Friday, February 26, 2016

பெரும்பள்ளி அருள்மொழிவர்மன்(இராஜராஜசோழன்):

இராஜராஜசோழன் என்கிற அருள்மொழிவர்மன்:
-----------------------------------------------------------------------------
கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான்.  

சுந்தர சோழனுக்கும்,சேரநாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர்  "அருள்மொழிவர்மன்".


இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின்
 தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான்.  

இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜராஜசோழன் எனப்பட்டான்...!  
--------------------------------------------------------------------------------------------------------------------------
(988)தந்தை இறந்ததும் இவன்  உடனடியாகப் பதவிக்கு வரவில்லை 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்..!

விசயாலயசோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும்... 
இவன் மகன் இராஜேந்திரசோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது.  

இராஜராஜனின் காலம் பிற்காலச்சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜ சோழன் இறந்தார்.  

அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப்பட்டது.  
( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள 
மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )..

நம் வரலாற்றை மீட்டு எடுப்பது ஒவ்வொரு வன்னியனின் கடமை ஆகும்.
---------------------------------------------------
விமல்இரத்தினம்சத்ரியன்.
----------------------------------------------------

No comments:

Post a Comment