Tuesday, April 25, 2017
வன்னியா! நீ வன்னியான??
----------------------
வன்னியன் என்ற திமீர் என் இரத்தம்,நாளம்,சதை,உடல்,ஆவி எங்கும் அடங்க வேகத்தில் அனலாய் கொதிக்கிறது.
புருவத்தை உயர்த்தி,நெஞ்சை நிமிர்த்தி கர்வமாய் சொல்வேன் நான் சத்திரியன் என்று.
அறியாதவன் ஆயிரம் சொன்னாலும், புரியாதவன் பொய் என்று சொன்னாலும்,
என் அறியமை இருள் போக்கி,
வெறியோடு சொல்வேன்,
நான் பச்சை "வன்னியகுலக்ஷத்திரியன்டா" என்று.
நான் சொல்ல போகும் வரிகள் ஏது.,
நாம் வன்னியன் வாழ்க்கை நாம் அறியாதது,.
நம் முன்னோர் வளர்த்த வன்னிய சத்திரியமும் இங்கே புரண்டு கிடைக்க போகுதே.,
அன்று ஆண்ட பரம்பரையாகவும் இன்று அடிமையாக தான் வாழ்கின்றோம்.
நம் சொந்தக் காலில் தலை தூக்கி நிற்க சில வழிகள் இன்றித் தவிக்கின்றோம்.
சில நொடிகள் வன்னிய உன்னை உற்றுப்பார்,
உன் மனதில் கேள்விகள் கேட்டுப்பார்,
விஷத் தடைகள் பல தாண்டி,
படைகள் பல வென்ற "சத்திரியன்" போலவ நாம் இருக்கின்றோம்.
ஒரு தடவை இல்லை,
பல தடவை பல லட்சம் நூல்களை தந்தவன் வன்னியன்.
போற்களம் வென்றவன்,
நூற்களம் கொன்றவன்,
ஆதிசிவன் வழி வந்தவன் வன்னியன்.
வன்னியன் என்ற ஓர் இன்முன்டு அவனுக்கென, தனியே க்ஷத்திரிய குணமுன்டு.
தமிழ்தான் அவனின் மொழியாகும்,
அந்த ஆதிசிவனும்,ஆதி நாரயணனும் அவர்களின் வழியாகும்.
சேரன்,சோழன்,பாண்டியன்,பல்லவன் என்ற வழிவந்த வன்னியன் நாம்.
வீர வன்னியகுலசத்திரிய பரம்பரைக்கு சொந்தக்காரர் நாம்.
"கங்கையையும்,கடாரத்தையும்" தன் "பள்ளிபெரும்படையை" அனுப்பி வென்றவன் வன்னியன்.
கலிங்கத்துப்போரில் ஆயிரம் யானைகளை வென்ற வன்னியன் நாம்.
பசுவுக்கு நீதி வழங்கிய "மனுநீதிசோழன்" முதல்,
புறாவுக்கு தன் தசையை கொடுத்த "சிபி சக்கரவர்த்தியின்" வரலாறு வரை.
வன்னியன் புகழ் அறியட்டும் இவ்வுலகம்.
வடமொழி அடைத்த மாமறைக் கதவினை திடமுடன் திறந்த வன்னியம் எனது.
பொல்லப்பிள்ளை அருளால் நம்பி தில்லையிற் கண்ட வன்னியம் எனது.
ஆண்டுகள் பல இங்கு ஓடிச் சென்றாலும், மாண்டு மாண்டு நாம் வீழ்ந்து சென்றாலும், பார்த்து பார்த்து சேர்த்து வைத்த வீரம் எம் இன வன்னியர் வீரம்.
அறிவியல்,விஞ்சானம்,கணிதம்,சாஸ்திரம் சமயம் சடங்கு சமையல் முதலாய்,
வீரம் தியாகம் அன்புடன் அளித்த வன்னியமென புகழுரைப்பேன் நான்.
அன்றொரு காலம் இத்துனை புகழும் பெற்றெடுத்த என் முன் வழித் வன்னியன் வழி வந்த எங்கள் வாழ்க்கையும் இங்கே காற்றாய் கலந்து எப்படி போகுதோ.
ஆதியில் ஆதிசிவனால் வந்தது வன்னியம் தானே பாதியில் வந்தன ஓடட்டும்.
மீதியில் உள்ள வாழ்நாளில் வன்னியம் மட்டும் இங்கே வளரட்டும்.
இன்னல் பல இங்கே எய்திய போதும்,
எதிரிகள் செய்த கலப்பட தீதும்.
அக்னி வன்னிய நீ கலங்கியதில்லை.
காத்தாய் நீயே சத்திரிய தர்மத்தை,
தனி வன்னியம் எதுவும் இல்லை.
தூரோகிகள் கூட இருந்தே சூழ்ச்சிகள் செய்து,
கோடி கணக்கில் பல ஊழலும் செய்தார்கள்.
பாவம் சுமந்த பூதம் தூரோகியே,
பாவி வன்னிய உனக்கான பரிசுத்தம் எங்கே!
உன்புகழ் நீயே பாடியபோதும்,
தன்புகழ் இழந்த இளைய தலைமுறை இடையே,
கள்ளம் கோவம் வஞ்சகம் கொண்டு வன்னியன் புனிதம் வன்னிய நீயே அழிகின்றாயோ..!
வன்னியா! நீ வன்னியான??
இருக்கும் அடையாளம் அனைத்தையும் தொலைத்துவிட்டு,
எதிர்காலத்தில் எதைவைத்து பெருமை கொள்ள போகிறாய் வன்னியா.
மீண்டும் கேட்கிறேன் வன்னியா! நீ வன்னியனாய் வாழ்வயா??
--------
நடராஜனை மகேந்திரவர்மன் சிலை வடிவமைத்துள்ளான்:
ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் இவ்வுலக்கு அளித்த முதல் நடராஜர் சிலை சீயமங்கலம், அவனிபாஜன குடைவரை கோவிலில் உள்ள மகேந்திரவர்ம பல்லவர் கால நடராஜர் சிற்பம்.
கி.பி 6 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குடைவரை கோவில்.
இந்த நடராஜரே பிற்கால சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நடராஜர் சிலையின் முன்னோடி.
