பாண்டிநாடு கொண்டானான நரலோகவீரன்:
=======================================
ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரமசொழதெவர்க்கு யாண்டு
முன்றாவது ஓய்மாநாடான விஜெயராஜெந்திர
வளநாட்டு முஞ்நூற்றுகுடிப்பள்ளி செங்கெணி
அம்மையப்பந் பாண்டியாந நரலொக
விரப்பெரையநென் மாத்தூர் நாட்டு திருவக்கரை
யுடையார் தெவதானம் நீர்நிலமும் புந்செய்யும்"
முன்றாவது ஓய்மாநாடான விஜெயராஜெந்திர
வளநாட்டு முஞ்நூற்றுகுடிப்பள்ளி செங்கெணி
அம்மையப்பந் பாண்டியாந நரலொக
விரப்பெரையநென் மாத்தூர் நாட்டு திருவக்கரை
யுடையார் தெவதானம் நீர்நிலமும் புந்செய்யும்"
(S.I.I. Vol-XVII, No.201), (Thiruvakkarai, Viluppuram Taluk, South Arcot District), (Vikramachola, 3rd year, 1120-1121 A.D).
நரலோகவீரனை "குடிப்பள்ளி" (வன்னியர்) என்று சோழர் காலத்தியக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்த நரலோகவீரனே, "கலிங்கராயன்" என்றும் அழைக்கப்பெற்றார்.
இவர் தேவாரம் மற்றும் திருவாசகத்தை "செப்புப்பட்டயத்தில்" செய்து தில்லை நடராஜர் கோவிலுக்கு வழங்கினார்.
இவர் அதே கோவிலில் நூறு கால் மண்டபத்தையும் கட்டியுள்ளார் மற்றும் தில்லைப் பகுதிக்கும் பல நன்மைகளையும் செய்துள்ளார்.
இவர் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவனது மகன் விக்கிரம சோழன் காலகட்டத்திலும் வாழ்ந்திருக்கிறார். இவர் "அரும்பக்கிழான்" என்றும் அழைக்கபெற்றார். இவர் தொண்டைமண்டலப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரைப்பற்றி திண்டிவனம் கல்வெட்டும் (விக்கிரம சோழன், கி.பி. 1124) செய்தி தெரிவிக்கிறது.
இவர் "பாண்டிய நாட்டை" வென்றதால் "பாண்டிநாடு கொண்டானான நரலோகவீரப் பெரியரையன்" என்று அழைக்கப்பெற்றார்.
வன்னியர்கள் பயன்படுத்தும் பல பட்டங்களில் "கலிங்கராயர்" என்பது மிக அதிகமானதாகும்.
வன்னியர்கள் கலிங்கத்தை வென்ற அரையர்கள் என்பதால் "கலிங்கராயர்கள்" என்று அழைக்கப்பெற்றனர்.
எனவே "கலிங்கராயர்" என்ற பட்டமானது "வன்னியர்களுக்கே உரியதாகும்". மற்றவர்கள் அதை பிற்காலத்தில் பயன்படுத்தினாலும் அது முதன்மையாகாது.
செய்தி:நா.முரளிநாயகர்.
No comments:
Post a Comment