தகடூர் சீமையின் பெருமை:
தகடூர் சீமை:(தருமபுரி & கிருஷ்ணகிரி) பெருமைகள்:
===================
1) தகடூர் நாட்டின் தொல்குடிகள் மழவரும்,அதியரும்.
-------------------------------------
2) பல்லவர்கள் காலத்தில் 5 நாடுகளாக இருந்தவை எம் தகடூர் சீமை.
-------------------------------------
3) சதயபுத்திரன் அதியமான் பெரும் பள்ளி ஆட்சி செய்த நாடு.
-------------------------------------
4) தகடூர் சீமை நாடுகள்:
================
* தகடூர் நாடு(தருமபுரி).
* புறமலைநாடு (பாப்பிரெட்டிபட்டி,கடத்தூர் பெரும்பகுதிகள்).
* கோவூர் நாடு (கிருஷ்ணகிரி,பாலக்கோடு &
காரிமங்கலம்).
* மீவேணாடு (ஊத்தங்கரை).
* மீகொன்றை நாடு (அரூர்).
-------------------------------------
5) இராசராசசோழனால் அன்போடு "நிகரிலிச்சோழ மண்டலம்" என்று பெருமையோடு போற்றப்பட்டவை.
-------------------------------------
6) இராஜேந்திரசோழனால் வீரத்தோடு "விஜய இராஜேந்திர சோழ மண்டலம்" எனப் புகழப்பட்டவை.
------------------------------------
7) தகடூர் சீமை ஓசுர் பகுதியை "முடி கொண்ட சோழ மண்டலம்" என்று இராஜேந்திரனால் பெருமையாக போற்றப்பட்டவை.
------------------------------------
8) அதியன் பள்ளி பரம்பரை விடுகாத்ழகிய பெருமாள்,அத்தி மல்லன் மற்றும் கரிகால சோழ ஆடையூர் நாடழ்வான் ஆட்சி செய்த வீரம் கொண்ட பூமி இது.
------------------------------------
9) சோழர்கள் பெண் கொடுத்து,பெண் எடுத்ததும் எம் தகடூர் சீமை மழவர் குடி தான்.
------------------------------------
10) ஒளவைக்கு சாகவரம் கொண்ட நெல்லி கனி கொடுத்த அதியேன் நெடுமான் அஞ்சி பெரும்பள்ளி வாழ்ந்த கோட்டை இது.
------------------------------------
11) வந்தார வாழ வைக்கும் சேர நாட்டு சீமை இது.
------------------------------------
12) வீரமுள்ள அதியன், மழவர்களை பெத்தெடுத்த மண்ணு இது.
------------------------------------
13) தெள்ளு தமிழ் பேசுகிற சேர நாட்டு சொர்க்கம் இது.
------------------------------------
14) அதியமான் பரம்பரைய வாழுகிறா வம்சம் இது.
------------------------------------
15) ஆண்டவனுக்கே பயப்படாத ஆண்மை கொண்ட சிங்கங்கள் வாழுகிற கோட்டை இது.
------------------------------------
16) அன்பு கொண்ட மக்கள மட்டும் அரவணைத்து வாழுகிற வீரம் கொண்ட ஊரு இது.
------------------------------------
17) வம்புனு வந்துபுட்டா வாள் எடுத்து வீசுகிற தகடூர் சீமை இது.
------------------------------------
18) பாசம்,ரோசம்னு வாழுகிற வம்சம் இது.
------------------------------------
19) குடி கொண்ட பெயராலே குடியானவன் என்று வாழுகிற வம்சம் இது.
------------------------------------
20) வீரத்துக்கும்,மானத்துக்கும் மட்டுமே வாழ்ந்த சேர நாட்டு அதிபதியாம் அதியமான் பரம்பரைடா இது.
------------------------------------
இவன் தகடூர் சீமையாம் மீவேணாடில் பிறந்து மீவேணாட்டிலே வாழும் தகடூர் சீமையின் சதயபுத்திரன்டா நான்..!
===================
இவன் தகடூர் பெற்றெடுத்த தகடூரின் மைந்தன் விமல் இரத்தினம் சத்ரியன்
--------------------------------------
No comments:
Post a Comment