்றிய
செப்பேடு
(பன்னாட்டார்பட்டயம், 1633
A.D) அன்று வெளியிடப்பட்டது .இது
அப்போது நடந்த இடங்கை வலங்கை
கலவரத்தை பற்றி கூறும் செப்பேடு .
அப்போது அரசராக இருந்த
கம்பலராசேவரன் வேங்கடபதி
நாயக்கரும் ,
தளபதி பெத்தண்ண
நாயக்கரும் நடுவர்களாக இருக்க
திரு.நாராயணசாமி ஐய்யர் அவர்கள்
வன்னியர்கள் பற்றி கூறும்பொழுது
"வில்வீர பராக்கிறமரான
ருத்திரப்பள்ளியார்
குமாராகிய நீலகங்கன்"
என்றும் ,
ருத்திர பள்ளியார் வாரத்தில் வந்த
1.நீலகங்கன்
2.கெங்கை பரிபாலன்
3.வச்சிபாகன்
4.பரசுராமன்
5.சம்புகுல வேந்தன்
என்ற ஐவர் மரபில் வந்த
1.பார்ப்பள்ளி
2.துட்டபள்ளி
3.சிஷ்டபள்ளி
4.வன்னியபள்ளி
5.அரசப்பள்ளி
என்று ஐவகை பள்ளிகள் என்று
வன்னியர்களை குறிப்பிடுகிறார்.
இன்றும் அரசபள்ளி என்பது வன்னிய
கவுண்டர்களில் பெரும்பான்மையாக
பார்க்கப்படும் பிரிவாகும் .
இவ்வாறு வன்னியர்கள் பள்ளிகள்
என்று விஜயநகர அரசு காலத்திற்கு
முன்பும் பின்பும் வன்னியர்கள்
அழைக்க பட்டுள்ளனர் .
இருப்பினும்
ஆங்கிலேயர் காலகட்டத்தில்
வெள்ளாளர் சில இடங்களில் வன்னியர்களின் நிலங்களை பார்ப்பனர்
உதவியுடன் திருடிய செய்தியை
அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர்
வெள்ளையர் காலத்திலேயே பதிவு
செய்துள்ளார் .
அப்போது வெள்ளாளர் களிடம்
நிலத்தை இழந்த வன்னியர்கள்
வெள்ளாளர்கள் நிலத்திலேயே
வேலையும் செய்துள்ளனர் சிலர் .
இதுதான் வன்னியர்களின் “பள்ளி ”
என்னும் சொல் வறுமையை உணர்த்தும் சொல்லாக பார்க்கப்பட்டு
பின்பு இழிசொல்லாக
மாற்றப்பட்டது .
ஆங்கிலேயர் காலத்தில் தான் சாதி
வாரியாக மக்கள் பதியப்படும்போது , வெள்ளாளர்கள் ஆதிக்கத்தில் இருந்த வன்னியர்கள் பள்ளி என்றும் , சூத்திரர்
என்றுமே பதியபட்டனர் .
இல்லை ,நாங்கள் வன்னியர் என்று அழைக்கப்பட
பட்டவர்கள் என்றும், அரச குலத்தவர்
என்றும், விஜயநகர அரசிற்கு முன்பே
ஆட்சி புரிந்தவர்கள் என்றும் வழக்கு தொடுத்து
“வன்னியர் குல சத்ரியர் ”
என்று அரசாணை பெற்றோம் .
இது கெஞ்சியும் வாங்கியது அல்ல ..
நாங்களாக எழுதி கொண்டதும் அல்ல.
உண்மையிலேயே பள்ளிகள்
வன்னியர் என்று அறியப்பட்டமையாலயே , வன்னிய குல சத்ரியர் என்று
நீதிமன்றம் அரசாணை தந்தது .
வழக்கில் வென்றோம் .
சாதிகளை பற்றி எழுதிய எட்கர்
தர்ஸ்டன் அவர்களும் பள்ளி அல்லது
வன்னியன் என்றே வன்னியர்களை
பற்றி எழுதுகிறார் .
ஆகவே இரண்டுமே எங்களை குறிப்பதே .
சரி இப்போது வன்னியர் என்ற சொல்
எப்போது பிற சாதிக்கு வந்தது .
அல்லது எப்போது பிறர் பயன்படுத்த
துவங்கினர் என்பதை பற்றி ஒரு
செய்தி உள்ளது .
“வன்னியர்” என்னும் தொகுப்பில்
“இலங்கைப்பல் கலைக்கழக வரலாற்று
விரிவுரையாளர் – கலாநிதி சி.
பத்மநாதன்” அவர்கள் தெளிவாக
குறிபிட்டுள்ளார் .
வன்னியர்களின்
அழிவிற்கு பின்பு அவர்களை வெற்றி கொண்டதனால் விஜயநகர
அரசும், அவர்களின் பிரதிநிதியான
சூரக்குடி அரசு மற்றும்
சேதுபதிகள் வன்னியர் பட்டம்
தங்களின் மெய்கீர்த்தியில்
பயன்படுத்தினர் என்று .
இதோ கீழே படிக்கவும் .
"சோழப்பேரரசர் காலத்துக் கிழியூர்
மலையமன்னர், பங்கல நாட்டுக் கங்கர்,
சாம்புவராயர் ஆகிய மூன்று
குலங்களைச் சேர்ந்த குறுநில
மன்னர்கள் வன்னிய நாயன் என்ற விருதினைப் பெற்றிருந்தனர்
என்பது தெளிவாகின்றது.