செம்பள்ளியார் நடராஜர் இந்த ஆனந்த தாண்டவத்தில் ஒரு பக்கம் அக்கினி(தீ)யையும், மறுப்பக்கம் ஆயுதத்தையும் கொண்டு நடராஜனை மகேந்திரவர்மன் சிலை வடிவமைத்துள்ளான்.
------
---------------------
க்ஷத்திரியசித்தன் மகேந்திரபல்லவன்
-----------------
பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடும் காடவன் குணபரன் க்ஷத்திரியசித்தன் மகேந்திரபல்லவன்:
-------
வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரம் எடுத்தான் மகேயந்திரப்பள்ளி.
-------
பாடல் சொல்லும் விளக்கம்: மகேந்திரபல்லவன் சைவனானது பற்றியது.
=====
நாவுக்கரசர், சமணசமயத்தவனாக இருந்த மகேந்திரவர்மனைச் சைவசமயத்தில் சேர்த்தார் என்று கூறுவர் புலவர்கள். இதற்குப் பெரியபுராணச் செய்யுள் ஆதாரமாக உள்ளது. (செய்யுள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது).
ஆனால்,பெரியபுராணம் மகேந்திரன் பெயரை குணபரன் என்றும். பல்லவ அரசர்களின் பொதுப்பெயராகிய காடவன்,பல்லவன் என்னும் பெயர்களை குறிப்பிடுகிறது.
பாடலில், காடவ அரசன் சைவ சமயத்தைச் சேர்ந்தபிறகு பாலிப்புத்திரத்திலிருந்து சமணக்பள்ளியை(கோவிலை), (அப்பர் தரும் சேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த அதே சமணப்பள்ளியை) இடித்து அந்தக் கற்களைக் கொண்டுப்போய் திருவதிகைச் சிவன் கோயிலிலே குணபரவீச்சரம் என்னும் கோயிலை கட்டினான் மகேந்திரன் என்று பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
பெரியபுராணச் செய்யுளில் சேக்கிழார் குணதர வீச்சரம் என்றே கூறியுள்ளார். குணதரன் என்னும் அரசன் கட்டிய கோயில் என்பதே இதன் பொருள். குணதரன் என்னும் பெயர் குணபரன் என்ற பெயரின் மரூஉ என்றும், ஆகவே குணபரன்,குணதரன் என்னும் இரண்டு சொற்களூம் ஒரெ அரசனைக் குறிக்கின்றன.
குணபரன் மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்களில் ஒன்று ஆகும்.
ஆகவே, அப்பரால் சைவனாக்கப்பட்டவன் மகேந்திரவர்மன் தான் என்றும், அவ்வரசனே தனது சிறப்புப் பெயராகிய குணபரன்('குணதரன்') என்னும் பெயரால் குணதர வீச்சரம் கட்டினான் என்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று ஆகும்.
அய்யா மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய "மகேந்திரவர்மன்" என்னும் புத்தகத்தில் பக்கம் 37 மற்றும் 47'ல் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
---------
ஏன்னெவென்றால், ஒரு சில வரலாற்று திருட்டு பெருச்சாளிகள் பிற்காலத்துப் சோழ பேரரசுக்கு உட்பட்டு இருந்த காடவராய மன்னர்களே காடவர்களின் முதல் தோற்றம் என்று புலுவிக்கொண்டு சுற்றுவது தவறானது என்று சொல்லப்படுகிறது.
ஏன் என்றால்? காடவன் என்பது பல்லவ அரசர்களின் பொதுப்பெயர் என்று மகேந்திரவர்மனை பற்றி பாடிய சேக்கிழார் பெருமான் தெளிவாக எடுத்துரைத்து உள்ளார் கி.பி 6ம் நூற்றாண்டிலே தன்னுடைய பெரியபுராணத்தில்.
இதிலிருந்து காடவ பள்ளிகளே பல்லவர்கள் என்று தெள்ள தெளிவாக தெரியவருகிறது.
பிற்கால காடவ மன்னர்களில் சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த காடவன் கோப்பெருங்சிங்கன் சோழ அரசனான தன் மாமன் மூன்றாம் இராஜராஜனையே சிறைப்பிடித்தான் என்பது வரலாறு.
---------
மனுநீதி சோழன்
---------------
மனுதர்மத்தோடு பூணூல் பெற்று ஆட்சி புரிந்த
புலிகொடியின் முதல் மைந்தன் மனுவே.
அக்னி என்னும் தூயத்தில் உதித்த சூரியனின்
மகனே மனு.
மனுவே தர்மத்துக்கு முதல் தோற்றம் அவனே
சோழனின் முதல் தோற்றம்.
இம்மனுவாலே பிற்காலத்தில் மனுநீதிசோழன் என்னும் சோழ அரசன் மனு தர்மத்தோடு ஆட்சி புரிந்தான் என்பதே வரலாறு
மனுவின் தர்மத்தை கடைப்பிடித்து அவன் வழி
வந்து ஆட்சி செய்தவர்களே செ(வ)ன்னி
என்னும் செந்ஞாயிற்று குல க்ஷத்திரிய
சோழர்கள்.
மனுவின் அப்பன் சூரியன்.
சூரியனின் அப்பன் அக்னியின் விருட்சமான
சிவனே.
அதனாலே, சோழகுலத்தின் அப்பனாக
செம்பள்ளியேன் சிவன் போற்றப்பட்டான்.
"சோழர்குலம் மனுவால் தோற்றம் பெற்று,
இசவாகுவால் விருட்சம் பெற்று,
முசுகுந்தசோழனால் வளர்ச்சி பெற்று,
பரதனால் ஆளப்பெற்று,
இராசகேசரி,பரகேசரியால் புலிகொடி புவனம்
முழுவதும் ஓங்கப்பெற்று,
வியாக்ரகேது சோழனால் தில்லையில்
முடிப்பெற்று,
கொடியும்,முடியும் உயிர்
மூச்சனே வாழ்ந்த "க்ஷத்திரிய சிகாமணி"
ராஜராஜனால் பொலிவு பெற்று வந்ததே எம்
சோம,சூரிய,அக்னிவம்ச சோழர்குலம்.
கொடிக்கும்,முடிக்கும்,கொடைக்கும்,படைக்கும் எப்போதுமே எம் வன்னியகுலக்ஷத்ரியகுலமே மேன்மை.
