Friday, February 26, 2016

                                                   கர்நாடக க்ஷத்ரியர்கள்:




























சோழர்கள் க்ஷத்ரியர்கள்:

சோழநாட்டின் க்ஷத்ரிய வம்ச பேரரசர்களாக வந்தவர்கள் பட்டியல்: 
------------------------------------------------
1. விஜயாலய சோழன் (846 - 881).  

2. ஆதித்தியன் (880 - 907).  

3. பராந்தகன் (907 - 955).

4. கண்டராதித்தியன் (955 – 957). 

5. அரிஞ்சயன் (957). 

6. சுந்தரசோழ பராந்தகன் (957 - 985).

7. உத்தம சோழன் (973 - 989)  

8. இராஜராஜன் (985-1012)(மகன்)  

9. ராஜேந்திரன் (1012-1044) (மகன்)  

10. இராஜாதிராஜன் (1018-1054)  

11. ராஜேந்திரன் II (1052-1064) (மகள்) 

12. வீரராஜேந்திரன் (1063-1069).
============================
சாளுக்கிய சோழர்கள் க்ஷத்ரிய வம்ச சாளுக்கிய சோழர்களில் இருந்து மன்னர்களாக வந்தவர்களின் பட்டியல்:
------------------------------------------------
1. குலோத்துங்கன் (1070 - 1120).  

2. விக்கிரம சோழன் (1120 - 1133).  

3. குலோத்துங்கன் II (1133 - 1150).  

4. இராஜராஜன் II (1150 - 1173).  

5. இராஜாதிராஜன் II (1173 - 1178).  

6. குலோத்துங்கன் III (1178 - 1218). 

7. இராஜராஜன் III (1218 - 1246).  

8. இராஜேந்திரன் III (1246 - 1257).
------------------------------------------------


பெரும்பள்ளி அருள்மொழிவர்மன்(இராஜராஜசோழன்):

இராஜராஜசோழன் என்கிற அருள்மொழிவர்மன்:
-----------------------------------------------------------------------------
கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான்.  

சுந்தர சோழனுக்கும்,சேரநாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர்  "அருள்மொழிவர்மன்".


இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின்
 தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான்.  

இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜராஜசோழன் எனப்பட்டான்...!  
--------------------------------------------------------------------------------------------------------------------------
(988)தந்தை இறந்ததும் இவன்  உடனடியாகப் பதவிக்கு வரவில்லை 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்..!

விசயாலயசோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும்... 
இவன் மகன் இராஜேந்திரசோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது.  

இராஜராஜனின் காலம் பிற்காலச்சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜ சோழன் இறந்தார்.  

அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப்பட்டது.  
( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள 
மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )..

நம் வரலாற்றை மீட்டு எடுப்பது ஒவ்வொரு வன்னியனின் கடமை ஆகும்.
---------------------------------------------------
விமல்இரத்தினம்சத்ரியன்.
----------------------------------------------------

சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள்:


உலகத்தின் மாபெரும் கட்டிடகலைகள்:
============================
சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள்:
------------------------------------------------

1. தஞ்சை பெரிய கோவில் அருள்மொழிவர்மனின் கட்டிடகலை:

============================
கோவிலின் நீளம்: 793 அடி.

கோவிலின் அகலம்: 397 அடி.

நடுவிமானம்: 216 அடி.

உச்சியில் பிரமந்திரகல்: 80 டன்.

லிங்கத்தின் உயரம்: 12.5 அடி.

லிங்கத்தின் சுற்றளவு: 55 அடி.

தல விருட்சம்: பின்னை,வன்னி மரம்.

கோவில் விமானம்: தட்சிணமேரு.

இராஜராஜனின் 19 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று 23 ஆம் ஆண்டு 275 ஆம் நாளில் முடிக்கப்பெற்று திருப்பணி நடைப்பெற்றது.

------------------------------------------------

2. கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரனின் கட்டிடகலை:

===========================
கோவிலின் நீளம்: 340 அடி.

கோவிலின் அகலம்: 100 அடி.

கோபுரத்தின் உயரம்: 180 அடி.

கோபுரத்தின் அகலம்: 100 அடி.

லிங்கத்தின் உயரம்: 13.5 அடி.

லிங்கத்தின் சுற்றளவு: 60 அடி.

விமானத்தின் உயரம்: 160 அடி.

உச்சியில் சந்திரகாந்த கல்: 60 டன்.

தல விருட்சம்: பின்னை,வன்னி மரம்.
------------------------------------------------

3. அங்கூர்வாட் கோவில் சூர்யவர்மனின் கட்டிடகலை:

============================
கோவிலின் சுற்று சுவர்: 3.6 கிலொ மீட்டர்.

