Monday, September 26, 2016

முற்கால சோழ பள்ளி மன்னர்கள்

முற்கால சோழ பள்ளி மன்னர்கள்:
================
சென்னி என்பதன் பொருள் செங்கழல்(தீதழல்) குலத்தவர்.
-----------------------------
1. சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி C.286 BCE.
2.சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி C.275 BCE.
3.சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி C. 205 BCE.
4.சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி C. 165 BCE.
5.சோழன் கரிகாற் பள்ளி பெருவளத்தான் -I C. 140 BCE.
6.சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி C. 120 BCE.
7.சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி C.70 BCE.
8.சோழன் பள்ளி நலங்கிள்ளி C.35 BCE.
9.சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி C. 20 BCE.
10.சோழன் குளமுற்றத்துத் பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் C. 15 BCE.
11.உருவபாரக்கிருமப்பள்ளி இளஞ்ச்சேட்னி சென்னி C.10-16 CE.
12.சோழன் கச்சி கரிகாற்பெருவளத்தான் C. 31 CE.
13.சோழன் பள்ளி நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் C.52 CE.
14.சோழன் நெடுங்கிள்ளி C. 72 CE.
15.காரியாற்றுத் பள்ளி துஞ்சிய நெடுங்கிள்ளி C.99 CE.
16.சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் C.120 CE.
17.சோழன் வேற்பள்ளிறடக்கைப் பெருவிறற் கிள்ளி C.143 CE.
18.சோழன் கோப்பெருஞ் சோழன் C.192 CE .
19.சோழன் போரவைக்கோப்பள்ளி பெருநற்கிள்ளி C.220 CE .
20.சோழன் நல்லுருத்திரன் C.245 CE.
------------------------------

Sunday, September 25, 2016

இராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை கல்வெட்டு



-----------------------------
திருவாரூர் தியகராஜர் ஆலயத்தில் உள்ள இராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை கல்வெட்டு. 
அந்த கல்வெட்டில் சிவன்,இராசராசன் மற்றும் இராஜேந்திரசோழன் மூவரின் பிறந்தநாட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
-----------------------------------------


இராஜேந்திரசோழனின் பெங்களூர் சொக்கநாதர்கோவில்

முதலாம் இராஜேந்திரசோழனால் கி.பி. 10 நூற்றாண்டில் கட்டப்பட்ட பெங்களூர் மாவட்டத்தில் உள்ள சொக்காநாதர் சுவாமி கோவில். கோவில் அமைந்துள்ள இடம்:டொம்லூர்,பெங்களூர்.
-----------------------------------------------


சொக்கநாதர் கோவிலில் உள்ள மதுராந்தகவர்மனின்(இராஜேந்திரசோழன்) சிலை.
--------------------------------
சொக்கநாதர் கோவிலில் உள்ள இராஜேந்திரசோழ கால தமிழ் கல்வெட்டு.
-----------------------------------------


முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான காடவன் மாதேவி


------------------------------------
காடவன் மாதேவியான விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்:
====================================
முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசியான "காடவன் மாதேவி" அவர்கள், பல்லவ வம்சத்தில் தோன்றிய அரசியாவார்கள். பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்களது பெயரினில் ஓர் "சதுர்வேதிமங்கலம்" அமைந்திருந்தது என்பதை சோழர்கள் காலக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது :-
"காடவன் மாதேவி ஆன விருதராஜபயங்கர சதுர்வேதிமங்கலம்" (S.I.I Vol-II, No.22, Page - 114)
"விருதராஜா பயங்கரன்" என்பது முதலாம் குலோத்துங்கச் சோழனின் பெயராகும். அவன் "பல விருதுகள் பெற்ற அரசர்களுக்கெல்லாம் பயங்கரமான அச்சத்தை கொடுப்பவன்" என்பதால் "விருதராஜ பயங்கரன்" என்று அழைக்கப்பெற்றான்.
சோழ மன்னர்கள், "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்த அரசியார் "காடவன் மாதேவி" பெயரிலும் சதுர்வேதிமங்கலத்தை ஏற்படுத்தி அதை "பிராமணர்களுக்கு" கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையிலே வன்னியர்கள் பெருமையடையவேண்டிய விஷயமாகும்.
வன்னிய மன்னர்களான நிலகங்கரையர்களும், சம்புவராயர்களும் கீழ்கண்ட சதுர்வேதிமங்கலங்களை, பிராமணர்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவை :-
"பஞ்சநதிவாணச் சதுர்வேதிமங்கலம்"
"ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்"
"சம்புகுலப் பெருமாள் அகரமான இராஜ கம்பீரச் சதுர்வேதிமங்கலம்"
"செய்யாற்று வென்றான் சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீ மல்லிநாதச் சதுர்வேதிமங்கலம்",
"வீரகம்பீர சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீமத் ராஜநாராயணச் சதுர்வேதிமங்கலம்"
"காங்கயநல்லூரான நீலகண்டர் சதுர்வேதிமங்கலம்"
"ஓசூரான காலிங்கராய நல்லூரான காலிங்கராயச் சதுர்வேதிமங்கலம்"
"இந்திரவனமான இராசநாராயணக்கவனமங்கலம்"
சதுர்வேதிமங்கலங்களை க்ஷத்ரியர்களான வன்னியர்கள், பிராமணர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது என்பது அவர்களின் மீது வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை காட்டுகிறது. இன்றும் பல வன்னியர்கள் பிராமணர்களின் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாகும்.
----- xx ----- xx ----- xx -----


