Sunday, May 10, 2015


தகடூர் நாட்டு "கவுண்டர்கள்" வரலாறு

தகடூர் நாட்டின் சமூக அமைப்பு:-  


தகடூர் நாட்டின் சமூக அமைப்பு தொழில் முறையில் பாகுபாடு கொண்ட அமைப்பாக விளங்குகிறது. தகடூர் நாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு சமூகங்களைப் பற்றி ஆய்வு செய்வோம். இங்கு குரும்பர், அருந்ததியர், ஆதி திராவிடர், ஐயர், கவுண்டர் (வன்னிய குல ஷத்ரியர்), செட்டியார், ஒட்டர், லிங்காயத்தார், வைரக்கொடி வேளாளர், நாவிதர், இருளர் மற்றும் சித்திரை மேழி நாட்டார் என பல சமூகங்கள் இருந்த போதிலும் தகடூர் நாட்டின் பெரும்பான்மை சமூகமான கவுண்டர் என குடிபெயர் கொண்ட வன்னிய குல சத்ரியர்கள் உள்ளனர்.

இங்குள்ள ஒவ்வொரு சமுதாயத்தின் கல்வெட்டுகள், குலதெய்வங்கள், அவர்களின் கலாச்சாரங்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். தகடூர் நாட்டில் கிடைத்த அதிகமான கல்வெட்டுகள் மற்றும் நடுகல் என்றால் அது கவுண்டர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் குருமர்களின் நடுகல்கள் நமக்கு அதிகமாக கிடைக்கிறது. வன்னிய கவுண்டர்களின் கல்வெட்டுகள் மற்றும் நடுகல்களை பற்றி ஆய்வு செய்வோம். 

ஆசிரியர் திரு.க.சண்முகசுந்தரன் எழுதிய “வன்னியர் வரலாறும் பல்லவர்களின் தோற்றமும்” என்ற நூலில் கவுண்டர் என்ற குடிபெயருக்கான விளக்கத்தை கீழ்க்கண்டவாறு கூறுகிறார். 

கவணினர் = கவுண்டர்:-


"மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் 
பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறன் மன்னர் குற்றதை யொழிக்கெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகென
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோர்
பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
 
வெற்றி வேந்தன் கொற்றந் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி
இருநில மருங்கிற் பொருநரை பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்
 
நாளொடு பெயர்த்து நண்ணூர்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கெனன் வலிகெள தோளெனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்".
சிலப்பதிகாரம்: 5, 76-94.

புகார் நகரில் மருவூர் பாக்கத்திலிருந்த வீரரும் பட்டினப்பாக்கத்திலிருந்த படைகளும் ஒருவரைவரை முந்திக்கொண்டு வந்து கொற்றவைக்கு பலி கொடுக்கும் பீடத்தில்அரசனுக்கு உண்டான குற்றத்தை யொழிக என்று தம்மை பலிக்கொடுத்துக்கொண்டு பலிக்கொடை புரிந்தார்கள். 

'திருமாவளவ னென்னுங் கரிகாற் சோழனின் வலிமைக்கு எல்லையாகுக'என்று வஞ்சினங் கூறி கவண் கல்லை வீசி எறிந்தார்கள். தோல்பையில் வேல்களை கொண்டவர்களும் தோல் தட்டி ஆரவாரம் செய்து போர்களத்தை தமதாக்கிக் கொண்டவர்களும் கண்கள் சிவந்து சுட்டுவிடும் பார்வை கொண்டவர்களுமான வீரர்கள் 'வெற்றி வேந்தன் கொற்றங்கொள்க'என்று பலி கொடுக்கும் இடத்தில் தமது தலையை வைத்து இடைபோல முரசுகள் முழங்க தமது உயிரை கொற்றவைக்கு பலி கொடுத்தார்கள்.

"உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்
தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றி
 
பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்"..
மணிமேகலை 6:50-3.

மனத்தளர்ச்சி உறாமல் உயிரை தானங் கொடுத்த வீரர்களின் தலைகள் அசைந்தாடி தொங்கும் மரங்கள் புகாரில் காடுகிழாள்(துர்க்கை) கோயிலை சுற்றி இருந்தன.

சங்க காலத்தில் அரசன் போருக்கு போகும் போது படை வீரர்கள் கொற்றவைக்கு உயிர்க்கொடை கொடுத்தது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் (கி.பி 1070-1118) நிகழ்ந்தது. அதனின் பாடல்..

"அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிர மணங்கின் கைகொடுப்ப ராலோ
 
கொடுத்தசிரங் கொற்றவையை துதிக்கு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்குமாலோ"..
-கலிங்கத்துப் பரணி: கோயில் 15

"மோடிமுன் றலையை வைப்ப ரேமுடி குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்று குருதிப்பு துத்திலத மம்மு கத்தினில் மைப்பாரே".
கவிச்சக்கர விருத்தி.

அரசன் போருக்கு புறப்படும் முன்பு "மன்னன் வலிமைக்கு வரம்பாகுக"என்று கவண் கல்லை வீசி எறிந்து உயிர்க்கொடுத்த வீரர்களை 'கவணினர்'என்றனர். நாளடைவில் அந்த சந்ததியருக்கு கவுண்டர் என்றனர். வட ஆற்காடுதென்னாற்காடுபாண்டிசேலம்தருமபுரிகிருஷ்ணகிரி மற்றும் நாகையின் சில பகுதியில் வன்னியர் குல க்ஷத்ரியர்களுக்கு கவுண்டர் என குடிப்பெயர் உள்ளது.

************************************************************************************************************

1990-ல் தகடூர் மாவட்ட வரலாற்று பேரவை வெளியிட்ட “வரலாற்றில் தகடூர்” என்ற நூலில் இருந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்:- 

கி.பி நூற்றாண்டை சேர்ந்த பல்லவ இரண்டாம் மகேந்திரனின்கல்வெட்டு ஒன்று புதுப்பள்ளிகள் என்ற ஒரு பிரிவினரை குறிக்கிறது. இவர்கள் தகடூர் நாட்டின் பூர்வ குடிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் பிற்காலத்தில் காமிண்டர்காமுண்டர்,கவுண்டர் என அழைக்கப்பட்டனர். இன்றும் தருமபுரி பகுதியில் வன்னியர் குல கவுண்டர் இன மக்கள் வாழும் ஒரு பகுதிக்கு பள்ளித்தெரு என்று பெயர். இவர்களின் தொழில் சில காலங்களில் போர் புரியும் படைவீரர்களாகவும்விவசாயம் மற்றும் கால்நடை பரமரிப்புமேயாகும்.

பிற்காலத்தில் அதாவது கி.பி. 11-13 ஆம் நூற்றாண்டுகளில் பல இடங்களில்நாட்டுக்காமுண்டர்களாகவும்ஊர் முதலிகளாகவும்” விளங்கியவர்கள் இவர்களே. இந்த மக்களை பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதல் இருந்ததாக கூறுகின்றனர். அனால் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் கி.பி. 9-18 வரையே. இவை அனைத்தும் காமுண்டர்,காமிண்டர் மற்றும் கவுண்டன் என் திரிபு பெற்று வழங்குகின்றனர்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டுகளிலேயே கவுண்டர் என தெளிவாக அழைக்கப்படுகின்றனர். இவர்களே பெரும்பான்மை நில உடமையாளர்களாகவும்வேளாண் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும்இருக்கின்றனர். தகடூர் நாட்டில் கோவன்புத்தூர்(கோயம்புத்தூர்) மாவட்டத்தை போன்று கொங்கு வெள்ளாளர்கள் இல்லை. தகடூர் நாட்டில்கவுண்டர்களே(வன்னியர் குல க்ஷத்ரியர்) பெருமன்மையாக உள்ளார்கள்.

கல்வெட்டுகள் பலவற்றில் குறிப்பிடும் குறிக்கப்படும் காமிண்டர்கள்இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் நிலக்கொடைகள் பற்றி இப்பகுதியில் கிடைக்கின்ற கல்வெட்டுகளில் 90% இக்கவுண்டர் இன மக்கள் கொடுத்தனவாகவே இருக்கின்றன. ஒரு சில கல்வெட்டு மட்டுமேசெட்டி என்ற இனத்தை சேர்ந்தவர் அளித்ததை கூறுகிறது. எனவே நில உடமையாளார்களான கவுண்டர்களே நில உடமை அமைப்பான நாடுஊர் ஆகிய நிர்வாக அமைப்புகளில் நாட்டாரகவும்ஊர் முதலிகளாகவும் செயல்பட்டதை அறிகிறோம். (நூல்: வரலாற்றில் தகடூர், ஆசிரியர்: திரு. சொ.சாந்தலிங்கம், பக்கம்:192 -193). 

