மழவர்கள்:-
மழவர்கள் என்றால் தலைவன் என்று பொருள், தகடூர் நாட்டில் போர் மறவர்களாக விளங்கிய பழங்குடியினர் மழவர்கள், மழவர் என்பார்சிலைவீரர்கள் என்று நச்சினார்க்கினியார் கூறியுள்ளார். வில்லேந்திய வீரர்கள் மழவர்கள். இன்றுள்ள மழவராயர்கள் மழவர்களின் வழித்தோன்றல் ஆவார். பதிற்று பத்து என்ற சங்க நூலில் "மழவர் மெய்ம்மறை" என்ற தொடர் இடம்பெறுகிறது. தகடூர் நாடு மற்றும் செங்கம் பகுதிகளில் வரும் பெயர்களான“மழுவூர் மற்றும் மழ நாடர்” மழவர்களுடன் தொடர்புடையவை.
கால்நடைகள் மிக்க காவல் காடுகளை காக்கும் பணியில் மழவர்வெட்சியரவாகவும் கரந்தையராகவும் போரிடும் காட்சியை அகநானூறு (35) தெளிவாக கூறுகிறது. மழவர்கள் ஓரிடத்தில் தங்காது அலைந்து திரிந்தவர் என்பர், அவர்கள் காவற்காடுகளையும், குறும்புகளையும் பாதுகாக்கும் வீரர்களாக தொண்டை மண்டலத்திலும், தகடூர் நாட்டிலும் வாழ்ந்தனர். மழு என்றால்“இளமை” என்று பொருள், மழகளிறு என்ற சொல்லுண்டு. மழவரை நடுகற்களில் வரும் இளையோர் என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தவர். (இளமக்கள் என்றால் வீரர்கள்), இளையர் என்றால் காவலர், ஏவலர், வீரர் என்று பொருள். இளையர் என்ற சொல்லுக்கும் போருக்குமிடையிலான தொடர்பு தொன்மையானது.
“இளையர் நட்ட நடுகல்” என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.
“இளமக்கள் நடுவித்த கல்” செங்கம் நடுகல்லில் உள்ள கல்வெட்டு.
“நிரைகோளில்” மழவர் (மறவர் – வீரர்) இளயர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.
“சிம்மவிஷ்ணு” மழவர்களை வென்றார்கள் ( தருமபுரி மற்றும் செங்கம் நடுகல் கல்வெட்டு)
மேலும் அதியனையும், ஒரியையும் “மழவர் பெருமகன்” என்று சங்க காலப் புலவர்கள் பாடியுள்ளார்கள். மழவர்கள் வாழ்ந்த நாடான “மழ நாடு” சுமார் 180 கி.மீ பரப்பளவுடையது.
மழவர்கள் பகைத்தப் பகைவர்களை போரின்கண் வெல்வார்கள், அழிப்பார்கள், புயல்வேகமாய் பறக்கும் குதிரை மீது எறிபோய் போரிடும் மறவர்கள், பொலிவுற்ற வீரக்கழல்களை காலிலே அணிந்து ஏறு நடைபோடும் சிங்கங்கள். வில் போரில் வல்லவர்கள், வீரமே நிலைக்களனாக கொண்டவர்கள். அப்படிப் பட்டவர்கள் வில் பயிற்சி முடிந்து முதன் முதலாக வில்லில் அம்பு விடும் நாளை தொடை நாளாக விழாவாக கொண்டாடுவர்.
மழவர்களின் தலைமயிர் செம்மறியாட்டுக் கிடாயின் வளைந்த கொம்பு போல சுருண்டு அழகாக இருக்கும். மழவர்களின் அழகிய கழுத்துப்பிடரியை அம்மயிற் மறைத்து இருக்கும். சினத்தால் சிவந்த கண்களை பெற்றவர். நெருப்பை உண்டாக்கும் அம்பு வில்லும் கொண்ட எரிஅம்பு வீரர்கள் மழவர்கள். பசுக்களைக் கவர்ந்து செல்லப் போர்ப்படையுடன் செல்பவர்கள். கொற்றவை தெய்வத்தை வணங்குபவர்கள் மழவர்கள்.
“யாவ ராயினுங் கூழை தார்கொண்
டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு றுண்பூ ணம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழுவுத்தோ ளேன்னையைக் காணா வூங்கே”.