Thanks To: NMurali Naicker Anna.

காடவர் கோன் கழற் சிங்கன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன்


------------------------------------
காடவர் கோன் கழற் சிங்கன்:
===========================
வன்னிய குல க்ஷத்ரிய வேந்தரான "காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை", சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"கடல் சூழ்ந்த உலகுஎலாம் காக்கின்ற பெருமான்
காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"
பல்லவர் பெருமான் கழற்சிங்க நாயனார் அவர்கள், சைவ நாயன்மார்களுள் ஒருவர் ஆவார்கள். இவர், கடலால் சூழப்பட்ட பல நாடுகளை ஆட்சி செய்தவர் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
எனவே இந்த அடிப்படை சான்றின் மூலம் தெரியவரும் உண்மையானது என்னவென்றால், வன்னிய குல க்ஷத்ரிய வேந்தர்களான பல்லவர்கள், தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆட்சி செய்தவர்கள் என்பதும் அங்கே அவர்கள் பல கோயில்களை கட்டியவர்கள் என்பதாகும்.
சோழர்கள் காலத்தில் பெரியபுராணம் எழுதிய புலவர் சேக்கிழார் பெருமானார் அவர்கள், அப் புராணத்தில் காடவர் கோன் கழற்சிங்க நாயனாரை :-
"படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்" என்றும் "காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இத்தகைய பெருமைமிகு பல்லவ வம்சத்தில் இருந்து வந்தவரே, வீர வன்னிய குல க்ஷத்ரிய வேந்தன் "காடவ கோப்பெருஞ்சிங்க பல்லவன்" ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
Thanks To: NMurali Naicker Anna.

சோழ மாமனும்(குலோத்துங்கசோழன்) பல்லவ மச்சானும்(காடவராயன் கோப்பெருஞ்சிங்கன்)

                                                சோழ மாமனும் பல்லவ மச்சானும்: 
                                                  =================================
சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு, பல்லவ குல பாரிஜாதன் காடவ கோப்பெருசிங்கன் அவர்கள், "மச்சான்" மற்றும் "மருமகப்பிள்ளை" உறவுமுறை.
பள்ளி குல காடவராய கோப்பெருசிங்கப் பல்லவனுக்கு, சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், "மாமன்" மற்றும் "மாமனார்" உறவுமுறை.
இந்த ஒருசான்றே போதுமானது, சோழர்களும் பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதற்கு.
                                                  ================================