கோவிலின் சுற்றளவு: 5.5 கிலொ மீட்டர்.

உள் கோபுரத்தின் உயரம்: 3,360 அடி.

வெளி கோபுரத்தின் உயரம்: 2,631 அடி.

கோவில் கோபுரத்தின் சுற்றளவு: 620 அடி.

கோபுரத்தின் சுற்றளவு: 98 அடி.

மொத்த கோவிலின் அளவு: 203 ஏக்கர்.

மேற்கு கோபுரத்தின் உயரம்: 1,150 அடி.

முதல் கோபுரத்தின் உயரம்: 614 அடி.

இரண்டாம் கோபுரத்தின் உயரம்: 705 அடி.

நாக சிலையின் உயரம்: 377 அடி.

சுவர் ஓவியத்தின் அளவு: 213 அடி.

முதல் கடவுள்: சிவன்,விஷ்ணு.

தற்போது: புத்தர்.

தல விருட்சம்: வன்னி மரம்.

யவர்மனால் கிபி 1113 தொடங்கப் பெற்று கிபி 1150 சூர்யவர்மனால் முடிக்கப்பெற்றது.
------------------------------------------------

4. மாமல்லபுரம் கோவில் நரசிம்மவர்மனின் கட்டிடகலை:

============================
மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.
----------------------------------------------------

     வரலாறு:

பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப்  பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும் , அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

முக்கியமாகக் கணேச இரதம்,கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
******************************
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள்:
============================
-> தர்மராச மண்டபம்
-> மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
-> வராக மண்டபம்
-> ஆதிவராக மண்டபம்
-> ராமானுச மண்டபம்
-> திரிமூர்த்தி மண்டபம்
-> கோடிக்கல் மண்டபம்
-> கோனேரி மண்டபம்
-> அதிரணசண்ட மண்டபம்
******************************
மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
============================
-> பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்.

-> வலையன்குட்டை இரதம் பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்.

-> கணேச இரதம்.
******************************
    அருச்சுனன் தபசு:
============================
அருச்சுனன் தபசு சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
******************************
   புடைப்புச் சிற்பத் தொகுதிகள்:
=============================
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
******************************
வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:
============================
-> அருச்சுனன் தபசு
-> கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல்

(பிற்காலத்தில் இந்தச்
சிற்பத் தொகுதி மீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)

->முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
->விலங்குகள் தொகுதி
******************************
வராக மண்டபம்,

ஆதிவராக மண்டபம்,

மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.

ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.
------------------------------------------------
உலகிற்கே மிகப்பெரிய கட்டிடகலைகளை தந்த எம் முப்பாட்டன்கள்.

சத்ரிய வம்சத்தின் நீங்கா பெருமைகள் நீங்கள்.

உங்கள் பாதம் தொட்டு வரும் நாங்கள் என்றும் உங்கள் வழியில்.

ஆயிரம் ஆண்டுகள் ஆனா பிறகும் நீங்கள் எங்களுக்காக விட்டு சென்ற நீங்கா பெருமைகள் இவைகள்.

ஒரு வன்னிய குல சத்ரியனாய் பெருமை கொள்கிறேன்.
ஒரு தமிழனாய் கர்வம் கொள்கிறேன்.
என்றும் உங்கள் பெருமைகளாய் நாங்கள்.
-----------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்.
------------------------------------------------

வன்னிய அரசர்:


அரியலூர் சம்ஸ்தான வன்னிய அரசர்:
சேர மழவர் குலத்தின் வழித்தோன்றல்:
------------------------------------------------
விஜய ஒப்பில்லா மழவராயர்.
காலம் 15 ஆம் நூற்றாண்டு.
------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்.
-----------------------------------------------

தகடூர் சீமையின் பெருமை:


தகடூர் சீமை:(தருமபுரி & கிருஷ்ணகிரி) பெருமைகள்:
===================
1) தகடூர் நாட்டின் தொல்குடிகள் மழவரும்,அதியரும்.
-------------------------------------
2) பல்லவர்கள் காலத்தில் 5 நாடுகளாக இருந்தவை எம் தகடூர் சீமை.
-------------------------------------
3) சதயபுத்திரன் அதியமான் பெரும் பள்ளி ஆட்சி செய்த நாடு.
-------------------------------------
4) தகடூர் சீமை நாடுகள்:
    ================
* தகடூர் நாடு(தருமபுரி).

* புறமலைநாடு (பாப்பிரெட்டிபட்டி,கடத்தூர் பெரும்பகுதிகள்).

* கோவூர் நாடு (கிருஷ்ணகிரி,பாலக்கோடு &
காரிமங்கலம்).