*******************************************************************************************************************

வன்னியர் குல க்ஷத்ரியரின் தொன்மையான  கல்வெட்டு:- 


தகடூர் நாட்டில் இவர்களுக்கு கிடைத்த பழமையான கல்வெட்டுகள் மற்றும் நடுகல்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம். கல்வெட்டுகளில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதலே “மிண்டர்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தகடூர் நாட்டு கவுண்டர்களின் தொன்மையான கல்வெட்டு என்றால் அது “பலிஞ்சர அள்ளி” வட்டெழுத்து கல்வெட்டாகும்.

கல்வெட்டு வாசகம்:

"கோவிசைய மயீந்திர பருமற்கு யா 
யிண்டைந்தாவது காடந்தைகள் சேவகன்
புதுப்பள்ளிளோடு பொருத ஞான்று பா
ட்டா னெருமே 
திகாரி" 

காலம்: கி.பி.595. 
                                                    பலிஞ்சர அள்ளி கல்வெட்டு 

ஐந்து வரி கொண்ட வட்டெழுத்து நடுகல். கி.பி. 7ஆம் நூற்றாண்டு இரண்டாம் மகேந்திரவர்மனின் நடுகல்(பல்லவர்). இந்த புதுப்பள்ளிகள் தகடூர் நாட்டின் பூர்வகுடிகள் என்பர். இதில் வரும் "புதுப்பள்ளி"களே பின்னாளில் காமிண்டன்/காமுண்டன்/கவுண்டர் என அழைக்கப்பட்டனர். 

****************************************************************************************************************

தகடூர் நாட்டில் உள்ள கவுண்டர் (வன்னியர்) கல்வெட்டுக்கள்:-


சுபதுங்க தேவன் என்பவனே மூன்றாம் கிருஷ்ணன். இவர் அகலவர்ஷ சுபதுங்க தேவன் எனவும் அழைக்கப்படுகின்றார். 
சுபதொங்கன் என்ற பெயரில் இராஷ்டிரகூடர் கிருஷ்ணன் என்ற மன்னனின் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கார்நாடகதர்வார் மாவட்டத்தில் உள்ளது.( S.I.I.XX - 277) 
நமக்கு கிடைத்த நடுகல்லில் வரும் மூன்றாம் கிருஷ்ணனாகிய சுபதொங்க தேவனே கச்சியும்தஞ்சையும் கொண்ட கன்னர தேவன் என அழைக்கப்பட்டார். 
இம்மன்னனின் ஆட்சியின் போது புறமலை நாட்டு சிந்தகப்பாடியை(தற்போதைய சிந்தல்பாடி) சேர்ந்த 'காமுண்டன்' அளப்பமாறன் கன்னையன் என்பவன் எதிரிகள் ஊர்புகுந்து அழித்தபோது அதனை தடுத்து நிறுத்த முற்பட்டான் போரில் இறந்து பட்டான். இந்த அளப்பமாறனுக்கு எடுக்கப்பட்டதே இந்த நடுகல். காமுண்டன் என்பது ஊர்த்தலைவன். 
ஊரைக்காக்கும் பொருட்டு இறந்த வன்னியர் குல க்ஷத்ரியர் அளப்பமாற காமுண்டன். 11 வரிகளுடைய கல்வெட்டில் வரும் காமுண்டன் என்பது வன்னிய காமுண்டரை குறிக்கிறது. ஊர்ப்பெயரும் "பள்ளிப்பட்டி" என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வெட்டு வாசகம்:-



“ஸ்வஸ்தி ஶ்ரீ சுபதொங்க தே

வற்குச் செல்லா
நின்ற யாண்டை
ந்தாவது பு
றமலை நாட்டு
ச் சிந்தகப்பா
டிக் காமுண்டன்
அளப்பமாறன்
கன்னையந் தாப
ரத்தில் ஊரழிவிற்
பட்டான் || . 

காலம்: கி.பி.9- 10 ஆம் நூற்றாண்டு

படம்: சிந்தகம்பாடி கமிண்டான் கல்வெட்டு.

அடிக்குறிப்புகள்:-

தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் முதல் தொகுதி
தருமபுரி மாவட்ட தொல்லியல் கையேடு
தருமபுரி வரலாறு – ஆசிரியர் பெரும்பாக்கன்


குறிப்பு: இந்த ஊரில் வன்னிய கவுண்டர்களே அதிகம் அதோடல்லாமல் இந்த நடுகல்லை செல்லியம்மன் கோவில் என்ற பெயரில் கவுண்டர்களே வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதே ஊரில் சிவன் கோவிலில் மழவராயன்புத்தேரி என்ற கல்வெட்டும் மழவர்கள்(வன்னியர்) வாழ்ந்த ஊரான மழவராயன் புத்தேரி என்ற ஊர் இன்றும் இருப்பதை அறிவோம்.

மேலும் படிக்க: http://thagadur-nadu.blogspot.com/2015/04/blog-post_24.html

*************************************************************************************************************

அரூர் வட்டம், மொட்டுப்பட்டியில் உள்ள மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள பாறையில் உள்ளது ராசராசனது 25வது ஆட்சி ஆண்டை சேர்ந்த கல்வெட்டு (கி.பி.1010) அரூர் வீர சோழ காமுண்டான் மகன் நன்னி கமுண்டான் நெல்வாய் என்னும் ஊரில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு திருச் சென்னடைக்குத் தானமாக நிலம் விட்டான் என்ற செய்தியை தருகிறது. இதில் வரும் வீர சோழ காமுண்டான் மகன் நன்னி காமுண்டான் என்பவன் ஊரில் பெரிய தானக்காரராவாகவும் பெருந் தரம் கொண்டவராகவும் ஊர் வன்னிய கவுண்டர் ஆகும்.

கல்வெட்டு வாசகம்:

6 மற்றும் 7 வது கல்வெட்டு வரிகள்..

“ஜீவிதமாக நிற்க புறமலை நாட்டு அரியூருடைய எருமையனாழ
காமுண்டான் வீரசோழ காமுண்டான் மகன் நன்னி
காமுண்டனே னேன்னூர் நெல்வாய் மஹாதேவர்க்குத் திருச்
சென்னடைக்கு நிவந்தமாக இறையிலி செய்து கு”

****************************************************************************************************************

கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காவரம் என்ற ஊரில் திரு. மாதையன் கவுண்டர் (வன்னியர்) நிலத்தில் உள்ளது இந்த நடுகல்.

ராஜேந்திர சோழனுடைய 24 வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1036)  ராசேந்திர சோழ கமுண்டான் என்ற வீரன் தன் நாடான எயில்(கிருஷ்ணகிரி) நாட்டின் மீது பங்கள நாட்டவர் படைக்கொண்டு வந்து ஆநிரைகளை கவர்ந்த பொழுது அதை எதிர்த்து போராடி உயிர் துறந்தார் என்று கங்காவரம் கல்வெட்டு கூறுகிறது.

வீரமரணம் எய்தியவன் சோழ கமுண்டான் என்கிற வன்னிய கவுண்டர். இன்றைக்கு நடுகல் தெய்வமாகிவிட்டார். இதில் வரும் பங்கள நாடு என்பது வேலூர் வட்டப்பகுதியாக இருக்கலாம். தகடூர் நாட்டு எயிநாட்டு(கிருஷ்ணகிரி)நாட்டுக்காமுண்டன் அதை... பாபேழையந் வீரன் நக்குடியாந் ராஜேந்திரசோழ காமுண்டன் எயிநாட்டு மிரோவப்பள்ளி திருப்பேறு எறிந்து மாடு நிலத்துவை பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை கொள்ள மாடு மீட்டு ஊரழிவை தடுக்கும் போரில் இறந்தவர். 