கடலங்குடி வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள்

கடலங்குடி வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான 
============================================
ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள்:
===================================
கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்திய வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான இவர்கள் தங்களை பார்கவ கோத்திரத்து ஸ்ரீமத் ஆதி கலிங்கராய உடையார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களது சொத்துப்பத்திரங்களில் தங்களை "பிரம்ம வன்னிய க்ஷத்ரிய ஜாதி" என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் குறுநில மன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் விளங்கியிருக்கின்றனர். ஓமாம்புலியூர், நாகை மாவட்டம் கடலங்குடி, தஞ்சை மாவட்டம் குறிச்சி (அணைக்கரை அருகே உள்ளது) ஆகிய இடங்களில் இவர்களுக்கு அரண்மனைகள் இருக்கின்றன. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் ஓமாம்புலியூரும் தெற்குக் கரையில் கடலங்குடியும் அமைந்திருக்கின்றன.
கடலூர் மாவட்டம் முட்டத்தில் உள்ள பெரியாண்டவர் கோயில், காட்டுமன்னார் கோயில் அருகே கடம்பூரில் உள்ள சிவன் கோயில், ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம்), கடலங்குடி மாரியம்மன் கோயில், சிவன் கோயில் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு இவர்கள் பரம்பரை உரிமையுடையவர்களாக விளங்கிவருகின்றனர்.
கடலங்குடி அரசர் "ஸ்ரீமத் ஆதி கலிங்கராய முத்துகுமாரசாமி ஆண்டியப்ப உடையார்" அவர்கள், உடையார் பாளையத்தின் 23-வது அரசரான "ஸ்ரீமத் கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார்" அவர்களுக்கு தமது மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் வம்சத்தினர்களான முகாசா பரூர் கச்சியராய அரசர்கள் மற்றும் ஊற்றங்கால் அரசர்களான பரமேஸ்வர வன்னிய நயினார் ஆகிய வன்னிய அரச மரபினர்களுடன் கடலங்குடி அரசர்கள் திருமண உறவை கொண்டுள்ளனர்.
கடலங்குடி அரசர்கள் "ஆதி கலிங்கராயர்" என்று அழைக்கப்படுவதால், இவர்களது முன்னோர்கள் கலிங்கப்போரில் பங்கேற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
----- xx ----- xx ----- xx -----
குறிச்சி அரசர் "ஸ்ரீமத் ஆதி கலிங்கராய கொளஞ்சிராஜ ஆண்டியப்ப உடையார்" அவர்கள் மேற்குறிப்பிட்ட வரலாற்றை, அருமை உறவினர் திரு. அண்ணல் கண்டர் அவர்களிடமும், என்னிடமும் சொன்னார்கள். இதை நாங்கள் 2014 ஆம் ஆண்டு நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கிறோம்.
----- xx ----- xx ----- xx -----

Thanks To: NMurali Naicker Anna.

Saturday, September 24, 2016

சோழ வம்சத்தவர்கள் வன்னியர்கள்


சோழ வம்சத்தவர்கள் வன்னியர்கள்:
==============================
                                        சோழ மன்னர்களை தங்களது வம்சத்தவர்கள்
                                               ===================================
                                       என்று பொய் சொல்பவர்களின் அறியாமை நிலை:
                                               ====================================
சோழர்களின் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் அக் காலத்தில் வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான பிச்சாவரம் சோழர்களுக்கு நடைப்பெற்ற முடிசூட்டு விழாவை "வேடிக்கை பார்க்க" மற்றும் "வேலை செய்ய" வந்தவர்களின் வாரிசுகள் தான் இப்போது தங்களை "சோழ மன்னர்களின் வாரிசுகள்" என்று எவ்வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்லுகிறார்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை அம்பலத்தின் பொற்கூரையில் இருக்கும் "பஞ்சாட்சரப் படியில்", தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ மன்னர்களை அமரவைத்து, எம்பெருமானுக்கு அன்றாடம் செய்யப்பெறும் வலம்புரி சங்கால் "திருஅபிஷேகம்" செய்தபிறகு மந்திரங்கள் எழுதப்பெற்ற பனைஓலையை மன்னருக்கு நெற்றியில் பட்டமாக கட்டுகிறார்கள்.
தில்லை வாழ் அந்தணர்கள் முடிசூட்டு விழாவின் போது, பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு "வளவன் வாழ்க" என்று "மணிமுடி சூட்டுகிறார்கள்". அதன் பிறகு புலிக்கொடியை பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு கொடுக்கிறார்கள். இத்தகைய "புலி கொடி" தான் உண்மையான சோழர்களின் புலிக்கொடியாகும்.
முடிசூட்டு விழாவின்போது, சோழர்களின் குல மாலையான "ஆத்தி மாலையை" தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு அணிவிக்கிறார்கள்.
முடிசூட்டு விழா முடிந்ததும் "ராஜ கம்பிரத்துடன்" சிதம்பரத்தின் ராஜ வீதிகளில் யானையில் உலா வருகிறார்கள், வன்னிய குல க்ஷத்ரியர்களான பிச்சாவரம் சோழ அரசர்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை வாழ் அந்தணர்களிடம் முடியெடுத்து கொடுக்கும் வேலையாட்கள் கூட, இன்று தாங்கள் தான் சோழர்களின் வாரிசுகள் என்று பொய் சொல்கிறார்கள். சோழர்களின் சமூகத்தை சேர்ந்த வன்னியர்கள், அவர்களிடம் சோழர்கள் காலத்தில் வேலை செய்ததாக சிதம்பரம் வரலாற்று கூட்டத்திலேயே எந்த வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்கிறார்கள்.
சோழர்கள் காலம் முதல் இன்று வரை, தங்களது குல தெய்வ கோயிலான தில்லை ஆடல்வல்லான் கோயிலில் "சோழ மன்னர் மண்டகப்படி" செய்யும் சோழ அரசர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ அரசர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிப்பவர்களின் மரபினர்கள் தான் இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்கிறார்கள்.
இப்படி இந்த முடிசூட்டு விழா / சோழ மன்னர் மண்டகப்படிகளை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மற்றும் வேலை செய்ய வந்தவர்களின் வாரிசுகள் தான், இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
எல்லாம் காலத்தின் கோலமாகும்.
----- xx ----- xx ----- xx -----
Thanks To: NMurali Naicker Anna.