- -ஒளவையார் (புறநாநூறு – 88)
தகடூர் வீர மழவர்கள்:-
தகடூர் நாட்டை ஆண்ட மன்னன் அதியமான் தமிழரில் வீரஞ்செறிந்த குடியினரான மழவர்கள் இனத்தை சேர்ந்தவன், எனவே அவனை புலவர் அவ்வையார் அதியமானை மழவர் பெருமகன் என்று மிக அழகாக பெருமிதமாக குறிப்பிடுகின்றார். தகடூர் நாட்டில் இவர்கள் பெருந்தக்குடியினர், ஆளும்வர்க்கதினர், நாடாண்டமரபினர் இவர்களே பின்னர் மழவராயர் என்று அழைக்கபடுகின்றனர். இந்த மழவர்களே தகடூர் நாட்டில் வழி வழியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மழவர் பெருமகனான அதியமானின் மரபுவழி மக்களாவர். இவர்கள் தகடூர் நாட்டில் தனித் தமிழ் இனமாகும். இவர்களுக்கென்று தனிநாடு தகடூர் நாடு, இவர்களின் தலைநகரம் தகடூராகும். இவர்களின் குடியில் மாபெரும் வீரனும் மன்னனுமான அதியமான் நெடுமானஞ்சி புகழ் அரசனாவான்.
மழவர்களின் போர்த்திறம்:-
அகநானூற்றில் மணிமிடைப்பவளம் பகுதியில் சங்கப் புலவரான மாமூலனார்என்பவர் மழவர்களின் போர்த்திறம் உரைத்துள்ளார்.
“............................................................ கறுத்தோர்
தெம்முனை சிதைத்த கரும்பரிப் புரவி
வார்கழல் பொழிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞேமிரிய திருநகர் முற்றம்
புலம்புறங் கொல்லோ....................................”
- -மாமூலனார் (அகநானூறு மணிமிடைப்பவளம் 187-ஆம் பாடல்)
பகைவரை பகைத்தற் கிடனான போர் முனையின்கண் வென்று அழித்த கடிய நடையினையுடைய குதிரையையுடைய நெடிய வீரக்கழலால் பொலிவு பெற்ற தருகண்மையையுடைய போர் மறவர்களுக்குரிய அழகிய அம்பு தொடுத்தற்குரிய விழா நிகழ்ச்சியினையுடைய முதல் நாள் போல கொணர்ந்து பரப்பிய மணலையுடைய அழகிய நமது மாளிகையின் முற்றமானது அவர் இல்லாமையால் தனிமையுற்றுப் பொலிவிழந்து போய் விடுமோ என்றா ளேன்க.
தகடூர் நாட்டில் வில்லின் நானேற்றி அம்பு தொடுத்து போரிடும் மழவர்களை மறவர்களை கொண்டிருந்தது என்று பதிற்றுப்பத்தில் அர்சில்கிழார் கூறுகின்றார். அகநானூற்றில் 187 ம் பாடலில் மாமூலனார் மழவர்களின் போர்த்திறனையும் அவர்களது குதிரையின் சிறப்பையும் அவர்களது கால்களில் வீரக்கழல்கள் போலிந்ததையும் கறுத்தோரை பகைவரை பிறழ்ந்து நோக்கி வீரத்தோடு போரிட்டு அழிக்கும் ஆற்றலையும் வன்கண் மழவர் என்றும் தறுகண்மையையுடையவர் என்றும் குறிப்பிட்டு தகடூர் நாட்டில் மழவர் முதன் முதலாக அம்புவிடும் நாள் விழா தொடை விழா என்று கொண்டாடுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
குதிரைகளைக் கொண்ட மழவர்:-
அகநானூற்றில் முதல் பாடலில்
“வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஒட்டிய
முருகன் நற்போர் நெடுவேல் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்”
- – அகம்: 1(மாமூலனார்)
வண்டினம் மொய்த்துச் சிதறுமாறு புதிய பூக்களாலே தொடுத்த கண்ணியைச் சூடிக் கால்களிலே ஒள்ளிய வீரக்கழல்கள் ஒலி முழங்க அஞ்சத்தக்ககுதிரைகளை உடைய மழவர்களை நெடுவேள் ஆவி என்கிற மன்னன் வெருட்டி ஓட்டினான். அத்தகைய ஆவி மன்னனின் போர் யானைகள் மலிந்த பொதினி மலையானது என்று மாமூலனார் கூறிகின்றனர். ஆக கண்ணி மாலைச்சூடி ஒளி பொருந்திய வீரக்கழல்கள் கால்களிலே புனைந்து ஒலி முழங்க புயலென கிளம்பி போரிடும் குதிரைப் படையினர் மழவர் என்பதை அறிகின்றோம்.