கல்வெட்டு வாசகம்:

“சோழதேவர்க்கு யாண்டு இருபத்து னாலா
வது நிகரிலி சோழ மண்டலத்து தகடூர் னா
ட்டு எயிநாட்டுனாட்டுக் கமுண்டத் அ
தீப்(பால) பெழையந் வீரன் நக்குடியாந்
இராஜே சோழ கமுண்டான் எயிநாட்டு
மி(ரோ)வப்பள்ளி திருப்பேறு ஏறி மாடு நிலத்துவை
பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை
கொள்ள மாடு மீட்டு ஊரழிய பட்டார்”


படம்: கங்காவரம் கல்வெட்டு 

*********************************************************************************************************************

பாலக்கோடு வட்டம் குன்டூரப்பன் கொட்டாயில் உள்ள இந்த நடுகல் கூறுவது பனைக்குளத்தில் வாழ்ந்த புளியா காமுண்டான்(வன்னியர்) மகன் வசைவா காமுண்டன் என்பவர் தனது ஊரான பனைக்குளம் நலன் வேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டார். இவர் பனைக்குளம் என்ற ஊரின் தலைவராகவும் தனது ஊரின் நலனுக்காக உயிர் துறந்ந்தார் என்பது குறிபிடத்தக்கது. இது போன்ற முறைகள் சமணர்களிடையே இருந்ததை அறிவோம். கி.பி. 1045 இல் ராஜாதிராஜனின் 27 வது ஆட்சி காலத்திய கல்வெட்டாகும்.


“ஸ்ரீ கொவிர ஜகேசரிப ரான
உடையார் ஸ்ரீ ராஜாதிராஜ
தேவற்க்கு இயாண்டு  27வது
நிகரிலி சோழ மண்டலத்து
தகடூர் நாட்டு கங்க நாட்டு 
னைக்குளத்து பள்ளியில் ப
ள்ளிக்காறந் புளியகாமுண்ட
ந் மகந் வசவகாமுண்டந் ம

காந் நாடம...”

படம்: வசைவா கமுண்டன் நடுகல். 
*******************************************************************************************************************************************************************

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னக்கொத்தூரில் உள்ள நடுகல். கங்க மன்னன் இரண்டாம் பிருவிதி பதிக்கு ஹஸ்தி மல்லன்(அத்திமல்லன்) என்ற பட்டமிருந்தது. முதலாம் பராந்தக சோழனுடைய சிற்றரசர்களில் இவனும் ஒருவன். பாணாதி ராஜன் என்ற பட்டத்தை முதலாம் பராந்தகன் இவனுக்கு அளித்துள்ளான். இக்கல்வெட்டின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டாகும்.

கல்வெட்டு வாசகம்: 

முரசர் காமுண்ட...
செல்வ நாயகன் அ
த்தி மல்லன் பட்ட
ப் பூசலில் பட்டான்” 


முரசர் கமுண்டர் கல்வெட்டு நடுகல் 

***************************************************************************************************************************

முதலாம் ராசேந்திரனின் 22வது ஆட்சி ஆண்டில் தகடூர் நாட்டு நாட்டு கமுண்டான் வேள்கலியன் சோழன் வீமனான மதுராந்தக வேளான் என்பவன் நீர்பாசன்த்திற்காக ஏரி ஒன்றில் கல் தூம்பு இடுவித்தான் என்பதை பனைக்குளம் கல்வெட்டு கூறுகிறது. இதில் வரும் தகடூர் நாட்டு நாட்டு கமுண்டான் என்பவன் 12 ஊர் வன்னிய நாட்டான் என்றும் நாட்டு கவுண்டன் என்றும் வழங்கும் வன்னிய ஆட்சியாளன் ஆவான்.

கல்வெட்டு வாசகம்:-

“ஸ்வஸ்திஸ்ரீ
உடையார்
ஸ்ரீ ராஜேந்
ரங் சோழ தே
வற்கு யாண்டு 22வது
நிகரிலி சோ
ழ மண்டல
த்துத் தகடூர்
நாட்டு நாட்டு
க் காமுண்ட
ன் வேள் கலி
யன் சோழந்
வீமனான ம
துராந்தக வே
ளான் இடுவி
த்த கல்த் தூ
ம்பு”

காலம்: கி.பி.11 ஆம் நூற்றாண்டு 

பனைக்குளம் எரி மற்றும் கல்வெட்டு. 

****************************************************************************************************************************************************************************


கி.பி1254 ல் தகடூர் நாட்டை குறிப்பாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை போசள மன்னன் வீரராமநாதன் ஆட்சி புரிந்தார்இம்மன்னனின் ஆட்சியின் போது தகடூர் நாட்டில் தேவர் குந்தாணியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தார்கள்.இங்கு குந்தீஸ்வர்ர் ஆலையம் உள்ளதுஆனால் இப்போது இடிபாடுகளுடன் இந்த ஆலயம் உள்ளதுஇங்குள்ள கல்வெட்டில் "திருவேகம்பமுடைய நாயனார்என்று உள்ளது. 
இதே வட்டத்தில் நடசாலை என்னும் கிராமத்தில் உள்ள கல்வெட்டில் கி.பி1249 ஆம் ஆண்டில் "மல்ல பூர்வாதிராசன் தர்மத்தால்வாரின் ஆட்சி காலத்தில் ஜெயம் கொண்ட சோழமண்டலத்து ஆமூர் கோட்டத்து வெண்புரியத்துக் காரையகிழான் காமாண்டை என்பவன் ஒசூர் செவிட நாயினார் கோவிலுக்கு 400 குழிகளும்பிராமணர்களுக்கும் நிலங்களை தானம் அளித்துள்ளார். 
இதே போல் ஒசூர் செவிட நாயினார் கோவில் கல்வெட்டில் 


"
ஸ்வஸ்தி ஶ்ரீ சகரை ஆண்டு ஆயிரத்து ஒரு நூற்று
எண்பத்து மூன்று சென்ற மன்மத சமவத்தரைத்து ஆனிமாதம் 
திருபுவன மல்ல பூர்வாதி ராஜர் அத்தி ஆழ்வார் மகனார்
தாமத்தாழ்வார் செவுடை நாயனார்க்கு நம்பிராட்டியாரையும் 
எழுந்தருளுவித்து பூஜையையும் "கொத்த காமிண்டான்பள்ளி யையும் கொடுத்து". 

அத்திமல்லன் மகன் தாமத்தாழ்வான் என்பவர் கோயில் நம்பிராட்டியாரை எழுந்தருளச்செய்து கொத்த காமிண்டான் பள்ளி என்ற பள்ளி கவுண்டர்கள்(ன்னிய கவுண்டர்வாழ்ந்த ஊரை தானம் அளித்துள்ளார். 

இன்று தேவர் குந்தாணிஹளே குந்தாணி/சின்னக்கொத்துர் என்றழைக்கப்படுகிறது.இங்குள்ள குந்தீஸ்வர்ர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததுஇன்றை சமகாலத. இங்கு மூன்று நான்கு சமுதாய மக்கள் வாழ்கின்றனர்பெரும்பான்மையாக உள்ளகவுண்டர்(வன்னிய குல க்ஷத்ரியர்)ஆதி திராவிடர்தெலுங்கு நாயுடு மற்றும் குறுமர் இன சமுதாய மக்கள் இங்கு வாழ்கின்றனர். 

***************************************************************************************************************************************************************************

மூன்றாம் ராசராசனுடைய வது ஆட்சியாண்டின் போது ராசராச அதியமானார்விடுகாதழகிய பெருமாளேன் ஆழ்வான் பள்ளியில் கங்க காமிண்டான்(வன்னியர்) என்பவன் குட்டை ஏற்படுத்தபெரும்பள்ளி அழ்வார்க்கு பள்ளிச்சம்பந்தமாக விடுகாதழகிய பெருமாள் நிலம் அழித்துள்ளார். 
கல்வெட்டு கூறுவது:- 
“ஸ்வஸ்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு கேழாவது ராஜராஜ
அதியமானார் விடுகாதழகிய பெருமாளேனாழ்வான் பள்
ளியிர் கங்க காமிண்டன் கட்டின குட்டை னாற்பாலேல்லைபு
மனோக்கிந மரமும் கீநோக்கிந கிணறும் வாங்ர்தலவரே  காக்கய
ன் கிறை விடுகாதழகியப் பெரும்பள்ளியாழ்வாற்கு பள்ளிச்
சந்தமாக
க விட்டேன் ஸ்வஸ்தி ஸ்ரீ இந்த னாயனார் விடுகாதழகிய பெருமாள்”

கங்க காமிண்டான் கல்வெட்டு உள்ள பாறை. 