---------
பெரும்பள்ளிமார்'களின் மாபெரும் கலை பொக்கிஷம்:
பெரும்பள்ளிமார்'களின் மாபெரும் கலை
பொக்கிஷம்:
=====
சிலை 1: நந்திவர்மபல்லவனால் கி.பி 7ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட காஞ்சி வைகுந்த
பெருமாள் கோவில் கற்பகிரக பின் சுவற்றில்
உள்ள சிலை.
பள்ளிகொண்டநாதர் திருமால்
நந்திவர்மபல்லவருக்கு முடிசூடும் காட்சி.
-----------------------------------------
சிலை 2: அனைவரும் அறிந்ததே!
கங்கைகொண்டசோழீஸ்வரர் கோவிலில்
சண்டிகேஸ்வர செம்பள்ளியார்
இராஜேந்திரசோழனுக்கு முடிசூடும் காட்சி.
---------------------
சிவம் நமக்கு அப்பன், அறி நமக்கு மாமன்.
இதனையே பல்லவனும்,சோழனும் பெண்
கொடுத்து பெண் எடுத்தான் என்பது வரலாறு.
வரலாறு மறந்த எந்த ஒரு இனமும் வரலாறு
படைக்க முடியாது.
------
மாமல்லன் நரசிம்மவர்மபல்லவன்:
-------------------
மாமல்லன் நரசிம்மவர்மபல்லவன்:
=====
நரசிம்மவர்மபல்லவன் முதலாம் மகேந்திரவர்மரின் மகன்.
மாமல்லை என்னும் மாபெரும் கலை கூடத்திற்கு அடித்தளம் இட்டவன் இவனே.
அதனாலே இவன் மாமல்லன் என்னும் சிறப்புபெயரை பூண்டுகொண்டான்(1).
-------
வாதாபி தலைநகர சாளூக்கிய மைந்தன் புலிகேசியை வெற்றிக்கொண்டு வாதாபி கொண்டான் என்றும் நரசிங்க போத்தைரையன் என்னும் பட்டங்களால் மக்களால் போற்றப்பட்டவன். இன்றும் அவனுடைய 13 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு வாதாபியில் உள்ளது(2).
-------
இலங்கை மண்னை ஆண்ட மானவர்மனுக்கு போரில் துணையாக தன் கப்பற்படையை இருமுறை ஈழத்திற்கு அனுப்பியவன். நரசிம்மன் தன் படையை அனுப்பிய இரண்டு முறையும் அவன் வெற்றிக்கொண்டான். சிம்மரின் படை மாமல்லையை வந்த அடைந்த பிறகு சிறிது காலத்தில் நயவஞ்சக்கத்தால் மானவர்மன் தோற்கடிக்கப்பட்டான்.
அதே மானவர்மன் போரில் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியை வந்தடைந்த போது அவனுக்கு அடைக்களம் தந்தவன் நரசிம்மவர்மனே(3).
-------
நரசிம்மவர்மரின் படைத்தலவனாக இருந்தவன் காடுவெட்டி பரஞ்சோதி தொண்டைமான் ஆகும். இவர் தான் மகேந்திரவர்மரின் மருமகன் ஆவார். வாதாபி போருக்கு தலைமை தாங்கியவரும் அவரே. அப்போரில் இலங்கை மன்னன் மானவர்மனும் பங்கு பெற்று இருந்தான்(4).
-------
யுவன்சுவாங் (அ) இயன்சிங் என்னும் சீனநாட்டு எழுத்தாளன் நரசிம்மவர்மனின் காலத்தில் காஞ்சியை வந்து அடைந்தான் என்பது வரலாறு(5).
-------
நரசிம்மன் காலத்தில் மாமல்லை கலைகூடம் ஆக்கப்பட்டது.மகேந்திர வர்மரை போலவே குடைவரைக்கு பெயர் போனவன் நரசிம்மவர்மனே(6).
-------
காஞ்சி கயிலாசநாதனுக்கு இவன் பேரன் இரண்டாம் நரசிம்மன் ஆனா, இராஜ்சிம்மனே அடிதளமிட்டு கற்றளியை எடுபித்தவன். நரசிம்மவர்மனின் கால சிறபங்களே அதிகம் மாமல்லை ஆன தற்போதைய மாமல்லபுரத்தை தாங்கி நிற்கிறது(7).
-------
சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெறும் வன்னிய குல பல்லவ மன்னர்களின் பெயர்கள்:
--------------------
சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெறும்
வன்னிய குல பல்லவ மன்னர்களின் பெயர்கள்:
======
சோழர் காலக் கல்வெட்டுகளில், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த 'முதலாம் காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனும்' மற்றும் அவனது மகன் 'இரண்டாம் காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனும்' பல பெயர்களில் குறிப்பிடப்பெற்றிருக்கிறார்கள். இதுபோல பல பெயர்களைப் பெற்ற மன்னர்கள் இந்திய வரலாற்றிலேயே வெகுசிலரே ஆவர்.
"ஆளப்பிறந்தான் ராஜகம்பீர காடவராயனான அழகிய பல்லவன் சாடும் பெருமாள்" (Aalappirandan Rajagambhira Kadavarayan (alias) Alagiya Pallavan Sadumperumal).
