Sunday, May 10, 2015



வன்னியர்களான அறந்தாங்கி தொண்டைமான்கள்:
===============================================
அறந்தாங்கி தொண்டைமான்கள் மிக பழமையான அரசர்கள் ஆவர். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளில் தங்களை "வன்னியர்" என்றும் "சோழர்களுக்கு உறவினர்கள்" என்றும் மிகத் தெளிவாக அழைத்துக் கொண்டனர். மேலும் இவர்கள் தங்களை 
"கலிங்கம் வென்ற கருணாகர தொண்டைமான் வம்சத்தவர்கள்" என்று குறிப்பிடுகின்றனர். வன்னியர்களின் புகழினை விளக்கி "சிலை எழுபது" என்னும் சிற்றிலக்கியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு "செம்பொன்" பரிசளித்தவர்கள் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
அறந்தாங்கி தொண்டைமான்களுக்கும், கள்ளர் சமூகத்தை சேர்ந்த "புதுக்கோட்டை தொண்டமான்களுக்கும்" எந்த வித தொடர்பும் கிடையாது என்று கள்ளர் சமூகத்தை சார்ந்த திரு. வேங்கட சாமி நாட்டார் அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எழுதிய முனைவர் திரு. ராஜா முகமது அவர்களும் மிகத் தெளிவாக விளக்கி சொல்லியுள்ளார்கள்.
===============================================
Thanks To : Nmurali Naicker Anna.

No comments:

Post a Comment