Tuesday, April 7, 2015







சோழர் காலத்து அண்ணமங்கலம் சிற்பமும் கல்வெட்டும்:

=====================================================
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள ஊரே அண்ணமங்கலம் ஆகும். அவ்ஊரில் உள்ள மலை சூழ்ந்த பகுதியில் ஒரு குன்றின் உச்சியில் இயற்கையாக அமைந்த குகையில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்துச் சிற்பமும் ஒரு கல்வெட்டும் உள்ளது. அச்சிற்பமானது, ஒரு சிங்கம் யானையை விழ்த்துவது போல வடிக்கப்பட்டுள்ளது. அச் சிங்கத்தின் புருவத்தில் கல்வெட்டு வாசகம் ஒன்று காணப்படுகிறது. அவ்வாசகம் :-
"சொக்கப் பல்லவன் வாய் செல்லும் வன்னிய மணாளன்"
என்று உள்ளது. இந்த கல்வெட்டு மற்றும் சிற்பம் இடம்பெற்றுள்ள இடமானது, காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜ சோழனை போரில் தோற்கடித்து கைதுசெய்த இடமான வயலூரிலிருந்து 20-கி.மீ தொலைவில் உள்ளது. மேற்குறிப்பிட்ட அண்ணமங்கலம் குகையிலேயே, சிறைப்பிடிக்கப்பட்ட மூன்றாம் ராஜராஜ சோழனை கோப்பெருஞ்சிங்க பல்லவன் சிறைவைக்கப்பட்டதாக கருதமுடிகிறது.
அண்ணமங்கலம் சிற்பத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கமானது "கோபெருஞ்சிங்கப் பல்லவனையும்", யானையானது "மூன்றாம் ராஜராஜ சோழனையும்" குறிப்பதாகும். இதை விளக்கும் முகமாகவே சிங்கத்தின் புருவத்தில் கல்வெட்டு வாசகம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொக்கப் பல்லவனான காடவ கோபெருஞ்சிங்கன் (சிங்க சிற்பம்) வாயில் செல்லும் யானையாக மூன்றாம் ராஜராஜ சோழன் (யானைச் சிற்பம்) காட்டப்படுகிறான். இச்செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக வயலூர் கல்வெட்டும் நமக்கு சான்று வழங்குகிறது. அது :-
"பெருங்களிற்றுச் சோழனையு மமைச்சரையும்
பிடித்துச் சிறையிலிடக் களிறுவிடு மிண்டன்
சீயா" (Epigraphia Indica, Vol-XXIII, Page No.180-181).
மேற்குறிப்பிட்ட வயலூர் கல்வெட்டு, சோழனை (மூன்றாம் ராஜராஜ சோழனை) "பெருங்களிறு" (யானை) என்றும் கோபெருஞ்சிங்கப் பல்லவனை "சீயன்" (சிங்கம்) என்றும் குறிப்பிடுகிறது. எனவே அண்ணமங்கலம் சிற்பமும் கல்வெட்டும் இடம்பெற்றிருக்கும் மலைக்குகையானது "மூன்றாம் ராஜராஜ சோழனை" சிறைவைத்த இடமாக உறுதிப்படுத்தப்படுகிறது.
மேலும் இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் "வன்னிய மணாளன்" என்ற சொல்லாடல் "முன்றாம் ராஜ ராஜ சோழனை" குறிக்கும் பதமாகும். சோழர்களும் காடவர்களும் மிக நெருங்கிய உறவினர்களாவர். காடவராய அரசர்கள் "பள்ளிகள்" (வன்னியர்கள்) ஆவர்.
எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வெட்டு மற்றும் சிற்பத்தில் இருந்து உறுதிபடுத்தப்பட்ட செய்தி என்னவென்றால் உலக புகழ் பெற்ற "சோழ மன்னர்களின் மரபினர்கள்" எங்கள் "வன்னிய குல க்ஷத்திரிய மரபினர்களே" ஆவர்.
இதுவே சான்றுகளின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்ட முடிவாகும்.
-----xx----xx------xx----
Thaks To : N.MuraliNaicker Anna.

No comments:

Post a Comment