"திபுவனாத்தி ராஜாக்கள் தம்பிரான்"
(Tribhuvanaati Rajakkal Tambiran)
"பல்லவர் பெருமான்"
(Pallavar Peruman)
"சகலபுவன சக்கரவர்த்தி"
(Sakala Bhuvana Chakkravarthi)
"கூடல் அவனிஆளப்பிறந்தான்"
(Kudal Avaniyalppirandhan)
"காவலர் தம்பிரான்"
(Kavalar Tambiran)
"பரதம் வல்லப்பெருமாள்"
(Bharatam Vallaperumal)
"மல்லை காவலன்"
(Mallai Kavalan)
"நிசங்க மல்லன்"
(Nisanka Mallan)
"அழகிய சியன்"
(Alagiya Siyan)
"அவனி நாராயணன்"
(Avani Narayanan)
"செந்தமிழ் வாழப்பிறந்த மிண்டன் சியன்"
(Sentamil Vazhappiranda Mindan Siyan)
"நிருபதுங்கன்"
(Nirupathungan)
"சொக்கச் சியன்"
(Sokkachchiyan)
"சொக்கப் பல்லவன்"
(Sokkappallavan)
"காடவா"
(Kadava)
"தொண்டை மன்னவன்"
(Tondai Mannavan)
"மல்லை வேந்தன்"
(Mallai Venthan)
"சியன்"
(Siyan)
"ஜிய மஹிபதி"
(Jiyamahipati)
"காடவ குமாரன்"
(Kadava Kumaran)
"அழகிய பல்லவன் வீரராயனான கச்சியராயன்"
(Alagiya Pallavan Virarayan (alias) Kachchiyarayan)
"பல்லவர் கோன்"
(Pallavar Kon)
"காடவர் கோன்"
(Kadavar Kon)
"பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்"
(Penu Sentamil Vazhappirantha Kadava Kopperunjingan)
"பரதம் வல்லான்"
(Bharatam Vallan)
"விருதரில் வீரன்"
(Virudaril Viran)
"ஆட்கொண்ட தேவன்"
(Atkonda Devan)
"காங்கேயன்"
(Kangeyan)
"வீரராயன் வேணாடுடையான்" (வேள் நன்னன் நாடு என்பது தான் வேணாடானது என்று அறிஞர் கருத்துரைத்துள்ளார்கள்)
(Vira Rayan Venadudaiyan)
"வாள் வல்லப் பெருமாள்"
(Val Valla Perumal)
"தமிழ்நாடு காத்தப் பெருமாள்"
(Tamil Nadu Kattaperumal)
"பரதம் வல்லப் பெருமாள்"
(Bharatam Valla Perumal)
"கனகசபாபதி சபா சர்வகார்ய சர்வகால நிர்வாஹா"
(Kanakasabhapati Sabha Sarvakarya Sarvakala Nirvahaha)
"பரத மல்லா"
(Bharata Malla)
"சாஹித்திய ரத்னாகரா"
(Sahitya Ratnakara)
"பல்லவ குல பாரிஜாதா"
(Pallava Kula Parijatha)
"காடவ குல சூடாமணி"
(Kadava Kula Chudamani)
"அவனி பாலன ஜாதா"
(Avani Palana Jata)
"கண்ட பண்டார லுண்டகா"
(Ganda Bhandara Luntaka)
"சேதிராஜ கிரிதுர்க மிகடா"
(Chediraja Gridurga Migada)
"க்ஷிராபகா தக்ஷிண நாயகா"
(Kshirapaga Dakshina Nayaka)
"காவேரி காமுகா"
(Kaveri Kamuka)
"பெண்ணாடி நாதா"
(Pennadi Natha)
"மல்லாபுரி வல்லபா"
(Mallapuri Vallabha)
"காஞ்சிபுரி காந்தா"
(Kanchipuri Kanta)
"ஜெகதீக வீரா"
(Jagadeka Vira)
"வீர வீரன்"
(Vira Viran)
"பல்லவாண்டார்"
(Pallavandar)
"ஏழிசை மோகன் பல்லவாண்டார்"
(Elisai Mogan Pallavandar)
"அழகிய பல்லவனான கச்சியராயன்"
(Alagiya Pallavan (alias) Kachchiyarayan)
"அழகிய சியனான தமிழ்நாடு காத்தான்"
(Alagiya Siyan (alias) Tamil Nadu Kattan)
"ஆணைக்கு அரசுவழங்கும் பெருமாள்"
(Anaikku Arasuvazhangum Perumal)
"வீர பிரதாபர்"
(Vira Prathapar)
"புவனேகவீரா"
(Bhuvanegavira)
"அழகிய பல்லவா"
(Alagiya Pallava)
"சர்வஜ்னா"
(Sarvajna)
"க்ரிபான மல்லா"
(Kripana Malla)
"காடவ குல திலகா"
(Kadava Kula Tilaka)
"கர்னராஜ மானமர்தனா"
(Karnarajamanamardana)
"சோழ குல கமலாக்கர திவாகரா"
(Chola Kula Kamalakara Divakara)
"பாண்டியராய ஸ்தாபன சூத்ரதாரா"
(Pandyaraya Sthapana Sutradhara)
"சகலகுண ரத்னாகரா"
(Sakalaguna Ratnakara)
"மஹாராஜ சிம்ஹா"
(Maharaja Simha)
"கோ நந்திபன்மன்" (கோ நந்தி வர்மன்)
(Ko-Nandi Panman)
"காஞ்சி நாயகா"
(Kanchi Nayaka)
"கலா நாட்டாக்கிய வேதாம் பூதி"
(Kala Nattakya Vedam Pudi)
"பிரதார்நாய பரீனன்"
(Pratarnaya Parinan)
"சைரச சாஹித்திய சாகர சாம்யாத்ரியம்"
(Sairasa Sahitya Sakara Samyatriyam)
"பரதார்நவ கர்ணாதாரன்"
(Paratarnava Karnataran)
"சர்வாக்ன சாஹித்திய ரத்னாகரா"
(Sarvagna Sahitya Ratnakara)
மேற்குறிப்பிட்ட இந்த பல்வேறு பெயர்கள், வன்னிய குல பல்லவ மன்னர்களின் புகழினையும் பராக்கிரமத்தையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
----- xx ----
Thanks to Dr. M.S. Govindasamy Sir. Sir has given all these names in his book, 'The Role of Feudatories in Later Cholas History'. I have collected all those and translated in Tamil.
Foot Notes :-
=======
1. A.R.E. No.496 of 1937-38.
2. A.R.E. Nos.140, 142 of 1939-40.
3. S.I.I. Vol-VIII, No.69.
4. S.I.I. Vol-XII (Many Inscriptions)
5. Epigraphia Indica, Vol-XXIII, Pages 180 & 181.
6. S.I.I. Vol-VII, Nos. 206, 230, 246, 247, 261, 830.
7. Tirupathi Devasthanam Inscription, Vol-I, No.203.
8. S.I.I. Vol-IV Nos.1341, 1342, 1342a. (Draksharama Inscriptions, AP)
----- xx ---
THANKS : N. Murali Naicker ANNA
------------
ராஜஸ்தான் சிரோகி அரசர் ரகுவீர்சிங் சாவகான் ராஜ்புத் அவர்களுடன் முதல் சந்திப்பு:
--------------------
ராஜஸ்தான் சிரோகி அரசர் ரகுவீர்சிங் சாவகான் ராஜ்புத் அவர்களுடன் முதல் சந்திப்பு:
========
திகைப்பின் உச்சம் இந்தியாவுல இன்னமும் அரசாங்க பதிவுல சிரோகியோட ராஜாவ இருக்குறதுனா சும்மாவ.
