Friday, February 26, 2016

பாயும்புலி பண்டாரவன்னியன்:




மாவீரன் பண்டார வன்னியனின் 213 வது வீர வணக்க நாள் நேற்று.

முழு பெயர் குலசேகரன் வைரமுத்து பண்டார வன்னியன்.

பெரிய மெய்யானார் , கயலாய வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள்.

யாழ் பாண வைப்பமாலை பதிவுகளின் படி சோழ பேரரசின் காலத்தில்
இலங்கையை ஆட்சி புரிய அனுபப்பட்ட வட தமிழகத்து வன்னிய குல தளபதிகளின் வழி வந்தவர்.


வன்னியர் என்பதற்கே வலிமை உடையோர் எனவும் பொருள் கொள்ளலாம்.


1621 ம் ஆண்டு போர்ச்சிக்கிசியர்கள் யாழ்பாணத்தை கைப்பற்றிய போதும் கூட வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியவில்லை.


கடைசி வரை வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியாமலே போர்ச்சிக்கிசியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த்தது.


வன்னிக்குள் முதன் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் ஒப்பிடும் ஒல்லாந்தர்கள் .


1782 ல் வன்னியை  கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர்.


பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார் ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தி உள்ளனர். 
ஆனால் இப்படி  வீரத்துடன் போர் இட்டவர்களை உலகத்தில் அவர்கள் எங்கும் காணவில்லை.


இவ்வாறு ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தும்.


மன்னர் திருகோணமலை மற்றும் வன்னி காடுகள் என இவர்கள் இடை விடா போரை நடத்தி வந்தனர். 


அவர்களில் ஒளி விடும் மாணிக்கமாய் வந்த மாவீரன் தான் பண்டார வன்னியன்.


முல்லை தீவிலிருந்து பண்டார வன்னியனின் வரலாற்று வெற்றிகள் ஏரளாம்.

No comments:

Post a Comment