Friday, September 16, 2016

சம்புவராயர் Sambuvarayar Kings

பல்லவ வம்சா வழிகளான சம்புவராயர்கள்:

===============
1."ஓமயிந்தன்முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்":
===============
சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன்
முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான்
சம்புவராயர் குல முன்னோடி.
இவன்பள்ளி குலத்தவன்.
இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)
-----------------------------
2."செங்கேணி சாத்த நாலாயிரவன்"(கரிகாலச் சோழ நாடாள்வான்):
===============
இவனுக்குப் பிறகு அறியப்படும் குறுநிலத்தலைவன் 
"செங்கேணி சாத்த நாலாயிரவன்" எனும்
கரிகாலச் சோழ நாடாள்வான்.
இவனது கல்வெட்டுக்கள் திண்டிவனப் பகுதியான கிடங்கலில் காணப்பெறுகிறது. 
இவன் சோழ மன்னரான அதி ராஜேந்திரன் காலத்தில்
 குறுநில மன்னனாக் ஆட்சி செய்தவன்.(ARSIE,1902,no.227, S.I.I.Vol 7, No.854).
-------------------------------
3."ஓய்மா நாட்டு முந்நூற்றுப் பள்ளி செங்கேணி நாலாயிரவன்
 அம்மையப்பன்"(ராஜேந்திரசோழ சம்புவராயன்):
==================
சம்புவராய மன்னனாகிய ஓய்மா நாட்டு முந்நூற்றுப் பள்ளி
 செங்கேணி நாலாயிரவன்அம்மையப்பன் எனும் ராஜேந்திர
 சோழ சம்புவராயன் என்பான் கி.பி 1128 வாக்கில் ஆட்சி செய்த குறு நில மன்னனாவான். 
இக்குறு நில மன்னனின் பத்து கல்வெட்டுகள்.
கி.பி 1123 ஆம் ஆண்டு முதல் கி.பி 1174 ஆம் ஆண்டு முடிய எழுதப்
பெற்றிருக்கின்றன. 
================================
1.வேலூர் மாவட்டம் திருவல்லம்(ARE 232 of 1921).
2.வாயலூர் (ARE 422 of 1922).
3.காஞ்சி மாவட்டம் மதுராந்தகம்(ARE 400 of 1922).
4.திருவண்ணாமலை மாவட்டம்சீயமங்கலம்(ARE 63 of 1900).
5.மடம்(ARE 234 of 1919,238 of 1919, 252 of 1919 and 100 of 1939-1940).
6.தேவனூர்(ARE 298 of 1929 and 302 of 1929).
7.திருக்கழுக்குன்றம்(ARE 126 of 1932-33).
-----------------------------------------------------
ஆகிய இடங்களில் இவ்வரசனுடைய பத்து 
கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. 

இந்த சம்புவராய மன்னர்கள் "பள்ளிகுலத்தவர்" எனக் கல்வெட்டுக்களில்குறிப்பிடப் படுகின்றனர். இவர்கள்
 சுந்தரச் சோழன் ஆட்சி காலம் முதல் விஜய நகர வேந்தர் படையெடுப்பு வரை தொடர்ந்து தொண்டை மண்டலப் பகுதி ஆட்சியாளர்களாகவும்,குறு நில மன்னர்களாகவும் விளங்கினர். 
----------------------------
விஜய நகர வேந்தர் படையெடுப்பின் போது
முழுவுரிமை பெற்ற மன்னர்களாய் விளங்கினர்.
இம்மன்னர்கள் கல்வெட்டுக்கள் மூலம்
இவர்கள் பள்ளி குலத்தவர் என்பதை அறியலாம்.
தமிழக வரலாற்றாசிரியர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
--------------------------------
சம்புவராயர் குறித்த வரலாற்று நூல்களும் மறுக்க முடியாத
 ஆதாரங்களுடன் இவர்கள் வன்னியர்(பள்ளி) குலத்தவர் என்று
 கூறுகின்றன.

சம்புவராய மன்னர்கள் வன்னியர் குலத்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. 

சோழர் காலத்தில் அவர் சிற்றரசராய் தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி செய்தோர் வன்னியரே என்பது உறுதி. 
-------------------------------------------------------------
சம்புவராயர்கள்:
==========================
 கி.பி.1340 சம்புவராயர்கள் சோழர் காலம்,தொட்டு 16 ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்)
மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். 

பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராசகம்பீர இராச்சியம் என்ற பெயரில் ஆண்டனர். 
--------------------------------------
விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர்.
பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர்.
சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர்.
-------------------------
சம்புவராயர ஆரம்ப கால அரசர்கள்:
===============
1.அழகிய சிங்க சம்புவராயன்.
2.இராசராச சம்புவராயன்
3.திருபுவன வீர சம்புவராயன்.
4.அழகிய சோழ சாம்புவராயன்.
5.அத்திமல்லன் சம்புவராயன்.
6.வீரப்பெருமாள் சம்புவராயன்.
7.எடிதிலி சம்புவராயன்.
8.இராச கம்பீர சம்புவராயன் ஆகியோர்
 சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.
--------------------------
கி.பி.14 இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 
ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர்  படையெடுப்பு பின்போது
 மூன்றாம் வீரவல்லாலன்(வன்னியர்)
 சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். 

சம்புவராயர்கள் தமிழையும்,தமிழ்க்குடியினரையும் பெரிதும் 
பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள். 

இவர்களின் நாணயங்கள் "வீரசெம்பன்குளிகைகள்" என அழைக்கப்பட்டன. 

தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர்.
"அஞ்சினான் புகலிடங்கள்" அமைத்தார்கள்.
------------------------------
சம்புவராயர்களின் காலம்:
==================
1.ராஜ கம்பீர சம்புவராயர் -(கி பி 1236 -1268).
2.மண் கொண்ட சம்புவராயர் -(கி பி 1322 - 1337).
3.ராஜ நாராயண சம்புவராயர் -(கி பி 1337 - 1373).
4.மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயர் -(கி பி 1356 - 1375). 
-----------------------------------------

1 comment:

  1. 🤣🤣🤣அப்படியென்றால் சாம்பவாபரையர்களின் கிளைக்குடி என்று உணர்ந்து கொள்ளுங்கள்

    ReplyDelete