Sunday, September 25, 2016

கடலங்குடி வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள்

கடலங்குடி வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான 
============================================
ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள்:
===================================
கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான இவர்கள் தங்களை பார்கவ கோத்திரத்து ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களது சொத்துப்பத்திரங்களில் தங்களை "பிரம்ம வன்னிய க்ஷத்ரிய ஜாதி" என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் குறுநில மன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் விளங்கியிருக்கின்றனர். ஓமாம்புலியூர், நாகை மாவட்டம் கடலங்குடி, தஞ்சை மாவட்டம் குறிச்சி (அணைக்கரை அருகே உள்ளது) ஆகிய இடங்களில் இவர்களுக்கு அரண்மனைகள் இருக்கின்றன. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் ஓமாம்புலியூரும் தெற்குக் கரையில் கடலங்குடியும் அமைந்திருக்கின்றன.
கடலூர் மாவட்டம் முட்டத்தில் உள்ள பெரியாண்டவர் கோயில், காட்டுமன்னார் கோயில் அருகே கடம்பூரில் உள்ள சிவன் கோயில், ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம்), கடலங்குடி மாரியம்மன் கோயில், சிவன் கோயில் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு இவர்கள் பரம்பரை உரிமையுடையவர்களாக விளங்கிவருகின்றனர்.
கடலங்குடி அரசர் "ஸ்ரீமத் ஆதி கலிங்கராய முத்துகுமாரசாமி ஆண்டியப்ப உடையார்" அவர்கள், உடையார் பாளையத்தின் 23-வது அரசரான "ஸ்ரீமத் கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார்" அவர்களுக்கு தமது மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் வம்சத்தினர்களான முகாசா பரூர் கச்சியராய அரசர்கள் மற்றும் ஊற்றங்கால் அரசர்களான பரமேஸ்வர வன்னிய நயினார் ஆகிய வன்னிய அரச மரபினர்களுடன் கடலங்குடி அரசர்கள் திருமண உறவை கொண்டுள்ளனர்.
கடலங்குடி அரசர்கள் "ஆதி கலிங்கராயர்" என்று அழைக்கப்படுவதால், இவர்களது முன்னோர்கள் கலிங்கப்போரில் பங்கேற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
----- xx ----- xx ----- xx -----
குறிச்சி அரசர் "ஸ்ரீமத் ஆதி கலிங்கராய கொளஞ்சிராஜ ஆண்டியப்ப உடையார்" அவர்கள் மேற்குறிப்பிட்ட வரலாற்றை, அருமை உறவினர் திரு. அண்ணல் கண்டர் அவர்களிடமும், என்னிடமும் சொன்னார்கள். இதை நாங்கள் 2014 ஆம் ஆண்டு நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கிறோம்.
----- xx ----- xx ----- xx -----

Thanks To: NMurali Naicker Anna.

No comments:

Post a Comment