குறும்படை மழவர்:-
“தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
முனைஆத் தந்து முரம்பின் .........................”
- -அகம்: 35 (அம்மூவனார் புலவர்)
ஒப்பற்ற மணியானது மாறி மாறி ஒலிப்பதும் கடையாணி இட்ட காம்பினை கொண்டதும் கூர்மையான முன்னையை உடையதுமாகிய நெடிய வேலினை உடையவர். குறும்பினை உடையவராக மழவர்கள் , வெட்சியராகிய அவர் போர் முனையிலே வென்று பசுக்களை மீட்டனர்.
கடுங்கண் மழவர்:-
அகத்தில் 91 ம் பாடலில் மழவர்கள் உழவு செய்யக்கூடியவர்கள் என்கிறார்.
“..........................................................இருங்கேழ்
இரலை சேக்கும் பரல்உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஓரங்காட்டு உம்பர்
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்”
கருநிறமான கொம்புகளையுடைய ஆண்மான்கள் உயர்ந்த கற்குவியல்கள் விளங்கும் பரல்களிலே தங்கி கிடக்கும் வன்கண் மையினையுடைய மழவர்கள் தம் களவாகிய உழவிற்கு எழுதுகின்ற இடம் இது. நீண்ட அடிமரத்தினையுடைய ஆசினி மரங்கள் செறிந்த ஓடுங்காட்டிற்குஅப்பால் இறுகிப் பிணைத்த முழவினையுடைய குட்டுவன் என்பான் காத்து வருதலால்.
“வயவாள் எறிந்து வில்லின் நீங்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப்படுக் குண்ட வான்கண் அகலறைத்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்”
- -அகம்:309 (கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார்)
பசுக்கூட்டங்களை கவர்ந்து அவைகளை வேப்பமரத்தின் முன் கொற்றவைதெய்வத்திற்கு பலி கொடுத்தவர்கள் மழவர்கள்.
செங்கண் மழவர்:-
தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர்
வாய்ப்பகை கடியும் மண்ணோடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லோடும் பற்றி
நுரைதெரி மத்தம் கொளிஇ நிறைப்பிறத்து
அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு”
- -அகம் 101.
செம்மறி ஆட்டு கிடாயின் கொம்பினைப் போல சுருண்டு கடை சுரிந்த பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்களையும் உடையவர்கள் மழவர்கள். அவர்கள் தம் வாயினின்று எழும் பகையினை எழாமல் தடுக்கும் பொருட்டாகப் புற்று மண்ணை வாயிலே அடக்கிக் கொள்வர். கடுமையான சக்திவாய்ந்த நெருப்பினை உண்டாக்கும் சிறிய அம்பினை வில்லிலே தொடுத்து கைப்பற்றியாவராக செல்பவர். சென்று வெண்ணெய்யை வெளிப்படுத்தும் தயிர் கடையும் மத்தினைக் கவர்ந்து கொள்பவர். ஆநிரைகளை உள்ளவிடத்திலே தம் காலடி தடங்களை மறைக்கும் செருப்புகளை ஒலிக்குமாறு சென்று, காவல் மீது தொளுவங்களிலேயுள்ள கன்றுங்களுடன் கூடிய பசுக்களை கொள்ளையிடுபவர். அப்படி கொள்ளையிட்ட ஆனினங்களை அவர்கள் தம்மிடத்து ஓட்டிக்கொண்டு போகும் அகன்று கிடக்கும் இடத்தியுடயது பெரிய காடு.
நோன்சிலை மழவர்:-
............................................................ வறிது
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறியியல் திரங்கும் அத்தம் வெறிகொள
உமன்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்
நோன்சிலை மழவர் ஊன்புகழுக்கு அயவரும்
சுரன்வழக்கு அற்றது ....................................................”
- -அகம் 119.
அவ்வழியினூடே செல்லும் மக்கள் அறுத்துப்போட்ட பிரண்டைக் கொடியானது இடியால் தாக்கப்பட்டு துணிபட்டுக் கிடக்கும் பாம்புத் துண்டங்களைப் போல வழிபோக்கங்களில் பயனற்று வதங்கி கிடக்கும் காட்டுவழியும் அது.