* மீவேணாடு (ஊத்தங்கரை).

* மீகொன்றை நாடு (அரூர்).
-------------------------------------
5) இராசராசசோழனால் அன்போடு "நிகரிலிச்சோழ மண்டலம்" என்று பெருமையோடு போற்றப்பட்டவை.
-------------------------------------
6) இராஜேந்திரசோழனால் வீரத்தோடு "விஜய இராஜேந்திர சோழ மண்டலம்" எனப் புகழப்பட்டவை.
------------------------------------
7) தகடூர் சீமை ஓசுர் பகுதியை "முடி கொண்ட சோழ மண்டலம்" என்று இராஜேந்திரனால் பெருமையாக போற்றப்பட்டவை.
------------------------------------
8) அதியன் பள்ளி பரம்பரை விடுகாத்ழகிய பெருமாள்,அத்தி மல்லன் மற்றும் கரிகால சோழ ஆடையூர் நாடழ்வான் ஆட்சி செய்த வீரம் கொண்ட பூமி இது.
------------------------------------
9) சோழர்கள் பெண் கொடுத்து,பெண் எடுத்ததும் எம்  தகடூர் சீமை மழவர் குடி தான்.
------------------------------------
10) ஒளவைக்கு சாகவரம் கொண்ட நெல்லி கனி கொடுத்த அதியேன் நெடுமான் அஞ்சி பெரும்பள்ளி வாழ்ந்த கோட்டை இது.
------------------------------------
11) வந்தார வாழ வைக்கும் சேர நாட்டு சீமை இது.
------------------------------------
12) வீரமுள்ள அதியன், மழவர்களை பெத்தெடுத்த மண்ணு இது.
------------------------------------
13) தெள்ளு தமிழ் பேசுகிற சேர நாட்டு சொர்க்கம் இது.
------------------------------------
14) அதியமான் பரம்பரைய வாழுகிறா வம்சம் இது.
------------------------------------
15) ஆண்டவனுக்கே பயப்படாத ஆண்மை கொண்ட சிங்கங்கள் வாழுகிற கோட்டை இது.
------------------------------------
16) அன்பு கொண்ட மக்கள மட்டும் அரவணைத்து வாழுகிற வீரம் கொண்ட ஊரு இது.
------------------------------------
17) வம்புனு வந்துபுட்டா வாள் எடுத்து வீசுகிற தகடூர் சீமை இது.
------------------------------------
18) பாசம்,ரோசம்னு வாழுகிற வம்சம் இது.
------------------------------------
19) குடி கொண்ட பெயராலே குடியானவன் என்று வாழுகிற வம்சம் இது.
------------------------------------
20) வீரத்துக்கும்,மானத்துக்கும் மட்டுமே வாழ்ந்த சேர நாட்டு அதிபதியாம் அதியமான் பரம்பரைடா இது.
------------------------------------
இவன் தகடூர் சீமையாம் மீவேணாடில் பிறந்து மீவேணாட்டிலே வாழும் தகடூர் சீமையின் சதயபுத்திரன்டா நான்..!
===================
இவன் தகடூர் பெற்றெடுத்த தகடூரின் மைந்தன் விமல் இரத்தினம் சத்ரியன்
--------------------------------------

காடவராய கோப்பெருஞ்சிங்கன்:

காடவராய கோப்பெருஞ்சிங்கன் பெண் கேட்டு கொடுக்காத சோழனை சிறைப்பிடித்து தன் மாமன் மகளை மணந்தவன்.
----------------------------
க்ஷத்ரியனுக்கே உரிய ஓர் வீரம்:
---------------------------
மாமன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும்,மறுமகன் காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சினை தான் சோழனின் பெண் விவாகரம்.
-----------------------------
காடவன் பெண் கேட்டு போனா போது குலோத்துங்கன் தன் மகளை கொடுக்க மறுத்தால். குலோத்துங்கனை சிறைப்பிடித்து சோழனின் பெண்னை  கவர்ந்து கொண்டு சென்று மணந்தவன் காடவன் கோப்பெருஞ்சிங்கன்.
----------------------------
மாமன் மகள் எனக்கே உரியவள் என்று வீரம் செறிந்தவனாகவும்,க்ஷத்ரிய இலட்சணத்தையும்,வீரத்தையும் தன் தாய் மாமன் குலோத்துங்கனிடம் திறம்ப்பட காட்டிய பள்ளிகுலத்தவன்.
-----------------------------
க்ஷத்ரியனின் வீரம் என்றால் சும்மாவ..!
மிகப்பெரிய பேரரசு ஆகா இருந்த சோழர்களுக்கே தண்ணி காட்டியவன் எம் முப்பாட்டன் காடவன் கோப்பெருங்சிங்க பல்லவன்.
---------------------------
மானத்துக்கும்,வீரத்துக்கும் பெயர் போன சாதி எம் பள்ளி குலம்.
---------------------------
விமல் இரத்தினம் க்ஷத்ரியன்
---------------------------

க்ஷத்ரிய வம்சங்கள்:


இந்தியாவின் இரண்டு ஷத்ரிய வம்சங்கள்:
------------------------------------------------
1.வட இந்திய இராசபுத்திரர்கள்(RajPuts).