தமிழ்நாட்டுல தெருவில் போற வரவன் எல்லாம் தன்ன ஆண்ட பரம்பரைனு புத்தி பேதிலிச்சிக்கிட்டு திரியுறானுங்க.
முக்கியமா அப்படி சொல்ற எவனுக்கும் உண்மைய தொண்டி பாத்தா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.
--------
என்னோட நீண்ட நாள் ஆசை இந்த சத்திரியர சந்திக்கனும் அப்படினு எதனால எனக்கு அந்த எண்ணம் வந்ததுனா அவரோ சத்திரிய மகாராஜர் நானோ சத்திரிய குலத்தின் மூத்தக்குடி அக்கினி குடியின் மைந்தன் அல்லவா அதனாலே நீண்ட நாள் கானகவே இருந்தது.
இன்னொரு காரணமும் இருக்கு அவர நான் சந்திக்க விரும்புனத்துக்கு அதுதான் அவர பாக்க தூண்டுதல அமைந்தது அப்படினு கூட சொல்லலாம் என்ன காரணம் என்றால் நான் எனக்கு தெரிந்த என் சமூக வரலாற இந்த முகநூல் வாயிலாக ஒரு 3 வருசமா பதிவு செஞ்சிக்கிட்டு வரேன்.
இந்த காரணத்தால தமிழ்நாட்டுல எந்தவொரு சமூகத்துக்கும் சேர சோழ பாண்டியன் பல்லவனோட வன்னியர்களை தவிர வேறு எவருக்கும்ட் துளிக்கூட தொடர்ப்பு இல்லை அரச பரம்பரை என்று சொல்வதற்கு ஆனால் அதையும் இந்த தமிழ்நாட்டுல நிறைய சமூகம் வன்னியர்களோட பெருமைக்கே அடிச்சிக்கிட்டு நிக்கிறாங்க அத நினைச்சா தான் செம சிரிப்பா இருக்கு.
இப்படி இருக்குற தருவாயில் என் சமூகத்துக்கான வரலாற்றை மாற்றான் தன்னுடையது சொல்லி பெருமை தேடும் பட்சத்தில் நான் அங்கு சென்று வாதாம் செய்வது வழக்கம் ஆயிற்று.
அதனால் நான் அவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி ஏன்பா தமிழ்நாட்டுல வன்னியர்கள் மட்டும் தான் சத்திரியர்கள் மத்தாவங்க யாருமே சத்திரியன் இல்லையே அப்படி இருக்க ஏன்பா என் சமூக முன்னோர்களுக்கு இப்படி அடிச்சிகிட்டு நீக்கிறீங்க கேட்கும் போது,
அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீ சத்திரியன் தான? பள்ளி பையன் சத்திரியன் தான? முடிஞ்சா வடநாட்டு சத்திரியர்கள் ஆனா ராஜ்புத்திரர்கள் கூட முடிஞ்ச அவங்க வாயால தென்னகத்துல வன்னியர் தான் சத்திரியனு சொல்ல வைய் நான் விலகிறேன்னு சொன்ன திருட்டு கும்பல் தான் என்னோட இந்த உத்வேகம்னு கூட சொல்லலம்.
---------
தமிழகத்தில் இன்று சத்திரியர் என்று சொல்லிக்கொண்டு உலா வரும் மரமேறி என்றும் பொட்டலம் கட்டும் பயல்கள் என்று சொல்லப்படும் ஒரு சமூகம் இவரை ராஜ ரகுவீர்சிங்கை அழைத்து தமிழகத்தில் தாங்கள் தான் சத்திரியர்கள் என்று பெருமை தேடிக்கொள்ள எவ்வளோ முயற்ச்சி செய்த போதும் பணம் இருந்தும் ஒன்னும் வேலைக்கி ஆகல அதனால அந்த வேலைய நிறுத்திக்கிட்டு.
சரி வடநாட்டு சத்திரியன் தான் வரமாட்ட இருக்கான் சரி தென்னாட்டு சத்திரியர்களான வன்னியர்களை வைத்து பிரகடான படுத்தலானு யோசிச்சானுங்க அதுவும் நடந்தேறியது 2 மாதங்களுக்கு முன்பு அப்படி இருந்தும் ராஜபுத்திரர் உடன் தங்கள் மூக்கு அறுப்பட்டதே இவர்களுக்கு மிச்சம்.
--------
ராஜ்புத் அவர்களோட சந்திப்புக்கு வருவோம்:
=====
நான்:முதல் சந்திப்பு மன்னரோட பேசுன முதல் வார்த்த சார் நான் உங்களோட பெரிய சத்திரிய ரசிகன்.
ராஜ்புத் மன்னர்: நாம சத்திரியர்கள் அதானால நம்மள நாமலே புகழ்ந்துக்க கூடாது
நான்: சரிங்க சார் இருந்தாலும் நீங்க இந்த வன்னியகுல க்ஷத்திரிய நிகழ்ச்சில கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றிகள் சார்.
ராஜ்புத் மன்னர்: நான் இங்க வந்து என்னோட இரத்த உறவுகளோட கலந்துகிட்டதுக்கும் ரொம்பவும் சந்தோச படுறன்.
நான்: சரிங்க சார் அப்படினு சிரிச்சிக்கிட்டே அவர் பக்கம் நின்னன்.
ராஜ்புத் மன்னர்: உன்னோட பேர் என்னப்பானு கேட்டார்?
நான்: விமல் வர்மன் சார்.
ராஜ்புத் மன்னர்: ஓ விமல் வர்மன். வர்மன் என்பது நம்ம சத்திரியர்களோட கொடி வழி பெயர் அப்படினு என் கண்ணத்துல இரண்டு தட்டு தட்டி கிரேட் மேன் விமல்வர்மா அப்படினு சொல்லி ஆசிர்வாதம் பண்ணாரு.
நான்: அந்த செகன்ட் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.