கம்பண்ண
உடையார் தென்நாட்டின்மீத படையெடுத்துவரப்
புறப்பட்டபோது தெற்கிலுள்ள
அரசுகளில் வன்னி நாட்டரசர்களையும் அடக்குமாறு
புக்கராயர் பணித்ததாக மதுரவிஜயம்
என வழங்கும் கம்பராய சரிதம் கூறும்.
விஜய நகரப் பேரரசர்களின்
மெய்க்கீர்த்திகளிலே:
“பதினெட்டு
வன்னியரைப் புறங் கண்டமை” பற்றிக் கூறப்படுகின்றது.
கம்பண்ண
உடையார் வன்னி அரசர்கள்மீது பெற்ற
வெற்றிகளே இக்கூற்றுகளுக்க ஆதாரமாக இருந்திருக்க
வேண்டும்.
மக்கென்ஸி என்பவர் தேடிச் சேர்த்த
வரலாற்று மூலங்களிலே
திருவிடைச்சுரம்
கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்த
கந்தவராயன், சேதுராயன் என்ற
வன்னிய அரசர்களின் வரலாறு கூறும் பிரதியொன்று
காணப்படுகின்றது. இவ்விருவரும்
நுழைவதற்கரிய அரண்கள் மிகப்
பெரியதாய் அமைந்த
திருவிடைச்சுரம்
கோட்டையிலிருந்து ஆண்ட காலத்தில் விஜய நகர அரசன்
கிருஷ்ணதேவராயர் அவ் வன்னியரின்
நாட்டை அடக்குவதற்கென ஒரு பலம்
மிக்க படையை அனுப்பி யிருந்தார்.
பல மாதங்களாகப் போர் நிகழ்ந்தும்
விஜய நகரப் படைகள் அக் கோட்டையைக் கைப்பற்ற
முடியவில்லை. எனவே விஜய நகரப்
படையில் வந்த பொழிகர்
சூழ்ச்சியினாற் கந்தவராயனைக்
கைப்பற்றினார்கள். அதனை அறிந்த
சேதுராயன் பல நாட்களாகக் கடும் போர் நடத்தினான். எனினும் விஜய
நகரப் படைகள் கோட்டையைத
தகனர்த்துச் சேதுராயனைக்
கொன்றன. அதன் பின் வன்னியராண்ட
திருவிடைச்சுரம் விஜயநகர மன்னர்
வசமிருந்தது.
பதினைந்தாம். பதினாறாம் நு}
ற்றாண்டுகளில் தென்னாட்டை
ஆண்ட சில குறுநில மன்னரின்
ஆவணங்களில் வன்னியர்பற்றிக்
குறிப்புக்கள் வருகின்றன.
“சூரைக் குடியை ஆண்ட
சூரைக்குடி யரசு பள்ளிகொண்ட
பெருமாள் என வழங்கிய அச்சுதராய
விஜயாலய முதுகு புறங் கண்டான்
என்ற வாசகம் வருகின்றது.
திருவரங்குளத்தைச் சேர்ந்த ஆலங்குடியில் உள்ள
கல்வெட்டொன்றில் அழுந்து}ரரசு
திருமலைராசப் பல்லவராயர்
பதினெட்டு வன்னியர் கண்டன் எனக்
கூறப்பட்டுள்ளான்.
இராமநாதபுரத்துச் சேதுபதிகளின் பட்டயங்களிலும் இதேபோன்ற
குறிப்புக்கள் வழமையாக
வருகின்றன.
எனினும் இக் குறு நில மன்னர்களின்
மெய்க்கீர்த்திகளிற் கூறப்படுவன
ஆதார பூர்வமானவையென்ற கொள்ளமுடியாது.
“விஜய நகர
மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில்
வருகின்ற வன்னியர் பற்றிய வாசகங்களை இராமநாதபுரத்துச்
சேதுபதிகள், சூரைக்குடி அரசர்
முதலானோர் தத்தம் ஆவணங்களிலே
சேர்த்துக் கொண்டார்கள்.”
கிருஷ்ண தேவராயரின்
காலமளவிலே தொண்டை மண்டலத்து வன்னிமைகள்
அழிந்துபட்டன.
இவ்வாறு கூறுகிறார் .
குறிப்பு :
இனியும் எங்களுக்கும் வன்னியர்
பட்டம் உண்டு என்றும், அது நீங்கள்
ஆங்கிலேயர் காலத்தில் தான்
உங்களுக்கு வந்தது என்றும்
சொல்பவர்கள் ,
1.விஜயநகர பேரரசிற்கு முன்பே
வன்னியன் என்று நீங்கள் அழைக்க
பட்டமைக்கு கல்வெட்டு ஆதாரம்
தரவும் ?
2.விஜயநகர அரசு தமிழகம்
வரும்பொழுது நீங்கள் எங்கு என்ன பெயரில் ஆட்சி செய்து
கொண்டிருந்தீர்கள் .
அவர்கள் உங்கள்
சாதிதான் என்பதற்கு என்ன ஆதாரம் ?
பள்ளிகள் விக்கிரம சோழன்
காலத்திலேயே “தம்பிரான் ,
தேவர்களின் தேவர் ” என்ற பட்டத்தை
புனைந்தது திட்டக்குடி
கல்வெட்டு உறுதி செய்கிறது.
No comments:
Post a Comment