கல்லா மழவர்:-
“கடுங்கான் மராத்து வாஅன் மெல்லினர்
சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்
கல்லா மழவர் வில்லிடத் தழீஇ
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிப்பெயர் தேஎத்த ராயினும்
பழிதீர் காதலர் சென்ற நாட்டே”
- -அகம் 127.
குற்றமற்ற அன்பினை உடைய நம் பெருமான் இற்றை நாள் அறநூல் முதலியவற்றை கற்றிலாத எயின மறவர்கள்(மழவர்கள்- வீரர்கள்) கரிய அடிப்பகுதினையுடைய வேண்கடம்பினது சிவந்த காம்பினையுடைய வெண்மையான மெல்லிய பூங்கொத்துக்களை தமது சுருண்டு வளைந்துள்ள தலைமயிர் அழகுறும்படிஅணிந்துக் கொண்டு தமது இடப்பக்கத்தே வில்லினைத் தழுவிக் கொண்டு நின்று வழியிலே வருவாரை எதிர்பார்த்த இடத்திற்கான அச்சம் வருவதற்கு காரணமாக கிளை வழிகளையுடைய.!
வெள்வேல் மழவர்:-
“ஏறுடை யினரை பெயரப் பெயராது
செரிசுறை வெள்வேல் மழவர் தாங்கிய
தறுக ணாளர் நல்லிசை நிறுமார்
பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்”
- -அகம்: 269, (மதுரை மருதனிள நாகனார்)
காளைகளை உடைய பசுக்கூட்டம் தம் ஊர்க்கு மீண்டு வரும்படி தாம் போர்களத்தின் கண் புறங்கொடாது நின்று செறிக்கும் சுரையினை உடைய வெள்ளிய வேலேந்திய வெட்சி மழவரை தடுத்து விழுப்புண் பட்டு வீழ்ந்த கரந்தை மறவருடைய நல்ல புகழை எழுதிநிலை நிறுத்துதற் பொருட்டு பிடியானை கிடந்தார் போன்று தோன்றுகின்ற குறிய குன்றின் பக்கத்திலே நட்டுவைத்த போன்று இயற்கையிலே அமைந்துள்ள நெடிய கல்லினது.
ஆடு மாடுகளை கவரும் போரில் ஈடுபட்டு வெட்சிப்பூ அணிந்து மழவர்கள்போரிட்டு அதனை காத்த கரந்தை வீரர்களை போர்க்களத்தில் மாளச்செய்தார்கள்.
தகடூர் நாடு மழவர் நாடு:-
“கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே – முனாஅது
முழவுறழ் திணிதோள் நெடுவேல் ஆவி”
- -அகம்: 61 (மாமூலனார்)
திருப்பதியும் திருமலையும் திருவேங்கடத்தான் தெய்வக்கோவில் ஏற்படாத முன்னம் அப்பகுதியை புல்லி என்கிற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சந்ததியரால் கட்டப்பட்டதே திருமலை கற்கோயிலாகும், நம்மவர் அதனை ஏழுமலையான் கடவுள் என்பார்.
அகநானூற்றில் வேங்கடம் பகுதியை புல்லி ஆண்டான் என்று கூறுகிறது. வேங்கட நாட்டிற்கும், தகடூர் நாட்டிற்கும் அதாவது மழவர் நாட்டிற்கும் அடிக்கடி போர் ஏற்ப்பட்டது. திருவேங்கடத்தை ஆண்ட கள்வர் கோமானான புல்லி என்பவன் மழவர் நாட்டை வென்று தனக்குச் திறைச் செலுத்தி வரும்படி செய்தான். “மழபுலம்” வணக்கிய மாவண் புல்லி. அதாவது மழவர்கள் வாழ்ந்த மண் மழபுலம் என்றாகியது. அதியனின் குடிகள் மழவர்கள் ஆவார்கள்.
****************************************************************************************************************
மழவர்களின் கல்வெட்டுகள் :-
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் நுளம்பமன்னன் நடுகல் உள்ளது. சகஆண்டு 822 என்பதால் கி.பி.900 ஆகும். நுளம்பமன்னன் ஐய்யப்பதேவன் மகன் சிவமாரைய்யனும் கங்காணுமன் மகன் இரண்டாம் பிருதிபதியும் மறவகுன்று என்ற இடத்தில் போரிட்டனர். நுளம்பனுக்குத் துணையாகத் தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் சேவகன் கூடல் மாணிக்கன் இருந்துள்ளான். போரில் மாணிக்கம் இறந்துவிட அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. வீரனின் பெரிய மகன் "மாதேவன்னி" நடுகல் ஏற்படுத்தியுள்ளான்.
