Friday, February 26, 2016

காடவர்கோன் கழற்சிங்கன்  நந்திவர்மன் III ( கி.பி. 846 - 869):
--------------------------------------------------------------------------------------------

காடவர்கோன் கழற்சிங்கன்

நந்திவர்மன் III ( கி.பி. 846 - 869):
===============
கதம்ப நாட்டு இளவரசிக்கும் நந்திவரமனுக்கும் பிறந்தவன்  மூன்றாம் நந்திவர்மன்.
------------------------------

நந்திகலம்பகத்தின் புகழ்மிகு  நாயகன்.  சிறந்த அறிஞன்.
------------------------------
"பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி" என

நந்திகலம்பகத்தால் புகழப்பட்டவன்.
------------------------------
சிறந்த சிவநெறிச் செல்வன். "சிவனை முழுவதும் மறவாத

சிந்தையான்" என  நந்திகலம்பகத்தால் போற்றப்பட்டவன்.

"சிவனது திரு அடையாளம் நெற்றியில் கொண்ட நந்திவர்மன்"

என வேலூர்ப்பாளைப்பட்டயம்  இவனைப் புகழ்கிறது.
------------------------------
"காடவர்கோன் கழற்சிங்கன்" எனப் பெரியபுராணத்தால்

புகழ்ப்படும் நாயன்மார் இவனே ஆகும்.
------------------------------
"கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்" எனச்

சுந்தரமூர்த்தி நாயனாரால் புகழப்பட்டவன்.
-----------------------------
நந்திவர்மனின் மூப்பாட்டன் நரசிம்மவர்மனுக்குப் பிறகு

"பல்லவர்களின் வலிமையை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டிய பெருமை" உடையவன்.

பல்லவர்களின் பெருமை காத்தவன் இவனே ஆகும்.
-----------------------------
இராட்டிரகூட இளவரசி சங்காவை மணம் முடித்தவன்.

இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் இருந்து இவனை

"தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என்ற அடைக்கொடுத்தே கல்வெட்டுகளும்,இலக்கியங்களும் இவனை அழைக்கின்றன.
-----------------------------
காலம் கடந்தாலும் எம் முப்பாட்டன் காடவர்கோன் கழற்சிங்கனான

அக்னிகுலத்தவனின் வரலாறு என்றும் மறைவே மறையாது.
------------------------------

No comments:

Post a Comment