Sunday, May 10, 2015






சோழர்கள் காலத்தில் வன்னியர்களின் கல்வெட்டுகள்:

==================================================
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள வீரராஜேந்திர சோழன் (கி.பி.1063 - 1070) காலத்திய கல்வெட்டு ஒன்று வன்னியர் ஒருவரை "மும்முடி சோழப் பெரியன்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"வெசாலி பிரம்மதேயத்து குடிப்பள்ளி பெருமான் திருவையிகாந மும்முடி சோழப் பெரியன்". (S.I.I. Vol-VII, No.756).
----- xx ----- xx ----- xx -----
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - 1120) காலத்திய கல்வெட்டு ஒன்று வன்னிய சேனாபதி ஒருவரைப் பற்றி குறிப்பிடுகிறது. அவர் "சேனாபதி ராஜேந்திர சோழ வேசாலிப் பேரரையன்" என்பவர் ஆவார். அவர் "இரண்டாயிரம் வீரர்களுக்கு சேனாபதி" என்று சோழர்கள் காலத்து கல்வெட்டு பெருமையுடன் குறிப்பிடுகிறது.
"வெசாலிப் பிரமதெயத்தி லிருக்கும் குடிப்பள்ளிப் பெருமான் இரண்டாயிரவநான ஸேநாபதி ராஜேந்திர சோழ வெசாலிப் பெரையந்" (S.I.I. Vol-VII, No.748).
----- xx ----- xx ----- xx -----
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள திரிசூலம் தர்மபுரிஸ்வரர் கோயிலில் உள்ள விக்கிரம சோழன் காலத்திய (கி.பி.1118 - 1135) கல்வெட்டு ஒன்று வன்னியர் ஒருவரை "தொண்டை நாட்டின் அய்யன்" (தொண்டை நாட்டின் தலைவன்) என்று தெரிவிக்கிறது. அது :-
"பெறூர் நாட்டு மெட்டின் மெ நென்மலிப் பள்ளி சாத்தை செல்வநாந தொண்டை நாட்டய்யன்". (S.I.I Vol-VII, No.540).
----- xx ----- xx ----- xx -----
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள திரிசூலம் தர்மபுரிஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் இராஜாதி ராஜ சோழன் (கி.பி.1163 - 1178) காலத்திய கல்வெட்டு ஒன்று மூன்று வன்னியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவர்கள், "முதவரையன்", "கலிங்கத்தரையன்" மற்றும் "நாயகன்" ஆவார்கள்.
"இவ்வூர் காடிபள்ளி நூற்றெண்ம முதவரையன் மகன் அருளாளன்ன கலிங்கத்தரையன் மகன் நாயகன்". (S.I.I. Vol-VII, No.545).
----- xx ----- xx ----- xx -----
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள திரிசூலம் தர்மபுரிஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் ராஜ ராஜ சோழன் (கி.பி.1146 - 1163) காலத்திய கல்வெட்டு ஒன்று வன்னியரைப் பற்றி குறிப்பிடுகிறது. அவர் "சாத்தன் மகாதேவன்" ஆவார்.
"மணிமங்கலத்துக் குடிப்பள்ளி சாத்தந் மகதெவந்". (S.I.I. Vol-VII, No.546).
----- xx ----- xx ----- xx -----
விழுப்புரம் மாவட்டம், திருநாமநல்லூரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1178 - 1218) காலத்திய கல்வெட்டு ஒன்று வன்னியர் ஒருவரை "கலிங்கராஜப் பெரியரையன்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"ஓகூர்நாட்டுப் பள்ளி ஆடவலான் சொங்கநான காலிங்கராஜப் பெரியரையன்". (S.I.I. Vol-VII, No.991).
----- xx ----- xx ----- xx -----
Thanks To : Nmurali Naicker Anna.

No comments:

Post a Comment