1987 போராட்டத்தின் வீர வரலாற்றின்
சில துளிகள்
நெஞ்சில் அக்னி சட்டி இருக்க
சட்டையை கழற்றி காண்பிக்கும் இந்த
லோகோவை ஃபேஸ்புக்கில் சில
இடங்களில் பார்த்திருப்பீர்கள்,
பார்க்கும் போது என்னடா இது
சாதிவெறியர்கள் நெஞ்சில் சாதி சங்க சின்னத்தை
குத்தியிருக்கிறார்களே என்று
நினைத்திருப்பீர்கள், ஆனால்
உங்களுக்கு தெரியுமா இதன் பின்
ஒரு வீரமான தியாக
வரலாறு உள்ளது என்று.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
இருந்த 9 சாதிகள் 10%க்கும்
குறைவான மக்கள்
தொகையை கொண்டிருந்தாலும்
பிற்படுத்தப்பட்டோர்
இடஒதுக்கீட்டில் கிடைத்த 50%க்கும் மேற்பட்ட
இடங்களை ஆக்கிரமித்து இருந்தன.
இதனால் பிற்படுத்தப்பட்டோரில்
பெரும்பாண்மை சாதியாக இருந்த
வன்னியர்களுக்கு கல்வி வேலை
வாய்ப்பில் இடங்கள் கிடைக்கவில்லை,
எனவே மக்கள்
தொகைக்கு ஏற்ப
இடஒதுக்கீடு வேண்டும்
என்று சட்டநாதன் கமிஷன்
பரிந்துரைகளையும் மண்டல்
கமிஷன் பரிந்துரைகளையும் அமல் படுத்த கோரி வன்னியர் சங்கம்
தலைமையில் வட தமிழகத்தில்
பெரும்பாண்மையாக வாழும்
வன்னிய மக்கள் மருத்துவர்
இராமதாசு தலைமையில் செப்டம்பர்
17, 1987 முதல் ஒரு வார சாலை மறியல்
போராட்டத்தை நடத்தினார்கள்.
பல
மாதங்களுக்கு முன்பே அரசுக்கும்
, ஊடகங்களுக்கும்
அறிவித்து பல்வேறு வகையான
போராட்ட வடிவங்களுக்கு பின் கடைசியாக நடந்த போராட்டம் அது.
சாலைமறியல் ஆரம்பமான
அன்றே எம்.ஜி.ஆர் தலைமையிலான
அன்றைய
அரசு அடக்குமுறையை ஏவி
விட்டது, முதல்
நாளே சாலை மறியல் போராட்டம் செய்த மக்களை போலிஸ் சுட
ஆரம்பித்தது, ஆனால்
துப்பாக்கிக்கு பயப்படாத மக்கள்
மீண்டும் மீண்டும்
சாலைகளை மறித்துக்கொண்டே
இருந்தனர்.
துணை ராணுவப்படை
அழைக்கப்பட்டது,
ஏற்கனவே போலிஸ்
போராட்டக்காரர்களை சுட்டு
கொன்றிருந்தாலும்
எதிரி நாட்டு படைகளுடன் போரிட போவது போல
முழு ஆயுதம் தரித்து வந்து நின்ற
ராணுவப்படையை ஒற்றை
துப்பாக்கி கூட இல்லாமல் நின்ற
மக்கள் "சுடுறா சுடு"
என்று பட்டனை கழற்றி நெஞ்சை துப்பாக்கிக்கு காண்பித்து
நின்றார்கள்.
போராட்டத்தை கட்டுப்படுத்த
முடியாததை தனக்கு நேர்ந்த
அவமானமாக கருதும் அரசாங்கம்
போராட்டத்தை சாதிக்கலவரமாக
மாற்றுகிறது,
இது குறித்து அப்போது உளவுத்துறை அதிகாரியாக
பணியாற்றிய மோகன்தாஸ் அவர்கள்
பின்னொரு காலத்தில் குமுதம்
ரிப்போர்ட்டரில்
உளவுத்துறை பணிக்கால
நினைவுகள் பற்றிய ஒரு தொடரில் இதை குறிப்பிட்டுள்ளார் அதில்
வன்னியர் சங்க
போராட்டத்தை கட்டுப்படுத்த
முடியாததை தனக்கு நேர்ந்த
அவமானமாக அரசாங்கம் கருதியது,
அதையடுத்து தலித் மக்களுடன் இணைந்து செயல்பட்டோம்,
உங்களுக்கு வேண்டியதை
எடுத்துக்கொள்ளுங்கள் என்று அந்த
மக்களிடம் கூறினோம் என்றார்
(படித்ததை வைத்து நினைவில்
இருந்து எழுதுகிறேன், வார்த்தைகள் வேறாக இருக்கலாம்
ஆனால் சொல்லவந்தது இது தான்).
வன்னியர் சங்க
போராட்டத்தை சாதிக்கலவரமாக
மாற்றியதை தான் நாசூக்காக
கூறுகிறார்.
அரசாங்கமும் போலிசும்
இப்படி நடந்து கொள்கிறதென்றால்
திமுகவும் கருணாநிதியும்
இழைத்த துரோகம்
சொல்லி மாளாது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எதிர்கட்சி ஒன்று
ஆதரவளித்திருக்க வேண்டும்
அல்லது ஒதுங்கி நின்றிருக்க
வேண்டும், பல
மாதங்களுக்கு முன்பே வன்னியர்
சங்கம் தனது போராட்ட தேதிகளை அறிவித்திருந்த
போதும் அதே செப்டம்பர் 17ம்
தேதி தான் புதிதாக
கட்டப்பட்டிருந்த
அண்ணா அறிவாலயத்தை திறப்பேன்
என்று அடம்பிடித்தார் கருணாநிதி,
போராட்ட குழுவினர்
கருணாநிதியின்
கவனத்திற்கு சாலை மறியல்
போராட்டம்
பற்றி எடுத்து சொல்லியும் அடம்
பிடித்து அதே நாளில் திறக்கிறேன் என்று சாலைமறியல் போராட்டம்
நடக்கும் நாளில் தமிழகம்
முழுவதுமிருந்த திமுகவினர்
வடமாவட்டங்கள்
வழியே சென்னை நோக்கி வந்தனர்.
இது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்
சங்கத்தினருக்கும் திமுகவிற்கும்
மோதலை உண்டாக்கியது.
எங்கள் அப்பன் ஆத்தா வைத்திருந்த
மரங்களை எங்கள்
இனப்போராட்டத்திற்காக சில
மரங்களை வெட்டியதற்கு
எங்களுக்கு கிடைத்த பெயர்
"மரம்
வெட்டி"
ஆனால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 உயிர்கள்
குறித்து யாருக்கும் எந்த
அக்கறையும் இல்லை. ஆனால் அந்த 21
உயிர்கள் தங்கள் இனத்திற்காக சிந்திய
குருதியும் உயிரும் தான்
இன்று எங்கள் கைகள் கம்ப்யூட்டர் மவுஸ் பிடிக்க காரணமாக
இருந்தது.
21 பேரின் உயிரும் குருதியும்
மரவெட்டி கையில் மவுஸ் ஆக
மாறியுள்ளது.
வீரமான தியாக வரலாற்றை மறக்க மாட்டோம்!
துரோகிகளை மன்னிப்போம் ஆனால் மறக்க மாட்டோம்!
No comments:
Post a Comment