Friday, March 20, 2015



அக்னி குலமே முதல் குலம். அக்னி குலத்தில் இருந்தே சூரிய, சந்திர, தீப, இந்திரகுலங்கள் தோன்றியது . 

இந்து மதத்தை பொருத்தவரை அக்னியே முதல் கடவுள். 
எனவே தான் இந்துக்கள் சடங்குகளில் அக்னி முக்கிய இடத்தை வகிக்கிறது . 
யாகம் வளர்த்து அக்னியை வழிபட்டு தான் எல்லாம் சடங்குகளும்நடைபெறுகிறது. 
அக்னி மீது செய்யும் சத்தியம் கூட மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவ்வாறு அக்னி சாட்சியாக, அக்னியே முதலாக போற்றப்படுகிறது.

வன்னியர்கள் அக்னி குல க்ஷத்ரியர்கள் என்பதை இந்து மத புராணங்களில் ஒன்றான#அக்னி_புராணம் (வன்னிய புராணம்) உறுதி செய்கிறது .

எவராலும் அழிக்கமுடியாத வரங்களை பெற்ற ஒரு அரக்கனால் தேவ முனிகள்பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் தேவமுனிகள் சிவ பெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்போது சிவ பெருமான் வடக்கே தவமிருந்த சம்புமாமுனிவரை அழைத்து யாகம் வளர்க்க சொல்கிறார். சிவ பெருமானின் ஆணைப்படியே சம்பு மகரிஷியும் வன்னி மரத்தின் குச்சிக்களை கொண்டு யாகம்வளர்க்கிறார். சிவ பெருமானும் பார்வதி தேவியும் செங்கழுனீரை ஆவுதி நீராய் தர,அதை யாகத்தில் இட்டதும் ஒரு மாவீரன் கையில் வில் அம்பு மற்றும் வாளோடும்பூணூல் அணிந்து கொண்டு குதிரை மீது அமர்ந்தவாறு தோன்றுகிறார்.
இவர் வீரவன்னிய மகாராசன் என்றும் ருத்ர வன்னிய மகாராசன் என்றும்அழைக்கப்படுகிறார். இவரே பிறகு அந்த அரக்கனை அழிக்கிறார். அந்த வெற்றிக்கு பரிசாக இந்திரன் தனது மகள்களை வீர வன்னிய மகாராசனுக்கு கட்டி தருகிறார்.

ருத்ர வன்னிய மகாராசன் தென் இந்தியா முழுவதும் ஆட்சி செய்கிறார்.
இவரின் நான்கு மகன்கள் ஏற்படுத்திய சாம்ராஜ்ஜியங்களே
சேர, சோழ, பாண்டிய,பல்லவ சாம்ராஜ்ஜியங்கள். இதன் பொருட்டே வன்னியர்கள் முதல் குலமான அக்னி குலத்தினை (சேர,பல்லவ) சேர்ந்தவர்கள் என்று கூறும் போதே அவர்களில் இருந்து தோன்றியகுலங்களே சோழ (சூரிய,இந்திர குலம்), பாண்டிய ( சந்திர குலம்) என்பதுதெளிவாகிறது.

இவை மட்டும் இல்லாமல் வன்னியருள் தீப குலத்தினை சேர்ந்தவர்களும் உண்டு . மேலும் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் அனைவரும் க்ஷத்ரியர்கள் என்று அனைவரும் அறிவர். தமிழ்நாட்டின் ஒரே க்ஷத்ரியர்களும்வன்னியக்குல க்ஷத்ரியர்களே என்பதையும் அனைவரும் அறிவர்.
எனவே ,வன்னியர்களே சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

No comments:

Post a Comment