கங்க கமிண்டான் என்கிற வன்னிய கவுண்டர் அளித்த தானத்தை பற்றிய கி.பி.13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். 

***************************************************************************************************************

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பாரந்தூர் கிராமத்தில் உள்ள வேடியப்பன் கோவில் என்றழைக்கப்படும் நடுகல், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழ மண்டலத்து முரசு நாட்டு மேலையூர் மார காமிண்டன் என்பவர், பதிமிதேவன் என்பவர் பராந்தூர் ஊரை அழிக்க முனைந்த போது மாரகாமிண்டன் அதை தடுத்து 5 குதிரை வீரர்களை குத்தி தானும் இறந்துவிட்டார்.

கல்வெட்டு வாசகம்:

“ஸ்வஸ்தி ஸ்ரீ முடி கொண்ட சோழ ம
ண்டலத்து ராஜேந்திர சோழ வளநாட்
டு முரசு நாட்டு தென் கூற்றில் வார
ந்தூர் உடையவன் மேலை(யூர்)
மார காமிண்டன் மகன் மார ...
மாயம(ண்)ன் பதிமிதேவன் வாரந்தூர் ப
ற்றி அழிக்கபுக அவனைக் கெடுத்து
பற்றி அஞ்சு குதிரையைக் குத்திநான் (மே)
லையூர் மார காமிண்டன் மக ...
ந் தேவந் குத்திப் பட்டான்
............................................................”

வேடியப்பன் கோவிகளை கவுண்டர்கள் மட்டுமே (வன்னியர்) குல தெய்வமாக வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னக்கொத்தூர் ஊரில் தனியார் வயலில் உள்ள கி.பி. 14ஆம் நூற்றாண்டு நடுகல், சொக்கன், கருவாயன் பள்ளி இடுபூசலில் குதிரையுடன் போரிட்டு குதிரைக்குத்தி இறந்துள்ளான். இதில் வரும் கருவாயன் பள்ளி சொக்கனுடைய விருது பெயராக கொள்ளலாம். பள்ளி என்பது வன்னிய மரபில் வந்தவரைச் சுட்டும். குமாரனானசிக்கரன் கொக்கனின் தந்தை ஆவான்.

கல்வெட்டு வாசகம்:

“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வாதியர் குமாரணானச் சக்கர சி
றுப் பி
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்பள்
ளி இடு பூசலில் குதிரை குத்தி
பட்டான்” 

சின்னக்கொத்தூர் குந்தியம்மன் கோவில் 


ஓசூர் செவிடைநாயனார்  கோவிலில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் மாதிள காமிண்டன் என்பவன் தூண் அமைத்துக்கொடுததைப் பற்றி கூறுகிறது  இக்கல்வெட்டில் வரும் கள்ளக்குடையான் பள்ளி மாதிள காமிண்டான் என்பவர்வன்னியர் கவுண்டர்.

கல்வெட்டு வாசகம்:

“கள்ளக்குடையான் பள்ளி மாதிள காமிண்டர் கட்டின தூண்”

செவிட நாயினார் கோவில், ஓசூர்,கிருஷ்ணகிரி மாவட்டம்.

********************************************************************************************************************

தகடூரில் கிடைத்த கவுண்டர் (வன்னிய குல க்ஷத்ரியர்) செப்பேடு: 


தருமபுரி மாவட்டம். பாப்பாரப்பட்டிக்கு அருகிலுள்ள மலையூர் என்ற ஊரில் உள்ள ஏகாம்பரக் கவுண்டர் என்பவரிடமுள்ளதுகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம், அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரத்தில் உள்ள செப்பேடும் ஒரே செய்தியை கூறும் இரு பிரதிகள் எனலாம்.வன்னியர் குல க்ஷத்ரியர் வீரத்தை பேசும் இச்செப்பேடாகும். இச்செப்பேடை ச. கிருஷ்ணமுர்த்தி விரிவாக ஆய்ந்துள்ளார். இந்தச் செப்பேடு காலம் 19ஆம் நூற்றாண்டு


சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்த உலகளந்த கவுண்டனும் ஏகாம்பர கவுண்டனும் மேற்கு நோக்கிச் சென்றபோது சிங்கிரிப்பட்டியில் (சிங்காரப் பேட்டை) வேடர்கள் நூறுபேர் மறித்தபோது அவர்களில் நால்வரை கொன்று விட்டு இறுதியாக ஆலம்பாடி வந்தனர். ஆலம்பாடியை சேர்ந்த இருப்பரளி நாயக்கன் இவர்களை ஆதரித்தனர். நாயக்கன் பொருட்டு நாயக்கன் எதிரி மரியண்ணனுடன் காணுகாம்பள்ளியில் போரிட்டு 12 பேரைக் கொன்றார்கள்.

சிறுது காலத்தில் சில நாயக்கர்கள் இவர்களிடம் வரி கேட்கவே சச்சரவு முண்டது. நாயக்கர்கள் ஆடு, மாடு கொள்ளையடித்தார்கள் எனவே கவுண்டர்கள் 10 பேரைக் கொன்றார்கள். வழக்கு ஜெகதேவராயனிடம் சென்றது. ராயர் வேடரிடம் 100 பணம் அபராதமாக பெற்றுக் கொண்டு கவுண்டர்களுக்கு நாட்டாண்மையாகச் சில ஊர்களை வழங்கினார். வலங்கையருக்கும் கவுண்டர்களுக்கும் பிறகு சண்டை நடந்தது. வழக்கு மைசூர் அரசரிடம் சென்றது. பிரமாச்சிக் கவுண்டன், கவுண்டர் சார்பாக வழக்கிற்குச் சென்றான்.கவுண்டருக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இபுறாம் சாய்பு அவர்கள் குழந்தைக் கவுண்டனுக்குப் பட்டயம் எழுதித்தருகிறார். வெவ்வேறு காலங்களில் மூன்று கவுண்டர்களுக்கு செப்பேடுகள் வழங்கிய விபரம் இந்த செப்பேட்டில் உள்ளது.

செய்தி :செப்பேட்டின் முன்பக்கம் சூரியன்சநிதரன் ஆகியவற்றுடன் விரட்டைக் கிளிகன் காணப்படுகின்றன. சிவமயம் என்று தொடங்குகின்ற இச் செப்பேட்டில் மொத்தம் 130 வரிகள் உள்ளன. சாதி நாட்டாமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதைச் இச்செப்பேடு கூறுகின்றது. ஐந்துமுறை நாட்டாமை வழங்கப்பட்ட விபரம் தெளிவாகக் காணப்படுகின்றது பேச்சு வழக்கிலுள்ள தமிழில் வாசகம் வெட்டப்பட்டுள்ளது.

படம்: மலையூர் செப்பேடும் மலையூர் கிராமமும். 

1. சிறுதலை பூண்டியிலிருந்து ஔகளந்தா கவுண்டனும் ஏகாம்பிரிகவு-

2. ண்டனும் ரண்டு பேரும் மேர்க்கேரெரி வரச்சே சிங்கரிப்பட்டி கணவாயிலே

3. நூரு வேடராகிரர்கள் வந்து மரிச்சிக் கொண்ட போது ஓலைகளத்தாகவுண்டனு-

4. ம் ஏகாக்பிரிகவுண்டனும் இவர்கரெண்டு பேரும் அவர்கள் மேல் சண்டைகள்

5. செய்து அவர்களில் நாலு வேரை வெட்டித் துரத்திவிட்டு அப்போ ஆலம்பாடி

6. வந்து சேந்து அந்த கோட்டையில் வீடுகட்டிப் கொண்டு நிலையாய் இருந்-

7. தார்கள் அப்போ ஆலம்பாடி கோட்டையிலிருக்கப்பட்ட இருப்பாளி நாயக்கன் நீ

-8. ங்களா ரென்று கேட்டான். நாங்கள் படையாச்சிகளென்று சொன்னார்கள் ஆனால் ந-

9. ம் மள் பக்கத்திலே இருங்கோளென்று சேத்திக் கொண்டான். இப்படி அனேக காளை-

10. ய் இருந்தார்கள். இருப்பாளி காயக்கனுக்கும் பென்னாகரம் தலைப்புக்கு சேந்த கோடாகவு-