"தகடூருடைய மாவலிவாணராயரடியா
ன் கூடல் மாணிக்கன் சிவமாரைய்யனுக்காய் எறிந்து பட்டாரவர் பெ
ரியம் மகன் மாதேவன்னிக் கல்லு நடுவித்தான் ஸ்ரீ மதியுளி"
-(தருமபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/15)
படம்: நடுகல்லுடன் உள்ள வேடியப்பன் கோவில்
வேடியப்பன் கோவிலில் உள்ள மண் குதிரைகள்
*****************************************************************************************************************
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் உள்ள மற்றொரு நடுகல் கல்வெட்டு, கி.பி.898-ல் கங்கானுமான் ஆட்சியின் போது தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் அடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்று என்ற ஊரினை ஆண்டுவந்தான். இவனுடைய மாமனும் கோவூர் நாட்டைந்நூறும் உடையவனுமான மழற்பையன் என்பவரின் அடியான் சூழ்புனியன் என்பவன் புலியைக் கொன்று தானும் இறந்தபட்டுள்ளான். இவனுக்கு 'மாதேவன்னி' நடுகல் எழுப்பியுள்ளான்.
"தகடூர் மாவலிவாண
ராயரடியான் கடல் மாணிக்கன்[னு]லை குன்றினை ஆ[ள்]
வன் மாமன் கோவூர் நாட்டைந்நூறுமுடைய மழற்பை
யன்னடியான் சூழிபுளியன் புலி
எறிந்து பட்டான்மதியுளி"
-(தருமபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/14)
இதே ஊரில் உள்ள வேடியப்பன் கோவில் (புலிகுதிப்பட்டான் கல்)
**********************************************************************************************************************************************
கோவூர் நாடு ஐந்நுறு உடையவனான 'மழவர் மகன்" (மழற்பையன்),மாதேவன்னியனின் தந்தைக்கு "மாமன்" ஆவான். அப்பகுதி அக்காலகட்டத்தில்"மழவூர்" என்று விளங்கியது. மழவர் வாழ்ந்த பகுதி மழவர் நாடாகும்.
"ஸ்ரீசிரீ புருச பருமற்கு..........
தாவது பிருணிதுவியார் புறமலை
நாடாள மழவூர்த் தொருக்கொண்ட ஞா
ன்று செருப்பச்சடையன் பட்டான்"
(தருமபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/18), (தருமபுரி, ஆரூர் வட்டம், சின்னாங்குப்பம்), (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு).
சின்னங்குப்பதில் உள்ள வேடியப்பன் கோவில்.
********************************************************************************************************************************************
மழவர்கள் வாழ்ந்த ஊரை இன்றும் அதே பெயரில் கூறுகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல்படி அருகே“மழவராயன் புத்தேரி” என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு தானமாக நிலம் விட்டதை இங்குள்ள சிவன் கோவில் கல்வெட்டில் உள்ளது. இதே ஊரின் அருகே பள்ளிப்பட்டி (பள்ளிகள் வாழும் ஊர்) என்ற ஊர்ல்கமிண்டான் கல்வெட்டும் உள்ளது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ கான பள்ளியில் மழவ்ராயப்புத்தேரியில் முதல் மடையில் நம்பிராட்டிய”
-(தருமபுரி கல்வெட்டுகள் தொடர் எண்: 1974/146, ஆண்டு: கி.பி. 14- ஆம் நூற்றாண்டு).
சிந்தல்பாடி (எ) சிந்தகம் பாடி - சிவன் கோவில்
*********************************************************************************************************************************************
Mazhavarayar / Kadanthaiyar Chieftains:-
"ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை
நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல
கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப
நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும்
பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில்
பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும்
நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"
(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.)
"மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில்
இந்திரன்" (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்)
(இராமதாச பரம பாகவதர், கோதண்டராமசுவாமி சதகம், பாடல்-101)
"சும்மாபோகும் பள்ளிக்கேன் அதிவீர பூபனெனும் பட்டந்தானே"
(இராமசந்திரகவிராயர் அரியலூர் அரசரை "பள்ளி" என்று குறிப்பிடும் பாடல்), (தனிப்பாடல் திரட்டு).