கடைசியா போகும் போது அவர் என்ன கூப்ட்டு "I Really Proud to be u man , Ur just an Small chilld bt ur greatful kshatriya Orgin".
I proudly say Vimal Varma ur an good Younger Generation Kshatiya Orgin.
---------
நாட்டுல எவன் வேணுனாலும் ஆண்ட பரம்பரனு தம்பட்டும் அடிச்சிக்கிட்டு சுத்துலாம் உண்மையான ஆண்ட பரம்பரைக்கு தெரியும் எவன் ஆண்ட பரம்பரை எவன் ஆளாத பரம்பரனு.
எங்கிட்ட இன்னிக்கி பணம் இல்லாம போகலாம் ஆனா சத்திரியன் அப்படின்ற இரத்தம் இல்லாம போகல.
தில்லா கர்ஜித்து சொல்லுவன்டா நானும் வன்னியகுலக்ஷத்திரிய ராஜ்புத்திரன் தான்டா..!
-----------
நான் அவரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த அண்ணன் மணிகவுண்டர்,பெங்களூர் ஜெய் சத்திரியன் பத்திரிக்கை நிறுவரும் , அகில இந்திய க்ஷத்திரிய மகாசபையின் தென்னக தலைவருமான அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வாய்பினை ஏற்படுத்தி தந்த "சத்திரிய சாம்ராஜ்"யத்திற்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
---------
க்ஷத்தியசிகாமணியன் இராஜராஜனின் பட்டப்பெயர்கள்
----------------
இராஜராஜசோழன் (எ) அருள்மொழிவர்மனின் பட்டப்பெயர்களில் முக்கியமானவை:
**********
1)அருள்மொழிவர்மன்(தேவன்) .
2)அழகியசோழன்.
3)ரவிகுல மாணிக்கம்.
4)ரவிவம்ச சிகாமணி.
5)ராசகேசரிவர்மன்.
6)சிவபாத சேகரன்.
7)க்ஷத்திரிய சிகாமணி. 8)ஜெயங்கொண்டசோழன்.
9)பெரும்பள்ளிசோழன்.
10)மும்முடி சோழன்.
----------
ராஜராஜனின் இதர பட்டப்பெயர்கள்:
======
11)அபயகுலசேகரன்.
12)அறிதூர்கலங்கன்.
13)இரண்முக பீமன்.
14)ராஜகண்டியன்.
15)ராஜ சர்வகங்கன்.
16)ராஜராஜன்.
17)ராஜசரையன்.
18)ராஜவீனோதன்.
19)ராஜேந்திரசிம்கன்.
20)பெருவுடையான்.
21)உத்துங்க துங்கன்.
22)உயக்கொண்டான்.
23)உலகளந்தான்.
24)கீர்த்தி பாரகிரமன்.
25)கேரளந்தகன்.
26)சந்திரபாரக்கிரமன்.
27)சதுருபூஜகன்.
28)சிங்களந்தகன்.
29)சோழகுலசுந்தரம்.
30)சோழ மார்தாண்டன்.
31)சோழ நாரயணன்.
32)சோழேந்திரசிம்கன்.
33)திருமுறை கண்ட சோழன்.
34)தெலுங்கு குல காலண்.
35)தைல குல காலண்.
36)நிகரிலி சோழன்.
37)நித்திய வினோதன்.
38)பண்டிதசோழன்.
39)பண்டித குலசினி.
40)பெரிய பெருமாள்.
41)மூர்த்த விக்ரமபரனன்.
42)ஜென நாதான்.
------
க்ஷத்தியசிகாமணியன் இராஜராஜனின் பட்டப்பெயர்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
------
இராஜேந்திரசோழன் இராஜகேசரிவர்மன்:
-------------------
இராஜேந்திரசோழன் இராஜகேசரிவர்மன்:
=======
வன்னியபுரம் என்னும் சிறு குக்கிராமத்தை உன் ஆட்சி காலத்திலே மாபெரும் சோழர்களின் தலைநகராக்கியவனே.
உம் பெரும்படையாம் பள்ளிவாழ்(ள்) போர்படையின் கங்கை நாட்டின் வெற்றியால் உம் வன்னியபுரத்தையே தலைமையாக கொண்டு மாபெரும் கற்றளியை எடுபித்து அக்கற்றளிக்கு கங்கைகொண்டசோழீஸ்வரர் என் பெயர் சூட்டி வன்னியபுரத்தை கங்கைகொண்டசோழபுரம் ஆக்கிய பெரும்பள்ளியே.
உம் அப்பன் இராஜராஜனும் செய்யாத ஒப்பற்ற புனிதத்தை உம் படையாட்சிகளுக்கு வித்திட்டு சென்றவனே.
ஆயிரம் ஆண்டாய் வன்னிமர விருட்சத்தை உம் மக்களுக்காக உம் கற்றளியில் நட்டு சென்ற ராஜகேசரிவர்மனே.
இராஜராஜபெரும்பள்ளியாரும் செய்யாத பெருமையை உம் மக்களுக்காக மட்டுமே வித்திட்டு சென்ற செம்பொன்பள்ளியார் சிவனின் மகனே.
நீ கட்டிய கற்றளி ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்றும் உம் படையாட்சிகளின் பிடியிலையே உம் பாரம்பரியம்.
---------
ஹொய்சாள பேரரசன் வீரவல்லாள மகாராஜன்
-------------------------
வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தில் உதித்த ஹொய்சாள பேரரசன் வீரவல்லாள மகாராஜனின் மகனாக அவதரித்த அண்ணாமலையார், மாசி மகத்தன்று (11.03.2017) தன் தந்தைக்கு சிவன் பள்ளிக்கொண்டாப்பட்டு கெளதம நதிக்கரையில் திதி கொடுக்கும் திருக்கர்ம கிரியைக்கு வருகை தருமாறு வரவேற்கிறோம்.
வன்னிய குல க்ஷத்ரிய வீரவல்லாள மகாராஜனின் மகன் அண்ணாமலையார் நடத்தும் 98வது திருக்கர்மகிரியை மாசி மகம்.
இடம்:பள்ளிக்கொண்டாப்பட்டு கெளதம நதிக்கரை.