11. ண்டன்பட்டி மரியண்ணக்கவுண்டனுக்கும் இவர்கள் ரண்டு பேருக்கும் சச்சரவுகளாயி-

12. ருக்கும் அப்படி விருக்குர நாளையிலே ஒருநாள் இருப்பாளி நாயக்கன் காணுகாம்

13. பள்ளிக்கு பயணமாகி பேரரபோது அந்த சமாசாரமரித்து மரியண்ணக்கவன்

14. டன் இவனை இந்த வேளையில் கொல்லவேணுமென்று தன்னுடைய ஆட்களை கூட்பு கொ-

15. ண்டு முத்தூர் சமலை சந்துலே வளச்சி கொண்டு இவனுக்கும் அவனுக்கும் சண்டைக-

16. ளானதை ஏகாம்பாரிகவண்டன் கேட்டு நம்ம துரையாகிய இருப்பாளி நாயக்கனுக்கு அகுடு

17. வந்ததென்று ஓடிப்போய் தப்பட்டை கொம்பு கத்தி ஆயிதத்துடனே மரியண்ணகவுண்ட-

18. டைய ஆள்களை பன்னண்டூ பேரே வெட்டின உடனே மரியண்ண கவுண்டனு-

19. டைய ஆள்கள் சேதமானதே ஓடிப்போனன். அப்போ இருப்பாளி நாயக்கன் பார்த்து நம்ம உ-

20. யிர் காப்பாத்தினா னென்று இவனுக்கு என்ன குடுப்போம் நாம்பெ லென்று மனதிலெண்ணி ஏ-

21. காம் பிரிக்கவுண்டனையும் அளைத்து உனக்கு என்னா வெகுமானம் வேனுமென்று கேட்-

22. டான். அப்போ ஏகாம்பிரிகவண்டன் எங்களுகு சாதி நாட்டாமை அதிகார வேணுமெ-

23. ன்ரான் அப்போ ஏகாம்பிரிக்கவுண்டன். இருபாளி நாயக்கன் உங்கள் பத்து ஜனங்களை அழைப்பித்து

24. ¢ கொள்ளுமென்றான். அப்போ ஏகாம்பிரிகவுண்டன் பத்து ஜனங்களை அழைப்பித்தா-

25. ன். ஆலம்பாடி மாணிக்க கவுண்டன் கொதள்ளி முத்துக்கவுண்டன்காணுகாம்பள்ளி-

26. சென்றாயக் கவுண்டன் மத்தூர் காணிக்கவுண்டன் சென்னப்பட்டணம்கோவிந்தக் கவு-

27. ண்டன் காணுகாம்பள்ளி கொன்னையக் கவுண்டன் பாளையம் தாதக் கவுண்டன் ஆனை-

28. க் கல்லு கரிராமக் கவுண்டன் ஆரவள்ளி திம்மராயக்கவுண்டன்கவுளிகரை வெங்-

29. கிட்ட ராமக்கவுண்டன் தளி ஆரிமுத்து கவுண்டன் தெங்கனிக்கோட்டைதிம்மதாய-

30. க்கவண்டன் தெல்லமங்கலம் வேடப்பகவுண்டன் பஞ்சப்பட்டிபச்சாக்கவுண்ட-

31. ன் தல்லி முல்லி அக்கிராராம் முதலிக்கவுண்டன் முத்தூர்ராமகவுண்டன் பவளத்தூரு-

32. பரசு ராமகவுண்டன் கொண்டமங்கலம் லச்சமண கவுண்டர் தாசம்பட்டிசந்தகவுண்-

33. டன் மலைஊரு ஓல களந்தா கவுண்டன் நாட்டராம் பாளையம்பெரியண்ணகவுண்டன் அனு-

34. சட்டி ராமசாமி கவுண்டன் உரிகம் னாக் கவுண்டன் கோட்டள்ளிவையாயுரி கவுண்டன்

35. லச்சுமண கவுண்டன் அந்தானள்ளி அல்லிராசிக் கவுண்டன்கானுகாம்பட்டி நஞ்சப் –

36. பக்கவண்டன் இத்தண்ட பேரூம் மகாநாட்டாருக்கும் காய்கரி பதார்த்துடனே பதனஞ்சி நாள்

37. வரைக்கும் சாப்பாடு விசாரித்து தாம்பூலம் குடுத்து சமதாச்சாளென்று மகா நாட்டாரு-

38. ம் இருப்பாளி நாயக்கனும் சம்மதித்து இவனுக்கு ஒன்ன இருத்தாலும் நிலை நிக்காதென்-

39. று ஆலோசித்து இந்த கவண்டர்கள் சம்மதியால் அந்த ஆலம்பாடிக்கு சேந்த சென்னப்
40. பட்டணம் வரைக்கும் நஞ்சனம்கோடு வரைக்கும் ஓசூர் வரைக்கும் மகா நாட்டாமை பட்-
41. டக்கார னென்றும் உரம்பரையார் முன்பாக இருப்பாளி நாயக்கன் சர்வதாரி வருஷம்

42. சித்திரை மாசம் பதிமூனாம் தேதியில் எழுதி குடுத்த பட்டயம் என்னமென்ரால் உன்னுட-

43. சாதி தெண்டனை அடிக்கக் கோலும் கட்டக்கயரும் கூடைக்கல்லும் பிளிய மிராலும் உன்சா-

44. தியிலுண்டான தப்பு வாங்கிக் கொள்ளுமென்று சாதி நாட்டான உன்னுதென்று இத்-

45. தினக் கவுண்டர்களும் துரையும் வெகுமானத்தோடே பாவித்தார்கள் இப்படிக்கு உ-

46. ங்கள் வம்சம்முள்ளவரைக்கும் மகாநாடு நடத்தி வருகிறது. இனிமேல் நானும் உங்க-

47. ள் கோத்திரமுன்ன வரைக்கும் மனவர்த்தி விட்டு விட்டேன் நாட்டாரும் மெச்சினவனுகு சாத-

48. வரியும் கடை எண்ணை கனடபாக்கு மகா நாட்டார் விட்ட மான்ய மிதுகள் உன்னுதென்று

49. சங்கத்தி வரிமானியம் விட்டார்கள் இந்த நாடு பூமி ஆகாயம் சந்திர சூரியர்களுள்ளவரைக்-

50. கும் உன்னுதே. இதுக்குச் சாச்சியாரென்ரால் நஞ்சங்கோடு நஞ்சண்டஸ்வரர் மலை மா-

51. தேஸ்வரர் ஆலம்பாடி ரங்க நாயகர் டெங்கனிக் கோட்டை வெங்கிட்டராமனா திருவண்-

52. ணாமலை அருணாசலயீஸ்வரர் சீரங்கத்து ரங்கராயர் இந்த நாட்டாமையை யாதாமோ-

53. ருவன் பகரித்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொண்ணபாவத்திலே போவார்கள் பிராம-

54. ணரை கொண்ரபாவத்திலே போவார்கள் கோயில் இடித்த பாவத்திலே போவார்கள் குருதுரோகம்

55. பண்ணினவர்களைந்த பாவத்திலே போவார்களோ அந்த பாவத்திலே போவார்கள் இப்படிக்கு இரு-

56. ப் பாளி நாயக்கன் ஏகாம்பிரிகவுண்டனுக்கு எளிதிக்குடத்த பட்டயம் கயி சிவமயம் இ-

57. ந்த படிக்கு உலகளந்தா கவுண்டனும் கொம்பரகவுண்டனும் ஆலம்பாடி நாட்டை ஆ-

58. ண்டுக் கொண்டிருக்கும் காலத்தில் பெரியப்பா நாயக்கன் சின்னய நாயக்கன் பாலப்ப நாயக்க-

59. ன் இவர்கள் வந்து எங்களுக்கும் நீங்கள் வர்த்தினை உங்கள் வீட்டுக்கு ரண்டு பணம் குடுக்க வேணு-

60. மென்று கேட்டார்கள். அதுக்கவர்கள் நாங்கள் குடுக்கிரதில்லை என்ரார்கள் நாங்கள் விடுகிரதில்லை

61. என்றார்கள். இவர்களுக்கும் அவர்களுக்கும் சச்சரவு பட்டு ஆடு மாட்டை கொள்ளை யாடினார்

62. கள். இவர்கள் அவர்களில் பத்துவேடரை வெட்டி கொள்ளையை திருப்பி கொண்டார்கள் இவர்களு-

63. ம் அவர்களும் கூடிக்கொண்டு செகதேவிராய ரண்டைக்கு போனார்கள் ராயிர் பார்த்து நீங்கள்