2.தென் இந்திய இராசபுத்திரர்கள்(வன்னியர்கள்).
-----------------------------------------------
இந்த இரண்டு வம்சங்களுமே அக்னிகுல சத்ரியர்கள் என்றே இன்றளவிலும் அறியப்படும் சமுதாயங்கள்.
------------------------------------------------
இவர்கள் மட்டுமே பாண்டவர்களின் வம்ச வழிகள்.
------------------------------------------------
Indias Two kshatriya Communities:
------------------------------------------------
1. North Indian Kshatriyas(Rajputs).

2.South Indian Kshatriyas(Vanniyar

or Varmas).
------------------------------------------------
There Are Two Community Fuedel

Myth it should be an "AgniVansi".
------------------------------------------------
That Two Community Only A fuedel

Myth Priest As "Pandavas Vamsa"

Lineage.
------------------------------------------------
விமல் இரத்தினம் க்ஷத்ரியன்
------------------------------------------------

                                   சத்ரிய வம்சத்தின் பெருமைகள்:

============================
     சத்ரிய வம்சத்தின் பெருமைகள்:
============================
சம்புமுனி வேள்வியிலே..

ஆதி சிவன் வியர்வையாலே..

அக்னியில் ருத்திரமாய் ஆவதரித்து எழுந்த இனம்...!

கந்தன் அவன் வேல் கொடுக்க..

ஆணவத்தில் ஆட்டம் இட்ட...

வாதாபி கதை முடித்த வீர மகாராசன் இனம்...!

இந்திரனின் பெண் மணந்து...

எட்டு திக்கும் குலம் செழிக்க நாடாண்ட  மூதத இனம்...!

நம்ம வன்னியர்குல சத்ரியர் இனம் தான்டா...!

வீர வன்னியர் இனம் தான்டா.!
------------------------------------------------
வாள் எடுத்ததும் வில் எடுத்ததும்

நம்ம இனம் தான்டா..!

வேல் எடுத்து வினை முடித்ததும்

நம்ம இனம் தான்டா...!

வீரம் உள்ளதும் பாசம் உள்ளதும்

நம்ம இனம் தான்டா..!

வீரம் உள்ளதும் மானம் உள்ளதும்

நம்ம இனம் தான்டா..!
------------------------------------------------
மலை பிளந்து சிலை வடித்ததும்

நம்ம இனம் தான்டா

(பல்லவர்கள்)..!

கலை வளர்த்து காவல் செய்ததும்

நம்ம இனம் தான்டா (சோழர்கள்)..!

கொல்லி மழவர்,அதியராகா,சம்புவராக,பல்லவராக,சேர,சோழ,திரயராக

வாழ்ந்தது நம்ம இனம் தான்டா...!
------------------------------------------------
கொல்லி ஆண்ட ஓரி அவன் நம்ம இனம் தான்டா..!

முல்லைக்கு தேர் தந்த பாரி நம்ம இனம் தான்டா..!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜசோழன் நம்ம இனம் தான்டா...!

கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய இராஜேந்திரனும் நம்ம இனம் தான்டா...!

ஒளவைக்கு நெல்லி கனி தந்த அதியமானும் நம்ம இனம் தான்டா..!

சிதம்பரம் நடராஜர் கோவிலை கட்டிய இரண்ய வர்மனும் நம்ம இனம் தான்டா..!

காஞ்சிபுரத்தை நிறுவிய மகேந்திர வர்மனும் நம்ம இனம் தான்டா..!

கம்போடியாவில் உள்ள அங்கூர்வாட்டை கட்டிய சூர்யவர்மனும் நம்ம இனம் தான்டா..!

மாமல்லபுரம் குடைவரைக்கோவிலை கட்டிய நரசிம்மவர்மனும் நம்ம இனம்
தான்டா..!

திருவண்ணாமலை கோவில் கட்டிய வல்லாளதேவரும் நம்ம இனம் தான்டா...!

திருப்பதி கோவில் கட்டிய கருணாகரதொண்டைமானும் நம்ம இனம் தான்டா..!
------------------------------------------------
மலை கல்லை வடிவம் தந்தது நம்ம இனம் தான்டா (நரசிம்ம பல்லவன்)..!

