Friday, September 16, 2016

மாரியப்பன் தங்கவேலு (Mariyappan ThangaVelu)

மாரியப்பன் தங்கவேலு:

====================
ஒரே நாளில் உலக சரித்திரத்தில் ஒரு க்ஷத்ரியன்(வன்னியகவுண்டன்):
================
நேற்று வரை இந்த உலகிற்கும், எம் தமிழ் குடியான சாதிக்கும் கூட உன்னை பற்றி அறிந்திருக்க வாய்ப்புகளில்லை. 

ஏன் நானும் அவர்களில் ஒருவன் தான். 

பெருமை பேச மட்டும் இந்த குடியான சாதி உன்னை தத்தெடுத்துகொண்டது. 

நீ கஷ்டபட்ட வலிகளில் பங்கு கொள்ள முடியவில்லை இந்த குடியான சாதியால்.
ஆனால்,உன் பெருமையை பங்கு போட மட்டும் இந்த குடியான சாதி முயற்சி செய்கிறது.

முயற்சிப்பதும் உனக்கு பெருமையே உன் விழி அருகே எத்தனை நாள் கண்ணீர் துளி கசிந்திருக்கும் இந்த சாதியால் நமக்கு என்ன பயன் என்று.

ஆனால்,இன்றோ எங்கள் கண் அருகே கண்ணீர் அருகே கசிகிறது  உன் வெற்றி பெருமையை மட்டும் பங்கு போடுவதை நினைக்கும் போது. 

பாவம் இந்த சாதிக்கு பெருமை பங்கு போட மட்டுமே துணைநிற்கும். 
துயரம் என்றால் தூரம் தள்ளி ஓடி விடும்.

மாற்றானை வசை பாட இந்த சாதிக்கு துணிச்சல் வருகிறதோ இல்லையோ,சொந்த சாதியை வசை பாட நன்றாக தெரியும்.

நீ என் சாதி என்று ஒருவன் முகநூலில் பெருமை கொண்டு வசைப்பாடுகிறான் உன்னை.
ஆனால்,இதே முகநூலில் சாதி,சாதி என்று அவனை ஏன்டா உன் சாதிக்காரான் என வசைப்பாடுகிறாய் என்று இன்னொரு வன்னியன் இவனை வசைப்பாடுகிறான்.

சொந்த சாதிக்காரனை தூக்கிவிட முடியவில்லை என்றாலும் அவனை வசைபாடி சேற்றில் தள்ள நினைக்காதே.

சொந்த சாதி உன் பெருமைக்கு வழிகோலவில்லை என்றாலும் உன் பெருமையை பங்கு போட நினைத்தால் பெருமை கொள்.

சொந்த சாதி இதற்காகவது துணை நிற்கிறதே என்று.
-------------------------------

No comments:

Post a Comment