64. வந்த விபரமுமன்ன வென்று விசாரிக்கும் போதிலெவர்கள் எங்கள் ஸ்தளத்துக்கு வந்த சேர்ந்து

65. படியால் நாங்கள் எங்கள் வர்த்தியையை கேட்டோமென்று பெரியப்ப நாயக்கன் சொன்னான் அ-

66. துக்கு ஏகாம்பிரிகவுண்டன் செகதேவிராயரை கும்பிட்டு சொல்கின்றான்வன்னிய வ-

67. ம்சமும் அப்படி கொடோமென்ரோம் நாங்கள் விடுருரதில்லை என்று இவர்கள் எங்கள்

68. ஆடுமாடெல்லாம் கொள்ளையிட்டார்கள். நாங்கள் அவர்களை பத்து பேரை வெ-

69. ட்டி கொள்ளையை திருப்பி கொண்டோமென்று யேகாம்பிரிகவுண்டனும் உலகளந்தாக-

70. வண்டனும் சொன்னார்கள். அப்போ செகதேவிராயர் மெச்சிக் கொண்டு வேடர் கையில் பொன்

71. அபுராதம் வாங்கிக் கொண்டார் போ நீங்கள் சௌரியவான்காளன்று மெச்சி உங்-

72. களுக்கு கென்ன வெகுமானம் வேணுமென்ரார். அப்போ யோகம்பிரிக்கவுண்டனெங்களுக்கு

73. ன்னம் சாதி அதிகாரம் வேணு மென்றார். அப்போ செகதேவிராயர் உங்கள் பத்து

74. செனங்களை கூட்டிக்கொள்ளுமென்றார். ஆலம்பாடி வரைக்கு சென்னபட்டனம் வ-

75. ரைக்கும் காணுகானள்ளி வரைக்கும் ஓசூர் வரைக்கும் மாடள்ளி வரைக்கும் ஆனக்கல்-

76. லு வரைக்கும் பிக்கி பவளத்தூர் வரைக்கும் ஆலம்பாடி மாணிக்க கவுண்டன் கௌதள்-

77. ளி மூர்திக்கவுண்டன் ஆரவள்ளி தொண்யைக்க கவுண்டன் நஞ்சன் கோடு நஞ்சப்ப கவுண்ட-

78. ன் கோடள்ளி பெரியகவுண்டன் இன்னம் மற்றுமுண்டான வரவினமுறையின வரு-

79. ம் கிளக்கு சீமைக்கு கூட்டிப் போகும் போது தரை தப்பட்டை கொம்பு சல்லி கொடை சாரை கொ-

80. த்துடும்பு பதினெட்டு ஆயிதத்துடனே களஞ்சிபுரம் நாட்டுக்குப் போய் காமாச்சிய-

81. ம்மன் கோயிலிரங்கினார்கள். அந்த ஓபளியிலிருக்குப்பட்ட கவுண்டர்கள்சிரை மீட்ட கவண்-

82. டன் ஐயன்பேட்டை சுப்பராய கவுண்டன் ஆரணி பெருமாக்கவண்டன்கீழ்குப்பம் காளிக்-

83. கவுண்டன் உடையார்பாளையம் சங்க கவண்டன் திருவண்ணாமலைஅருணகிரிக்கவுண்டன்

84. தீர்த்தமலை மூர்த்திக்கவுண்டன் இன்னும் மற்றுமுண்டான உரைவின் முரையாரனை வரும் கூ-

85. டி பதினைஞ்சு நாள் வரைக்கும் மிருந்து ஆலோசினை செய்து யோகாம்பிரிக்கவுண்டன் எங்க-

86. ள் வன்னிய வமுசத்துக்கு குலுகுருவாக இருக்க வேணுமென்று துரையே கேட்டார்கள் அப்ப-

87. டியே அந்த கவுண்டர்கள் சம்மதியி£னலே செயவருஷம் வையாசி மாதம் பதினைஞ்சாம் தே-

88. தி வெள்ளிக்கிழமை தசமி கூடின சுபதினத்திலே செகதேவிராயர் யேகாம்பிரிக் கவுண்டனுக்-

89. கு எளுதிக்குடுத்த செப்பேடு பட்டயம் என்னமென்றால் துரை பாக்கு பச்சைவடம் சலத்தியு-

90. ம் கொடுத்து உங்கள் சாதியில் அடிக்கக் கோலும் கட்டகயிகும் குடுத்து உன் வமுசமு-

91. ள்ள வரைக்கும் நாடு செலுத்தி வருகிறது. சுளிசெத்த புளப்பு உன்னுதே இதுக் காராகிலும்

92. அபகரித்து சுட்டிசெய் தோர்களுக்கு ள சாயபொன் அபராதம் குடுக்கப்படும் அதும் த-

93. விர அவன் வீட்டுக்கு மாட்டெலும்பும் வேப்பிளையும் கொருகுகிறது இதுக்கு சாச்-

94. சி யாரென்ரால் காஞ்சிபுரம் யேகாபரநாதர் திருவண்ணாமலை அருணாசலீஸ்வரர்-

95. திருப்பதி வெங்கட்டரமணன் சீரங்கத்து ரங்கநாயகர் திருசெங்கோடு அர்தணாரீஸ்வரர் ந-

96. ஞ்சகோடு நஞ்சுண்டேஸ்வரர் மேல்கோட்டை செல்லபுள்ளையார்இருருக்கு மேல் யாதாமொ-

97. ருவன் இந்த நாட்டை அபகரித்தவன் இத்தின கோயிலை இடித்த பாவத்திலே போவார்கள் கா-

98. ராம் பசுவை கொன்ன பாவத்திலே போவார்கள் இந்தபடிக்கு செகதேவிராயர் யோகம்பிரிக்கவுண்-

99. டனுக்கு எழுதிக்குடத்த செப்பேடு பட்டயம் சயி ஸ்ரீ ராமஜெயம் இந்த படிக்கு ஆ-

100. லம்பாடி மகாநாடும் காவேரி தேசஸ்வரர் தேரும் பிரமிச்சி கவண்டன்உபயம் நடத்தி வரு கூட தெ-

101. ம் காலத்திலே வலங்கை யாருக்கும் இடங்கை யாருக்கும் சச்சரவுபட்டு உங்கள் விருது வர-

102. ன்னு பிரமிச்சக் கவுண்டனை தடுத்தார்கள்அப்போ ஆலம்பாடி காட்டிலிருந்து கவுண்டரை கூட்பு அ-

103. ந்த வலகையாரே அடித்து தருத்திவிட்டு தேசேஸவரர் சாத்திரயே முப்பத்திரென்டு மேலவாத்தியத்-

104. துடனே தேரை நடப்பித்தான் வலங்கையார் மைசூர் கர்த்திரிடத்திலே போய் பிராது செய்தார்கள் அ-

105. ப்போ கர்த்தர் பிரமச்சிகி கவுண்டனை அழைத்து விசாரிக்கும் போது பிரமிச்ச கவுண்டர் எங்க-

106. ளுக்கு முப்பத்திரண்டு மேள வாத்திய முண்டு அந்த வாத்திய மில்லாமல் தேரை கூடப்பிக்க சொன்னார்க-

107. ள். அப்படி நடப்பிக்க மாட்டோமென்றோம் அதுனாலே எங்களுக்கும் அவர்களுக்கும் சச்சரவுஹ-

108. வந்ததென்ரார். அப்போதுரை ஆலோசனை செய்து அந்த காவேரி நதியில் வாத்தியத்தை யாரும் தடுக்-

109. கக் கூடாதென்று வலங்கையார் கையில் ள பொன் அபராதம் வாங்கி வைத்து பிரமிச்சிக் கவுண்ட-

110. னைமெச்சி உங்களுக்கு முப்பத்திரண்டு மேலவாத்தியம் செல்லும் மென்று தீர்மானித்து விட்டு

111. உன்னென்ன வெகுமானம் வேணுமென்று கேட்டார்.பிரமிச்சிக்கவுண்டர் எங்கள்

112. சாதி நாட்டாமை அதிகாரம் வேணுமென்று கேட்டான். பிரமிச்சிக்கவுண்டர் கூட வந்த கவுண்டர்

113. கள் சம்மதியினாலே கர்த்தர் பிரமிச்சி கவுண்டனுக்கு பச்சவடம் சகலத்தியும் வெகுமானம்