கல்லனையை கட்டி தந்ததும் நம்ம இனம் தான்டா (கரிகாற்சோழன்)...!

இமயம் வரை வெற்றி கண்டது நம்ம இனம் தான்டா (இராஜேந்திரசோழன்)..!

புலிக்கொடியை ஏற்றி வைத்ததும் நம்ம இனம் தான்டா (விசயலாயசோழன்)...!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்து கோவில் கட்டி கோட்டை கட்டி

வாழ்ந்த சத்ரிய வம்சமே நம்ம தான்டா...!
------------------------------------------------
============================
விமல் இரத்தினம் சத்ரியன்
============================
------------------------------------------------

பாயும்புலி பண்டாரவன்னியன்:

---------------------------------------------------------------

பாயும்புலி பண்டாரவன்னியன்:
===============
17 நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையை உட்பட பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சிபுரிந்த மேலத்திய ஆங்கிலேயர்க்கு மிகப் பெரும் சவாலக இருந்தவன் இலங்கை அடங்கப்பெற்று வன்னி வளநாட்டு இறுதி மன்னன் வீரதமிழன் குலசேகரன் வைரமுத்து பாயும்புலி பண்டாரவன்னியன்.. 
------------------------------
அந்நியர் ஆனா ஆங்கிலேயரை எமது மண்ணில் இருந்து ஆகற்றுவேன் என்று வீர சபதம் கொண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல்களை நடத்திய க்ஷத்ரியன்.. 
------------------------------
1803 ஆம் வருடம் திருகோனிஸ்வரர் அருள் புரியும் இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை கொட்டியாரத்தில் ஆரம்பித்த அவனது வீர தாக்குதல் அதே ஆண்டு ஆவணி திங்கள் 25 ம் நாள் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய முல்லைதீவு கோட்டையையும்,அரசாங்க இல்லத்தையும் தாங்கி அவனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான்..! 
------------------------------
அதன் பின்னர் அந்த இரவிலே ஆங்கிலேயர் அனுப்பிய பெரும் படையை எதிர்கொண்டு டக்சலை மடுவில் வெற்றிகொண்டான்..! 
------------------------------
அவனது தொடர் மாபெரும் வெற்றிகளினால் அதுவரை துயரத்தில் ஆழ்ந்து இருந்த அடங்கப்பெற்று வன்னி மக்கள் தேன் குடித்த வண்டுகள் ஆனார்கள்..! 
------------------------------
பண்டாரவன்னியனை வாழ்த்த கோட்டை சுட்டானில் பெரும் விழா கொண்டாட ஆயித்தம் ஆனார்கள். 

பண்டார வன்னியனின் சொந்த ஊரான பண்டாரகுளத்தில் இருந்து அவனைனை கொன்டாட அழைத்து வருகின்றனர். 

பண்டார வன்னியனும் வெற்றி களிப்புடன் அதனை ஏற்றுகொண்டான்..!
---------------------------
வீரம் மட்டுமே வித்தாய் கொண்ட வம்சம் எம் க்ஷத்ரிய வம்சம்.
-------------------------------------------------------

பெரும்பள்ளி இராஜராஜசோழன்:


------------------------------------------------
எங்கள் முப்பாட்டன் இராஜராஜசோழன்:
------------------------------------------------
சிவபாத சேகரனே..! 
ஷத்ரிய குல காவலனே...! 

------------------------------------------------
புலிக்கொடி நாட்டிய இடம்மெல்லம் 

பள்ளி குடியை விதைத்த வர்மனே...! 
------------------------------------------------
பிறந்தாய் ஷத்ரியனாய்..!

வளர்ந்தாய் வர்மனாய்..! 

முடிசூடினாய் இராஜராஜசோழனாய்..!
--------------------------------------------------- 

ஆட்சிகாலத்தில் பட்டம்சூடி 

மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் 

ஆனாய் இராஜகேசரி வர்மனாய்..! 
------------------------------------------------
போரிடும் பெரும்படை பள்ளிவாழ் 

போர்ப்படையின் அருள்மொழிவர்மனே..!
------------------------------------------------
ஆயிரம் ஆண்டுகள் முன்னெரே 

தல விருட்சமாய் நீ கட்டிய 

கோவிலில் வன்னிமரத்தை நட்டு 

சென்ற எம் குலத்தின் வேந்தனே..!

அக்னியின் முழுமுதற் கடவுளானா 

சிவனை சிதம்பரத்தில் குல 

தெய்வமாக கொண்டவனே..!
------------------------------------------------
பெங்களூர் சீமை பேகூர்-ல் உள்ள 

சிவன் கோவிலை கட்டிய சோழ 

வம்சத்தின் வேந்தனே..!