----------------------------
--------------------------
சம்புவராயர் - சம்புவராயபட்டணம்
-------------------------
சம்புவராயர்களின் வீரத்தின் விருட்சமாய் நிற்கின்ற சம்புவராயபட்டணமே இன்றைய திருவண்ணாமலை.
சம்பு - சிவன்; ராயன் - வீரன்(அரசன்);
பட்டணம் - மேம்பட்ட நகரம் (அ) இடம்.
சம்புவராயன் - சிவனின் தீ(நெற்றிக்கண் உதிரத்தில்) உதித்தவன்.
முருகபெருமான்(கந்தன்) - சிவனின் நெற்றிகண்ணால் உதித்த தீதழல்குலத்தவன்.
சிவனின் அக்னிஸ்தலமே திருஅண்ணாமலை எனப்படும் சம்புவராயபட்டணம்.
--------
"வன்னியம்" "க்ஷத்திரியம்
"வன்னியம்" "க்ஷத்திரியம்" கால வரைவு கடந்து நம் கண்ணே எதிரே நிற்கும் பொக்கிஷம்.
வன்னியத்தை விடுத்து வீரியம் கொண்டு எழுந்தாலும் அதற்கு பயனில்லை.
வன்னியம் தீ என்னும் ருத்தீரத்தில் உருவான பொக்கிஷம்.
வன்னியம் சூரனை அழிக்க சத்திரியனாய் புவியில் மலர்ந்த பொக்கிஷம்.
வன்னியம் நெருப்பு என்னும் அக்கினியை போற்றி நிற்கும் பொக்கிஷம்.
வன்னியம் சிவனின் ருத்தீரத்தில் உருவான பொக்கிஷம்.
வன்னியம் வேள்வி என்னும் தாடகையில் வேளிராய் வெகுடெழுந்த பொக்கிஷம்.
வன்னியம் மனு என்னும் தர்மத்தை காத்து நின்ற பொக்கிஷம்.
வன்னியம் தில்லையிற் கண்ட திருவாய் மொழியின் பொக்கிஷம்.
வன்னியம் புறாவுக்கு நீதி வழங்கிய பொக்கிஷம்.
வன்னியம் அரி என்னும் அரிசந்திரனை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிசோழன் பிறப்பெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் போர் என்னும் குருதியில் மாபெறும் பேரரசுகளை உருவாக்கிய பொக்கிஷம்.
வன்னியம் சுந்தரபாண்டியனால் முதன் முதல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பொக்கிஷம்.
வன்னியம் திருநீலக்கண்டனின் ஆவதாரமான சுந்தரபாண்டியனை புவியில் பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் வீதிகளை தாண்டி கோட்டை மதில்களை காத்து நின்ற பொக்கிஷம்.
வன்னியம் போர் என்னும் பெயருக்கே போர் மன்னான போத்தரசனை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் கச்சி என்னும் காஞ்சியில் நரசிம்மம் எனும் பல்லவனை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் தில்லையில் எம் திருமொழியை அருள்மொழிவர்மனால் நிலைநாட்டிய பொக்கிஷம்.
வன்னியம் காடரத்தையும் தன் வசம் கொண்டு ஆட்சி செய்த பொக்கிஷம்.
வன்னியம் திருகைலாயம் என்னும் இமயத்தில் புலிக்கொடி நாட்டிய பொக்கிஷம்.
வன்னியம் இமயத்தில் இருந்து கல் எடுத்து சிலை வடித்த பொக்கிஷம்.
வன்னியம் சம்புகண்டனே பிள்ளையாய் பிறந்த வல்லாள மகராஜனை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் மலையை குடைந்து கோவிலை கட்டிய பல்லவனின் பொக்கிஷம்.
வன்னியம் கங்கைகொண்ட கங்கைகொண்டசோழீஸ்வரர் அமைத்த பொக்கிஷம்.
வன்னியம் பொள்ளா பிள்ளையாய் பள்ளிக்கொண்ட நாதனை தில்லையில் இருந்து மல்லையில் கவிழ்த்த சோழன் கொண்ட பொக்கிஷம்.
வன்னியம் மேருமலையின் வடிவம் கொண்ட ஆங்கூர்வாட் உலக பெரிய ஆலயத்தை தந்த பொக்கிஷம்.
வன்னியம் காவிரி தாயின் மடியிலேயே கல்லனையை தவழவைத்த பொக்கிஷம்.
வன்னியம் மல்லையில் சிம்மேஸ்வரம் தந்த பொக்கிஷம்.
வன்னியம் பொல்லாபிள்ளைகாளான போர்குணம் கொண்ட மகாபள்ளிகளை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் உலக அதிசய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டி தந்த பொக்கிஷம்.
வன்னியம் விதியே போனாலும் வீரத்தோடு வாழவைத்த பொக்கிஷம்.
வன்னியம் ஒளவைக்கு ஆயுள் நீள நெல்லிகனி அளித்த அதியேனை பெற்றெடுத்த பொக்கிஷம்.
வன்னியம் சேரன் திருவாய் மொழிக்கொண்டு பள்ளிகள் என்று அழைத்துக்கொண்ட பொக்கிஷம்.
வன்னியம் வீரத்தையே விளைநிலமாய் நிலைநாட்டிய பொக்கிஷம்.
வன்னியம் என் ஆயுளே கடந்தாலும் எம் உதிரத்தின் போர்குணம் கொண்டவனாய் வளர்க்கும் பொக்கிஷம்.
வன்னியம் தூவரகையின் முதல் குடி.
வன்னியம் குமரிகண்டத்தின் ஆதிசிவன் குடி. வன்னியம் தமிழ்குடியின் மூத்தகுடி.
வன்னியம் சிவனே அவனுக்காக உருவாக்கிய முதல் குடி.
வன்னியம் செல்வ செழிப்பாய் வாழ்ந்த குடி.
வன்னியம் சத்திரியத்தின் மூத்த அக்னி குடி. வன்னியம் சூரிய,சந்திரனின் ஆதிக்குடி. வன்னியம் ஆதிசிவனுக்கே உகந்த குடி. வன்னியம் பெருமளால் வளர்த்த குடி.
வன்னியத்திற்கு வன்னியமே (தீ)மிர்.