மழவர் என்ற பெயர் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. மறவர்களுக்கு இப்பெயர் வழங்குவது போல தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளில் வன்னியர்கள் “மழவராயர்” என்ற பட்டத்தை கொண்டுள்ளனர்.
(சரித்திரச் செம்மல் ச. கிருஷணமூர்த்தி – நடுகற்கள்)
மழவர்கள் மற்றும் மழவராயர்களை பற்றி தமிழ் தாத்தா டாக்டர். ஊ.வே. சாமிநாத அய்யர்:-
மழவராயர்:-
மழவராயர் என்பார் மழவர்களுக்கு தலைவர் என்று பொருள். மழவர்கள் என்பார் சிறந்த வீரர்களுக்குள் ஒரு பகுதியினர். சங்க இலக்கியத்திலும், பழைய சாசனங்களிலும் அவர்கள் பற்றிய செய்திகளும், வீரத்தின் சிறப்புகளும் காணப்படுகின்றன. அதனால் அவர்கள் தமிழகத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் பழங்குடிகள் என்று தெரிகிறது. இப்பொழுது அவர்கள் வன்னிய வகுப்பை சார்ந்தவர்களாக இங்கே இருக்கின்றனர்.
மழநாடு:-
மழவர்கள் இருந்து வாழ்ந்து காரணம்பற்றி இபாகத்திலுள்ள பிரதேசம் மழநாடு எனப்பெயர் பெயர்பெற்றது. அப்பெயர் மழவர் நாடு என்பதின் திரிபே. “பெருஞ் சரணமா மறையோரும்” என்று காளமேகத்தார் சிறப்பிக்க பெற்ற அந்தண வகுப்பினருள் ஒரு வகையாரிர் பலர் இந்த நட்டிலிருந்ததால் அவர்கள் “மழ நாட்டுப் பிரகசரணத்தார்” என வழங்கப்பெறுவர். பாடல் பெற்ற சிவ்ஸ்தலமாகிய திருமழபாடி என்பதன் பெயர் மழவர் பாடி என்பதை சிதைவென்பர். மழவர்கள் பாசறை அமைத்திருந்த இடமாதலின் அது அப்பெயர் பெற்றது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்தில் கூறப்படும் கொல்லி மழவனென்பவன் இம்மழநாட்டின் ஒரு பகுதியை ஆண்டவனாவன்.
இம்மழநாடு மேல் மழநாடு கீழ் மழநாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுருந்தது. “மேல் மழ நாடென்னும் நீர்நாடு” என்று பெரிய புராணத்திலே ஆனாயநாயனார் புராணத்தில் மேல்மழநாடு சொல்லப்படுகிறது. அரியலூர் சமஸ்தானம் கீழ் மழநாட்டைச் சார்ந்தது.
குன்றவளநாட்டுக் உரிவர்களும் ஒப்பிலாதவளேன்னும் தெய்வத்தை வழிபடுபவர்களும் மழவர்க்ளுக்கு தலைவர்களு மாயினமையின் இவ் அரியலூர் ஜமீன்தார்கள் “குன்றை ஒப்பிலாத மழவராயர்” என்னும் குடிப் பெயரை பெற்றார்கள்.
மேற்கண்ட சங்ககால பாடல் மற்றும் கல்வெட்டுகளை கொண்டு பார்க்கும் போது“மழவர்கள்” என்பார் தகடூர் நாட்டின் பழங்குடியினர் என்பதும் அவர்கள் இன்றும் தொடர்ந்து இங்கு பெரும்பான்மையாக வாழ்வதை காண முடிகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மழவர்கள் பெரும்பான்மையாக இருப்பதை இன்றும் காண முடியும்.
'மழவர்' என்ற ஒரு பிரிவினர் பழந்தமிழ் நாட்டில் இருந்த ஒரு பிரிவினர்.
-அருணாசலக் கவுண்டர்.
மழவர்கள் கொங்கர்களில் இருந்து வேறுபட்டவர்கள். தகடூர் நாடு கொங்க நாட்டில் என்றுமே அடங்காது என்று தகடூர் நாட்டை சேர்ந்த திரு. அருணாசலக் கவுண்டர் அவர்கள் தெரிவிக்கிறார்.
*****************************************************************************************************************
Thanks To : Thagadurnadu.blogspot.com