பள்ளிக்குடியை அங்கேயும் 

ஊண்றிய எம் குலத்தின் சத்ரியனே..!
------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்
------------------------------------------------

சோழர் வம்சம்: 

                                         ஸ்ரீ இராஜராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்:

============================
                  சோழர் வம்சம்:
------------------------------------------------
சோழர்களின் வழித்தோன்றல் தில்லையம்பலத்தில் முடி சூட்டப்பெற்றவர் பிச்சாவரம் வன்னிய பாளையக்காரர் மஹா ஸ்ரீ இராஜராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார்
------------------------------------------------
1943-ஆம் ஆண்டு சோழராக முடி சூட்டப்பட்டவர்.
------------------------------------------------
============================
விமல் இரத்தினம் சத்ரியன்
============================
------------------------------------------------

 பள்ளி பெயர் கொண்ட ஊர்கள்:

-------------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------
நம் சாதி பெயரான பள்ளி பெயர் கொண்ட ஊர்கள்:
------------------------------------------------
1.போச்சம்பள்ளி(தருமபுரி).
2.நல்லாம்பள்ளி(தருமபுரி).
3.குடிப்பள்ளி(வேலூர்).
4.பள்ளியூர்(வேலூர்).
5.நாட்றம்பள்ளி(வேலூர்).
6.பள்ளிகொண்டா(வேலூர்).
7.கவுண்டப்பள்ளி(கிருஷ்ணகிரி).
8.சிம்மனப்பள்ளி(கிருஷ்ணகிரி).
9.சங்கனப்பள்ளி(கிருஷ்ணகிரி).
10.மூக்கண்டபள்ளி(கிருஷ்ணகிரி).
11.பங்கனப்பள்ளி(கிருஷ்ணகிரி).
12.அத்திபள்ளி(கிருஷ்ணகிரி).
13.பள்ளிகாரன்கொட்டாய்(கிருஷ்ணகிரி).
14.பள்ளிப்பட்டு(திருவண்ணாமலை&திருவள்ளூர்).
15.பள்ளிப்படை(சிதம்பரம்).
16.பள்ளிப்பாளையம்(ஈரோடு).
17.பள்ளிக்காடு(ஈரோடு).
18.பள்ளியூர்(கும்பகோணம்).
19.பள்ளிக்காரனை(சென்னை).
20.பள்ளிகுப்பம்(வானகரம்).
21.பள்ளிபட்டி(வேலூர்&சேலம்).
22.சந்தனப்பள்ளி(கிருஷ்ணகிரி).
23.பள்ளிநீர் ஓடை(கடலூர்).
24.பள்ளி கொண்டாபட்டு(தி.மலை).
25.பள்ளி புதுப்பட்டு(தி,மலை).
26.பள்ளிச்சேரி(புதுச்சேரி).
27.பள்ளி நேளியனூர்(புதுச்சேரி).
28.பள்ளிக்கொண்டான்(கிருஷ்ணகிரி).
29.வீரபள்ளி(கிருஷ்ணகிரி,வேலூர்).
30.மின்னாம்பள்ளி(சேலம்).
31.பள்ளி தென்னல்(புதுச்சேரி).
32.பந்தாரப்பள்ளி(வேலூர்).
33.ஜோல்ட்ரபள்ளி(வேலூர்).
33.பள்ளிக்கரை(வேலூர்).
35.பள்ளிமேடு(வேலூர்).
36.மேல் பள்ளிப்பட்டு(தி,மலை).
37.மாரண்டபள்ளி(கிருஷ்ணகிரி).
38.பொம்மனபள்ளி(கிருஷ்ணகிரி).
39.குடிப்பள்ளியூர்(தருமபுரி).
40.பதுவம்பள்ளி(கோவை).
41.மகேந்திரபள்ளி(நாகை).
42.குடிப்பள்ளிசெங்கேனி(தருமபுரி).
43.பள்ளிப்பட்டி(தருமபுரி).
44.பள்ளிகொண்டாவூர்(வேலூர்).
45.பள்ளிஅர்சன் தெரு(கங்கைகொண்ட சோழபுரம்).
46.திருக்காட்டுப்பள்ளி(தஞ்சை).
47.பள்ளியக்ரஹாரம்(தஞ்சை).
48.புதுப்பள்ளி(வேலூர்,த.புரி,தி.மலை).
49. ஆலம்பள்ளி(வேலூர்).
50. வண்ணாம்பள்ளி (கிருஷ்ணகிரி). 
51. பள்ளிபாளையம்(ஈரோடு). 
52. கவுண்டபள்ளி(கிருஷ்ணகிரி). 
53. கரிச்சாம்பள்ளி(கிருஷ்ணகிரி).
54.பெத்தாம்பள்ளி(கிருஷ்ணகிரி).
55.திருச்சிரப்பள்ளி மாவட்டம்.
------------------------------------------------
பள்ளி என்று தொடங்கும்,முடியும் ஊர்கள்.
------------------------------------------------
போரிடும் பெரும்படை பள்ளி வாழ் போர்படை..!  