-----------
வேளிர்(அக்னி) இருக்கவேள் அரசர் || புறநானூற்று இலக்கியம்:
புறநானூற்று இலக்கியம் போற்றும் வேளிர்(அக்னி) இருக்கவேள் அரசர்:
======
"நீயே, வடபால் முனிவன் தடவினூள்(அக்னிகுண்டத்தில்)தோன்றிச்,
செம்புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை, உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே!"
======
புறநானூறு பாடல் குறிப்பிடும் வேளிர் அரசர்களின் தோற்றம்:
======
பலருக்கு புறம் 201 பாடல் என்றாலே பயம் வந்துவிடும். உடனே அவர்கள் அது "அக்னி குண்டம் இல்லை", நான்கு மலைகளின் இடைப்பட்ட பகுதி என்று சம்பந்தமே இல்லாத கருத்தை வலிந்து சொல்லுவார்கள்.
தடவு என்றால் "ஓமகுண்டம்" என்பது தான் பொருளாகும். பல சான்றுகள் க்ஷத்ரியர்கள் "ஓமகுண்டத்தில் இருந்து பிறந்தார்கள்" என்று சொல்வதால், தடவு என்பது "ஓமகுண்டமே" ஆகும்.
யாரவது நான்கு மலையின் இடையில் தோன்றுவார்களா ? சங்கத் தமிழ் புலவர் கபிலர் என்ன அறிவு இல்லாதவரா ?
புலவர் கபிலர் சொன்னது "நானோ அந்தணன், நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்று தான் சொன்னார்கள். அதாவது நான் "பிராமணன்", நீயோ "அக்னி குண்டத்தில் தோன்றிய க்ஷத்ரியன்" என்று தான் சொன்னார்கள் :-
"பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர் யானே
தந்தை தோழ னிவரென் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்"
பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறியவேண்டும்.
----------
நச்சினார்கிகினியர் மூல உறையின்படி, வேளிரென்பவர் கண்ணன் வழியினராயின், அவரை நாம் யாதவர் என்றே அழைக்கலாம்: என்னெனின்-- அப்பெருமான் அவதாித்த யது வம்சத்திலென்பது அனைவரும் அறிந்தது.
இனி, இவ்வேளிர் துவாரகையினின்று தென்னாடு புகுந்த பழைய யாதவராயின், அன்னோர்வரலாறு பண்டைத் தமிழ் நூல்களிற் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணன் காலத்தை அடுத்துத் தெற்கே வந்தேறியவராக நச்சினார்க்கினியர் கூறுதலின், அவர்கள் செய்தியை நன்குவிளக்கக்கூடிய அக்காலத்து நூல்கள் இருந்திருக்க வேண்டும்.
எனினும், பிற்பட்ட கடைச்சங்கச் செய்யுளில், இவ்வேளிர் வரலாற்றைக் குறிக்கும் செய்திகள் இல்லாமல் போகவில்லை.
கடைச்சங்கத்தவராகிய கபிலர் என்ற புலவர் பெருமான் இலங்காேவேள் என்ற சிற்றரசனை நோில் அழைக்குமிடத்தில்:-
"நீயே-வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணொடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே"###
எனக் கூறியிருக்கும் அடிகள் புறநானூற்றில் (201) காணப்படுகின்றன.
பாடல் விளக்கம்:
நீதான், வடதேசத்து முனிவர் ஒருவரது யாகத்தில் தோன்றி, செம்பால் அழகாகச் செய்யப்பட்ட மிகப்பொிய கோட்டை உடைய, வெறுப்பில்லாத பொன்மயமாகிய துவாரகையை ஆண்டு, நாற்பத்தொன்பது தலைமுறையாகவந்த வேளிர்க்குள்ளே சிறந்த வேளாய் உள்ளனை-என்பதாம்.
இப்பழைய மேற்கோளால், வேளிரென்பார் துவாரகையில் இருந்து வந்து தென்னாட்டை ஆண்ட சிற்றரச வகுப்பினர் என்பது நன்கு விளக்கம்.
--------
வடபால் முனிவன் ஓம குண்டத்தில் தோன்றிய வேளிர்கள்:
=====
The Sangam Age (2200 Years) "Purananuru" (poem-201) was written by the great poet "Kabilar" and the same has been scrutinized and verified by the eminent scholars, Dr. U.V. Swaminatha Iyer, Thiru. Devaneya Pavanar and Thiru. Natana Kasinathan Iyya. All the scholars had/have no objection to the "Purananuru-201 Poem".
Even, Thiru. Devaneya Pavanar in his book "Dravida Thai" (Page-55 to 57) clearly says that, the "Hoysala Kings" are the descendants of sangam age "Velir Irungovel". who came from the "Fire-pit" (Agni-kunda) and ruled the "Dwaraka". Thiru. Devaneya Pavanar further says that, the king "Vira Vallala Deva-III", who referred/mentioned in the "Arunachala Puranam" had ruled "Thiruvannamalai".
Therefore, "Devaneya Pavanar" agreed that, the Sangam Age "Velir Irungovel" descendants are "Hoysala Kings" and the "Vira Vallala Deva-III", who had ruled "Thiruvannamalai" belongs to "Vanniya Kula Kshatriya" (Agni Kula Kshatriya), since the 14th century A.D. Arunachalapuranam clearly says "Hoysala Vira Vallala Deva-III" as "Vanni Kulathinil Varum Manna" (வன்னி குலத்தினில் வரு மன்னா) and "Anal Kulathon" (அனல் குலத்தோன்). Meckenzie Manuscript "Yakshagana" also says the "Arunachalapuranam" 7th chapter story of Hoysala King "Vira Vallala Deva-III".
Appended below are the "Dravida Thai" of Thiru. Devaneya Pavanar (Page - 55 to 57) :
கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும்.
மைசூரில் தற்போது ஹலெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.
நச்சினார்க்கினியர்,
"அகத்தியனார்........துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் "மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்"
என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
பண்டைச் சேரநாட்டின் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.
கடைக்கழக காலத்தில் மைசூர்த் துவரை நகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழ்ச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றிக் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையுறு செய்யவந்த ஒரு புலியை அவர் எவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டானென்றும் கூறப்படுவன் :
"நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்ட னுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒளியற் கண்ணிப் புலிகடி மா அல்" (புறம் : 201)
என்று கபிலர் பாடுதல் காண்க.
பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக் கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும்."
---------
Subscribe to:
Posts (Atom)