114. குடுத்து உன் சாரியில் கல்யாணத்துக்கு பணம் ரூ பாக்குபடி வைத்தினை கட்டு அஞ்டு கு தப்புமுட்டு

115. ம் நீ வாங்கிக்கொண்டு உன் நாட்டை சுகமாய் நடத்தி வருகிறது. இதையாதாமொருவன் அப-

116. கரித்தாவன் வீட்டுக்கு மாட்டெலும்பும் வேப்பிலையும் சொருகிறது இதுக்கு சாச்சியா ரென்றால் நஞ்-

117. சனங்கோடு நஞ்சுண்டேஸ்வரர் மலை மாதேஸ்வரர் மேல்கோட்டை செல்ல பிள்ளையார் ஓசூர்
118. சூ லிங்கேஸ்வரர் காவேரி தேசேஸ்வரர் திருப்பதி வெங்கிட்டரமணர் சீரங்கத்து ரங்கசாமி இந்த ப-

119. ட்டயம் மைசூர் கர்த்தர் பிரமச்சிக் கவுண்டனுக்கு எளுதிக் குடுத்த பட்டயம் நலமாயிருக்கவும்

120. ராமஜெயம். டெங்கணிகோட்டை இபிராம் சாயு அதிகாரத்தில் கௌந்தைக் கவுண்டனு-

121. க்கு எளுதிக்குடுத்த பட்டயம் என்னமென்றால் உங்க சாதியிலுண்டான தப்பு முப்பும்

122. கலியாணத்துக்கு பணம் பாக்கு படிவெத்திலை கட்டு ரூ இந்தப் படிக்கி இபுராம் சாய-

123. பு தீர்மாணித்து கௌத்தை கவண்டனுக்கு பாக்கு பச்சவடம் குடுத்து உங்கள் காட்டை நீசு-

124. கமாக ஆண்டுக் கொண்டிருக்கிறது இந்த நாட்டை யாதாமொருவன் அகோபி செய்து இ-

125. ந்த நாடு ஆதி எல்லாம் மென்று இருந்தால் கானுகானள்ளி தெரு வீதியில் சாசனகல்லு பார்-

126. க்கவும் உபயன் கல்லு பார்க்கவும் காவேரி தேசேஸ்வரர் கோயில் முன்பாக இபுராம் சாய-

127. பு கொளந்தைக் கவுண்டனுக்கு எளிதிக்குடுத்த பட்டயம் சயி சிவமயம் வினாயகர் துணை

128. சாமி நாதாச்சாரி.


இசெப்பேடை வைத்திருக்கும் திரு. ஏகாம்பர கவுண்டர் இன்றும் மலையூர் கிராமத்திற்கு நாட்டுக்கவுண்டர் ஆக உள்ளார். பொதுவாக தகடூர் நாட்டில் மட்டுமே இந்த கவுண்டர்கள் வழக்கு முறை இன்றும் உள்ளதை காணலாம். 



***************************************************************************************************************************************

தகடூர் “நாட்டுக் கவுண்டர்கள்”:-

தகடூர் நாடு முழுவதும் நிலமக்களாக சிற்றூர் எங்கும் வாழ்ந்து சிறந்த உழவ நாகரீகத்தை கொண்டவர்களாக ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஊர் மரபு ஊர்கவுண்டர் தலைமையில் தன் ஊராண்மையை அதன் வழியே தன் நாட்டாண்மையை நிர்ணயத்தது. தொன்று தொட்டு வந்த தகடூர் ஊராண்மை –நாட்டாண்மை மீது கி.பி. 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கள் தங்களின் நாட்டாண்மை ரீதியாக தகடூர் மண்டலத்தை நிகரிலிச் சோழ மண்டலமாக ஆண்டார்கள் என்பது தகடூர் நாட்டின் வேளாண் குடிகளின் வரலாறு என்று தொல்லியியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதற்கு உதாரணாமாக எயில் நாட்டு காமுண்டன் என்றும் தகடூர் நாட்டுக் காமுண்டன் என்றும் கல்வெட்டுகளில் பயின்று வருகின்றன.

“எயில் நாட்டு காமுண்டன் – கிருஷ்ணகிரி நாட்டு கவுண்டர்(வன்னியர்களின் குடிப்பெயர்)”

“தகடூர் நாட்டு காமுண்டன் – தருமபுரி நாட்டு கவுண்டர்(வன்னியர்களின் குடிப்பெயர்)”

கி.பி. 13 ஆம் நூற்றாண்டு தகட நாட்டு நாட்டோம், புறமலை நாட்டு நாட்டோம், வடகரை நாட்டு நாட்டோம் என்று வன்னிய கவுண்டர்களை கல்வெட்டுகளில் பன்மையில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தகடூர் நாட்டில் ஊர் கவுண்டர் அமைப்பம் அதற்கு மேல் அமைப்பாக 12 ஊர் நாட்டுக் கவுண்டர் அமைப்பும் இன்றும் உள்ளதை காணலாம்.

கல்வெட்டில் பயின்று வரும் கடகத்தூர், கொளகத்தூர் 79 ஊர் வன்னிய நாட்டுக் கவுண்டிகை இருந்தது என்றும் இவர் “பெரிய நாட்டார்” என்றும் முற்காலத்தில் இருந்துள்ளது என்பது வரலாறாகும்.

படம்: பல கல்வெட்டுக்களை கொண்ட "கடகத்தூர்" ஊர். 

12 ஊர் வன்னியத் தலைவர் = நாட்டார் = நாட்டுக்கவுண்டர்

79 ஊர் வன்னியத் தலைவர் = மகா நாட்டார் = மகா நாட்டுக்கவுண்டர்

“வன்னிய பிரபாவ சூர்யோதயம்” என்னும் நூலில் அறிஞர் பாகவதர் பார்த்தசாரதி நாயகர் (1929) பின்வருமாறு கூறுகிறார்.

“சிலம்பவித்தை பழக வைத்தலும் மரபை ஆளும் விதங்களையும் அதாவது கிராமமும் அதனதன் பெரிய தனக்காரனால் ஆளப்படுகின்ற முறையும் அதற்கு மேல் அனேக கிராமங்களை ஆள்பவர் நாட்டார்கள் என்னும் முறையும் அதற்கு மேல் மகா நாட்டார் என்றும் இவ்வித ஆட்சிமுறை ஆதி காலந்தொட்டே நம்கையில் இருந்து வருகின்றதென்றும் நம்முன்னோர் ஏகச்சக்ராதிபதிகள் என்பதற்கும் இதுவே அறிகுறியாதலால் நம் பூர்வ கட்டுப்பாடு சீர்குலையா வண்ணம் சீர்திருத்தம் செய்வது நம் மரபினர்களின் கடமையாகும்.”

தருமபுரி நகருக்கு கிழக்கே சந்தனூர், ப.குளியனூர், த.குளியனூர், பருத்திநத்தம், உத்தனூர் முதலிய 5 வன்னிய கவுண்டர் கிராமங்கள் ஓர் அமைப்பாக காலந்தொட்டு இயங்கி வருகின்றன. ஊரில் ஏற்படும் தகராறுகளை விசாரிக்க ஊர்ச் சபையை கூட்டுதலை இங்கே “நாடு போடுதல்” "நாடு கூடுதல்” என்று சொல்கிறார்கள். கவுண்டர்கள் வாழும் ஊரை நாடு என்று சொல்லியே வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கவுண்டர்கள் “நாடாளும் குடிகள்” என்பது இதனால் பெறப்படுகிறது.


தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத ஊர் அமைப்புகள் இன்றும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கவுண்டர்கள் நிர்வகிக்கும் அமைப்புகளை இங்கே காணாலாம். பொதுவாக ஊர் திருவிழாக்களில் “நாட்டுக்கவுண்டர், ஊர்க்கவுண்டர், மந்திரிக்கவுண்டர் மற்றும் கோல்காரக் கவுண்டர்கள்” என நம்முடைய கிராமங்களில் இருப்பதை காணலாம். 

படம்: இன்றும் கவுண்டர்கள் அமைப்புமுறைகள் இருக்கும் கிராமங்கள். 