அக்னி வம்சம் பள்ளி பையன் நான்.
============================
விமல் இரத்தினம் சத்ரியன்
============================
------------------------------------------------

------------------------------------------------

    சோழர் படையாட்சி குடி:

------------------------------------------------
------------------------------------------------
    சோழர் படையாட்சி குடி:
------------------------------------------------
செம்மண் பூமியின்.. 


செங்கதிர் குலத்தோர்..


ஆர் மலர் குடி.. 

  
ஆதவன்  மகனாய்...


ஈசன் திருவாடி  தில்லையில் 

வணங்கி.. 


புலி கொடி  கொண்ட 

சிங்கங்களாய் பிறந்தோம்.. 


சீற்றம் குறையா குருதியை 

கொண்டு...


சோழம்  சோழம் என்றென்னும் 

நெஞ்சினை சிந்தையில் வைத்து படை ஆண்ட  குடி.. 


பகை தீர்க்கும் குடி.. 

பள்ளிமார்  குடி என சொல்லி.. 


விற்கொண்ட குடி..


வினை போக்கும் குடி.. 


விடை  கொடியுண்ட குடி என 

வாழ்வோம்.. 


மனம் மகிழ்வோம்.. 
மண் செழிப்போம்.. 


இது படையாட்சி குடி...!
------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்
------------------------------------------------

சோழர்களின் படையாட்சி  இராணுவம்: 



சோழர்களின் படையாட்சி  இராணுவம்:
==================
மல்லிகார்ஜீன தேவ மஹாராயர் பட்டயம்:
----------------------------------
"படையாக்ஷியார்
சோம சூரிய அக்னி வம்சத்தார் முன்னூல்(பூணூல்) மார்புடையார் புலிக்கொடி பெற்றவர்
சோழநாடு காத்தவர்".
-----------------------------------
பட்டயம் கூறும் செய்தி:
-----------------------------------
படையாட்சிகளே சந்திரன்,சூரிய மற்றும் அக்னி குலத்தவர்கள் இவர்களே என்றும்.

பிறப்பிலே இவர்கள் க்ஷத்ரியர்கள் என்பதால் பூணூல் போடும் மார்ப்புடையவர்கள் என்றும்.

சோழர்கள் இவர்களே என்பதால் புலிக்கொடி பெற்றவர் என்றும்.

சோழநாட்டை காத்து,ஆட்சி புரிந்தவர்கள் என்றும் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
---------------------------------

காடவர்கோன் கழற்சிங்கன்  நந்திவர்மன் III ( கி.பி. 846 - 869):
--------------------------------------------------------------------------------------------

காடவர்கோன் கழற்சிங்கன்

நந்திவர்மன் III ( கி.பி. 846 - 869):
===============
கதம்ப நாட்டு இளவரசிக்கும் நந்திவரமனுக்கும் பிறந்தவன்  மூன்றாம் நந்திவர்மன்.
------------------------------

நந்திகலம்பகத்தின் புகழ்மிகு  நாயகன்.  சிறந்த அறிஞன்.
------------------------------
"பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி" என

நந்திகலம்பகத்தால் புகழப்பட்டவன்.
------------------------------
சிறந்த சிவநெறிச் செல்வன். "சிவனை முழுவதும் மறவாத

சிந்தையான்" என  நந்திகலம்பகத்தால் போற்றப்பட்டவன்.

"சிவனது திரு அடையாளம் நெற்றியில் கொண்ட நந்திவர்மன்"

என வேலூர்ப்பாளைப்பட்டயம்  இவனைப் புகழ்கிறது.
------------------------------
"காடவர்கோன் கழற்சிங்கன்" எனப் பெரியபுராணத்தால்

புகழ்ப்படும் நாயன்மார் இவனே ஆகும்.
------------------------------
"கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்" எனச்

சுந்தரமூர்த்தி நாயனாரால் புகழப்பட்டவன்.
-----------------------------
நந்திவர்மனின் மூப்பாட்டன் நரசிம்மவர்மனுக்குப் பிறகு

"பல்லவர்களின் வலிமையை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டிய பெருமை" உடையவன்.

பல்லவர்களின் பெருமை காத்தவன் இவனே ஆகும்.
-----------------------------
இராட்டிரகூட இளவரசி சங்காவை மணம் முடித்தவன்.

இவனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் இருந்து இவனை

"தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என்ற அடைக்கொடுத்தே கல்வெட்டுகளும்,இலக்கியங்களும் இவனை அழைக்கின்றன.
-----------------------------
காலம் கடந்தாலும் எம் முப்பாட்டன் காடவர்கோன் கழற்சிங்கனான

அக்னிகுலத்தவனின் வரலாறு என்றும் மறைவே மறையாது.
------------------------------

முதலாம் குலோத்துங்கசோழன் (கி.பி. 1070 - 1122): 


===================
கீழைச்சாளுக்கிய வழித்தோன்றலாகிய முதலாம் குலோத்துங்கன் ஆட்சிபீடம் ஏறிமை சோழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.
-----------------------------------
சந்ததியற்ற அதிராஜேந்திரனின் மறைவால் சோழநாடு ஆளூநர் இன்றிக் குழம்பிக் கிடந்த போது வேங்கிநாட்டை ஆண்டு கொண்டிருந்த கீழைச் சாளுக்கிய அரசனும் இராஜேந்திரனின் பேரனுமாகிய முதல் குலோத்துங்கன் கி.பி. 1070 இல் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
-----------------------------------
பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்த விசயலாய சோழனின் "நேர் பரம்பரை ஆட்சி முதல் குலோத்துங்கன் வரவால் முடிவுற்றது" எனலாம்.
-----------------------------------
"சுங்கம் தவிர்த்த சோழ பெரும்பள்ளி உடையான்" என கலிங்கத்துபரணி செயங்கொண்டரால் பாடபட்டவனே.

எம் முப்பாட்டனே பள்ளிகுல வேந்தனே "பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் குலோத்துங்கன்" என்று சிதம்பர புராணத்தில் குறிப்பிடப் பட்டவனே..
-----------------------------------
காடவன் கோப்பெருங்சிங்கனுக்கு மாமனார் ஆனாவனே.

உம் பள்ளி குல படையாட்சிக்கு படைகாவலனாய் வாழ்ந்தவனே.
-----------------------------------
உம் சோழர் படைக்கு உம் பள்ளிகுலவேந்தன் கருணாகரனை தளபதியாக நியமித்து பார் போற்ற செய்தவனே.
-----------------------------------

குலசேகர ஆழ்வார்:


-------------------------------------------------
சேர வம்சத்தை தோற்றுவித்த "குலசேகர ஆழ்வாரை" K.A.Nilakanta Sastri அவர்கள் நேரடியாக "பள்ளி (வன்னியர்)" சமுதாயம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பற்கான ஆதாரம்.
---------------------------------------------------
Book - A Social History Of India
By S.N.Sadasivan
pg.no - 323.
---------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்.

பாயும்புலி பண்டாரவன்னியன்:




மாவீரன் பண்டார வன்னியனின் 213 வது வீர வணக்க நாள் நேற்று.

முழு பெயர் குலசேகரன் வைரமுத்து பண்டார வன்னியன்.

பெரிய மெய்யானார் , கயலாய வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள்.

யாழ் பாண வைப்பமாலை பதிவுகளின் படி சோழ பேரரசின் காலத்தில்
இலங்கையை ஆட்சி புரிய அனுபப்பட்ட வட தமிழகத்து வன்னிய குல தளபதிகளின் வழி வந்தவர்.


வன்னியர் என்பதற்கே வலிமை உடையோர் எனவும் பொருள் கொள்ளலாம்.


1621 ம் ஆண்டு போர்ச்சிக்கிசியர்கள் யாழ்பாணத்தை கைப்பற்றிய போதும் கூட வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியவில்லை.


கடைசி வரை வன்னி பகுதிக்குள் கால் பதிக்க முடியாமலே போர்ச்சிக்கிசியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த்தது.


வன்னிக்குள் முதன் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் ஒப்பிடும் ஒல்லாந்தர்கள் .


1782 ல் வன்னியை  கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர்.


பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார் ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தி உள்ளனர். 
ஆனால் இப்படி  வீரத்துடன் போர் இட்டவர்களை உலகத்தில் அவர்கள் எங்கும் காணவில்லை.


இவ்வாறு ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தும்.


மன்னர் திருகோணமலை மற்றும் வன்னி காடுகள் என இவர்கள் இடை விடா போரை நடத்தி வந்தனர். 


அவர்களில் ஒளி விடும் மாணிக்கமாய் வந்த மாவீரன் தான் பண்டார வன்னியன்.


முல்லை தீவிலிருந்து பண்டார வன்னியனின் வரலாற்று வெற்றிகள் ஏரளாம்.