பாயும்புலி பண்டாரவன்னியன்:
---------------------------------------------------------------
பாயும்புலி பண்டாரவன்னியன்:
===============
17 நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையை உட்பட பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சிபுரிந்த மேலத்திய ஆங்கிலேயர்க்கு மிகப் பெரும் சவாலக இருந்தவன் இலங்கை அடங்கப்பெற்று வன்னி வளநாட்டு இறுதி மன்னன் வீரதமிழன் குலசேகரன் வைரமுத்து பாயும்புலி பண்டாரவன்னியன்..
------------------------------
அந்நியர் ஆனா ஆங்கிலேயரை எமது மண்ணில் இருந்து ஆகற்றுவேன் என்று வீர சபதம் கொண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல்களை நடத்திய க்ஷத்ரியன்..
------------------------------
1803 ஆம் வருடம் திருகோனிஸ்வரர் அருள் புரியும் இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை கொட்டியாரத்தில் ஆரம்பித்த அவனது வீர தாக்குதல் அதே ஆண்டு ஆவணி திங்கள் 25 ம் நாள் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய முல்லைதீவு கோட்டையையும்,அரசாங்க இல்லத்தையும் தாங்கி அவனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான்..!
------------------------------
அதன் பின்னர் அந்த இரவிலே ஆங்கிலேயர் அனுப்பிய பெரும் படையை எதிர்கொண்டு டக்சலை மடுவில் வெற்றிகொண்டான்..!
------------------------------
அவனது தொடர் மாபெரும் வெற்றிகளினால் அதுவரை துயரத்தில் ஆழ்ந்து இருந்த அடங்கப்பெற்று வன்னி மக்கள் தேன் குடித்த வண்டுகள் ஆனார்கள்..!
------------------------------
பண்டாரவன்னியனை வாழ்த்த கோட்டை சுட்டானில் பெரும் விழா கொண்டாட ஆயித்தம் ஆனார்கள்.
பண்டார வன்னியனின் சொந்த ஊரான பண்டாரகுளத்தில் இருந்து அவனைனை கொன்டாட அழைத்து வருகின்றனர்.
பண்டார வன்னியனும் வெற்றி களிப்புடன் அதனை ஏற்றுகொண்டான்..!
---------------------------
வீரம் மட்டுமே வித்தாய் கொண்ட வம்சம் எம் க்ஷத்ரிய வம்சம்.
-------------------------------------------------------
No comments:
Post a Comment