Saturday, September 17, 2016

தகடூரின் பெருமை வன்னியர்கள்:

தகடூரின் பெருமை வன்னியர்கள்:

=====================

மழவர் நாட்டின் சிங்கம் எங்கள் கவுண்டமார்களின் சத்ரிய புத்திரன் அதியமான் நெடுமன் அஞ்சி.
---------------------


தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள வன்னியகுலம் என்று பெயர் கொண்ட வன்னியபெருங்குலத்தின் பெருமை கொண்ட ஊர்.
-----------------

தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள எஸ்.கொட்டாவூரில் உள்ள எம் இனத்தின் அக்னி கொடியும்,எம் மக்களின் மூவர்ண கொடியும்.
--------------------

தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள அருள்மிகு கொல்லாபுரி மாரியம்மன் கோவில். 

கோவில் தர்மகர்த்தா - ம.சு.காவேரிகவுண்டர் (வன்னியர்). 

கொல்லாபுரி மாரியம்மன் கோவிலில் உள்ள ருத்ரவன்னியர் சிலை.
---------------------------
தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம்:
==============
பி.ஆர்.இராஜகோபால் கவுண்டர்(வன்னியர்) அவர்களால் உருவாக்கப்பட்டவை.
-----------------------------





கங்கைகொண்டசோழபுரம் இராஜேந்திரசோழ பள்ளியான் மாபெரும் கட்டிடகலை

கங்கைகொண்டசோழபுரம் இராஜேந்திரசோழ பள்ளியான் மாபெரும் கட்டிடகலை:

=============================
எங்கள் முப்பாட்டன் கோவிலில் பெருமை பேசும் எங்கள் மூவர்ணகொடி..!
-------------------------------
கங்கைகொண்டசோழபுரம் தல விருட்சம் வன்னிமரம்.
1000 ஆண்டு வரலாற்று பெருமையை கொண்டவை...!
-------------------------
எங்கள் அக்னி குலத்தின் மூத்தோன் சிவனும்,பார்வதியும் பெரும்பள்ளி இராஜேந்திரசோழனுக்கு முடிசூட்டும் காட்சி.
----------------------------------
பஞ்சாவன் மாதேவியார் அவர்களின் பள்ளிப்படை கோவில்.
-----------------------

உடையார்பாளையாம் ஜமீன்கள் கங்கைகொண்டசோழபுரத்துக்கு கோவிலுக்கு தானம் அளித்த கோவில் கல்வெட்டு.

காலாட்கள் தோழ உடையார் தனமம்.
---------------------------
ஆடவல்லாளன் கோளத்தில் நிற்கும் எங்கள் அப்பன் ஈசன்.
சோழனின் கலையில் மிக நுண்ணியமான சிற்பம்.
----------------------------
Photo'S Taken:Nokia 808 PureView Mobile.
-------------------------------
கங்கொண்ட சோழப்புரம் ஒரு பொக்கிஷம்:
============================



































------------------------------------