இன்றும் கோவில் திருவிழாவின் போது ஊர்க்கவுண்டர்களுக்கே முதல் மரியாதை செலுத்தப்படுகிறது. 1000 வருடங்கள் கடந்த பின்னரும் இந்த கலாச்சாரங்களை தொடர்ந்து பின்பற்றிவருவது இந்த தகடூர் நாட்டின் தொல்குடிகளான கவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை உடையில் இருக்கும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.A. பாஸ்கர் (ஊர்க்கவுண்டர் குடும்பத்தினர்) அவர்கள் முன்னிலையில் திருவிழா நடைப்பெற்றது. 

படம்: ஊர்க்கவுண்டர் மரியாதை 

மேலும்தகவலுக்கு: 



அதே போல் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முதலி கவுண்டர்கள்என்ற குடிப்பெயர் இருக்கிறது.

 படம்: தகடூர் நாட்டு முதலி கவுண்டர்கள் 


**********************************************************************************************************************

1911 ல் கணக்கிடப்பட்ட மக்கள் தொகை Madras District GazetteersSALEM – Vilume I – Part – I இருந்து.

சேலம் மாவட்டம் - 482631
தருமபுரி - 125000
கிருஷ்ணகிரி - 75000
ஊத்தங்கரை - 32000
திருச்செங்கோடு - 60000
ஆத்தூர் – 24000

அப்போதும் இப்போதும் சரி வன்னிய கவுண்டர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளனர். 



வன்னியர்கள் பெரிய அமைப்புடன் கூடிய குடியிருப்புகளை அமைத்து கொண்டனர்.ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் கவுண்டன்நாட்டான்,நாட்டாண்மைக்காரன்பண்ணைக்காரர்/பெரிய தனக்காரான் என்று உள்ளனர்.


மற்ற மாவட்டங்களில் வன்னிய கவுண்டர்கள்:-

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி அல்லாமல் வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், சேலம் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் பல பகுதிகள், காஞ்சிப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கோலார் மாவட்டம் வன்னியர்களை கவுண்டர்கள் என்றே அழைக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலூர் வட்டத்தில் உள்ள கல்வெட்டொன்று “பள்ளி கவுண்டன்” என்றே கூறுகிறது.
கல்வெட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 



*******************************************************************************************************************

நெய்வேலிச் செப்பேடு:-

(பண்ணாட்டார் பெருமை நிலைநாட்டியவர்க்கு குரு பதவியும், கொடைகளும்)

இச்செப்பேடு நெய்வேலியில் வசித்து வரும் திரு. பெரியசாமி அய்யரிடம் உள்ளது.

முன்பக்கம் 73 வரிகளும் பின்பக்கம் 92 வரிகளும் ஆக 165 வரிகளுடன் நீள் சதுரமாக காணப்படும் இச் செப்பேட்டில் துளையுடன் கூடிய வட்டக் கைப்பிடி அமைப்பு மேல்பகுதியில் உள்ளது. பிடி அமைப்பில் முன்புறம் 6 வரிகளும்“ராசனாறாணய்யனவர்களுக்கு எழுகரைனாட்டுப் பன்னாட்டாரே திக்குடுத்த சாதனப் பட்டையம் வ” என்றும் பின்புறம் 5 வரிகளுடன் “யிடங்கை வாத்தியம் மேள முதலான தாரை கொம்பு துடுப்பு தப்பட்டை வாத்தியவுள்பட” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. முன்பக்கம் கைலயங்கிரியில் உமா சகிதராக சிவபெருமான் அமர்ந்த வண்ணம் எதிரே உள்ள முனிவருக்கு மாலை வழங்கும் காட்சி கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. முனிவரின் அருகில் ஓமத்தீயிலிருந்து அம்பும் வில்லும் ஏந்திய உருவம் வெளிப்படுவதாக பொறிக்கப்பட்டுள்ளது. ஊமையின் அருகில் எருமைத்தலை மீது துர்க்கையும் அடுத்து ஆசானத்தில் அமர்ந்த ஆண் உருவம் பேசுவது போல் காட்டப்பட்டுள்ளது. இவை செப்பேட்டில் சொல்லப்படும் செய்திகளுக்கு ஒப்ப உள்ளன.

இச் செப்பேட்டில் சகவருடம் 1555 (கி.பி.1633) கலிவருடம் 4734 (கி.பி.1633) தமிழ் வருடம் ஸ்ரீமுக ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. 

ருத்திரப்பள்ளியார் வரத்தினால் தோன்றிய பார்ப்பள்ளி, துட்டப்பள்ளி, சிஷ்டப்பள்ளி, வன்னியப்பள்ளி, அரசு பள்ளி என 5 சாதி பள்ளிகள் தேசமெங்கும் பரவி பண்ணாட்டார் என்று புகழுடன் இருந்தபோது அவர்களுக்குரிய விருதான பஞ்சவர்ண பாவாடையை வலங்கையர் பறித்துக்கொண்டனர். சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம், பூந்துறை, பூவாணி, ஓமலூர், தென்கரைக்கோட்டை என்று பலப்பகுதிகளில் இருந்த இடங்கை பண்ணாட்டார்கள் ஒன்று கூடி வலங்கையருடன் சேலம் அருகே கருப்பூரில் கைகலக்கும் நிலை ஏற்ப்பட்டது. கம்பள நாயக்கரும் வேங்கிடப்ப நாயக்கரும் தளவாய் பெத்தள நாயக்கரும் சமரசம் செய்ய முனைந்து வலங்கையரை அழைத்து அவர்களது தோற்றம் முதலிய புராணங்களை கேட்டனர். பின்னர் இடங்கையர் சமயார்த்தம், இடங்கையர் பிறப்பு, வளர்ப்பு, வன்னிய புராணம் என அனைத்தையும் எடுத்துக் கூறினார். விருதுகள் இடங்கையரான பண்ணாட்டர்க்கு உரியது என்றும் கூற வலங்கையர் அதனை ஏற்க மறுத்து காஞ்சிபுரம் பொன்னம்மன் சன்னதியில் எழுதி அக்னியிலிட வலங்கை திருவெழுத்து  வெந்து போனதென்றும் இடங்கை திருவெழுத்து வேகாததால் அவர்களே விருதுக்கு உடைய பெரியோர் என கம்பள ராயர் முடிவு அறிவித்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


தங்களது பெருமையை நிலைநாட்டிய ராசநாராயண அய்யரைச் சிறப்புச் செய்வதற்காக பன்னாட்டார் சேலம் கிளி வண்ணனாதர் கோவிலில் கூடி பொன்னம்மன் சாட்சியாக கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றி அவருக்கு பட்டயம் எழுதி கொடுத்தனர். 

கீழ்க்கண்ட 165 வரிகளை நிதானமாக படித்துப் பார்க்கவும். 












*****************************************************************************************************************

மேற்கண்ட பாடல், கல்வெட்டுகள், நடுகற்கள் மட்டும் செப்பேடுகளை வைத்துப்பார்க்கும் போது தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் குல க்ஷத்ரியருக்கு "கவுண்டர்" என்ற குடிப்பெயர் பழங்காலம் முதலே இருந்துள்ளது. தமிழகத்தில் மற்ற சமூகங்களான கொங்கு பூர்வ குடிகளான வேட்டுவர் மற்றும்கொங்கு வெள்ளாளர்களுக்கும் இந்த பட்டம் உள்ளது. தருமபுரியில் வேட்டுவர்களுக்கு கவுண்டர் பட்டம் இருப்பதற்கான கல்வெட்டுகள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இதே போல் கொங்கு வெள்ளாளர்களுக்கு இந்த பட்டம் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளதை நமக்கு கிடைத்த கல்வெட்டில் மூலம் அறியலாம். 

கல்வெட்டில் வரும் காமுண்டன்/காமிண்டன் என்பது வன்னியர் குல க்ஷத்ரியரையும் மட்டுமே குறிப்பிடுகிறது. கொங்கு வெள்ளாளர்களையோ அல்லது வேட்டுவர்களையோ குறிப்பிடும் பொழுது அவர்களின் குலப்பெயர்/கூட்டப்பெயர் அல்லது சாதிப்பெயர் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. 

உதாரணம்: 

காமுண்டன்/காமிண்டான் = வன்னிய குல க்ஷத்ரியர் 

மணியர் காமிண்டர் = வேட்டுவ கவுண்டர் (மணியர் என்பது வேட்டுவர்களின் கூட்டப்பெயர்) 

வெள்ளாள காமிண்டன்  = கொங்கு வெள்ளாளர் 

*******************************************************************************************************************

Thanks To : ThagadurNadu.Blogspot.com


No comments:

Post a Comment