Friday, July 22, 2016

திருப்பதி ஏழுமலையான் வரலாற்றுக்கு அடிகொலிய வன்னிய தொண்டைமான்

திருப்பதி ஏழுமலையான் வரலாற்றுக்கு அடிகொலிய வன்னிய தொண்டைமான்:
===============
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வரலாறு பல நூற்றாண்டு
களைக் கடந்ததாகும். 
திருவேங்கடமுடையான் குடிகொண்டுள்ள
இத்திருமலை, திருவேங்கடமலையாக அழைக்கப்பட்டு வந்தது.இந்த 
திருவேங்கடமலை சப்த மலைகள் எனப்படும் ஏழுமலைகள் அடங்கிய 
திருமலையாக விளங்குகிறது.
-----------------
வன்னிய சக்கரவர்த்தி 
தொண்டைமான்  முதன் முதலில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டி வழிபட்டான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

கி.மு.1-ம் நூற்றாண்டில் 
திருமலையில் ஒரு புற்றிலிருந்த 
ஏழுமலையானின் சுயம்பு
 சிலையை, வன்னிய சக்கரவர்த்தி
 தொண்டைமான் முதன் முதலில்
 தரிசித்துள்ளார்.பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த
சிலையைச் சுற்றிலும் ஒரு
 மண்டபத்தை நிறுவியுள்ளார். 
-----------------
கி.பி 
8-ம் நூற்றாண்டு வரை பக்தர்கள் 
சாமிக்கு பூஜைகள் செய்து
 வந்ததாக சரித்திரங்கள் தெரிவிக்கின்றன. 

கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு பின்னர்
 அரசர்கள், ஆழ்வார்கள் பலர்
 ஏழுமலையானின் மகிமைகளை
உலகுக்கு தெரியப்படுத்தினர்.


இதில்  வன்னிய குலசேகராழ்வார்,
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் திருப்பதி ஏழுமலையானின் வாசற்
படியாகவோ அல்லது பீடமாகவோ
 இருக்கவே ஆசைப்படுவதாக தனது 
பாசுரத்தில் பாடியுள்ளார்.


இதனால் இப்போதும், திருப்பதி
 ஏழுமலையான் கோயில் வாசற்படிக்கு குலசேகரப்படி
 எனும் பெயர் உள்ளது. 
-----------------
திருவேங்கட
மலை மீது செல்ல மிகுந்த சிரமாக இருப்பதால், திருப்பதிக்கு அருகே 
உள்ள திருச்சோழினூரில்
(திருச்சானூர்) ஏழுமலையானின் வெள்ளி உருவத்தை பிரதிஷ்டை
செய்து வழிபட்டனர். 
கி.பி. 9-ம் நூற்றாண்டில் அதாவது 
945-ம் ஆண்டில் ஏழுமலையானின் 
கற்ப கோயில் கட்டப்பட்டதாக
கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுற்றுப்புறச் சுவர்களும்
எழுப்பட்டன. 

பின்னர் 10-ம் நூற்றாண்டில், 2-வது சுற்றுச்சுவர்
எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் கி.பி.
1262-ம் ஆண்டில் சுந்தர பாண்டிய
 அரசன், தற்போதைய கற்ப கோயில்
 கோபுரத்தின் மீது தங்கக் கலசங்களை 
நிறுவி உள்ளார். 

கி.பி.13-ம் நூற்றாண்டில்
 கோயிலுக்கு மராமத்து பணிகள்
 நடைபெற்றுள்ளன. 

கி.பி 1417-ம்
ஆண்டில் மல்லண்ணா என்பவர், கற்ப
கோயில் முன்பு 16 தூண்கள்
 அடங்கிய திருமாமணி மண்டபத்தை கட்டி உள்ளார். 
மேலும், வாயிலின்
 இருபுறமும் ஜெயா, விஜயா
சிலைகளும், கருடாழ்வார் சிலைகளும் நிறுவப்பட்டன. -----------------
கி.பி. 1209-ம் ஆண்டு கோயிலின் 
முகப்பு கோபுர பணிகள் 
தொடங்கப்பட்டன. மேலும்
 கோயிலுக்குள் பிரசாதங்கள்
 தயாரிக்கும் அறையும் கட்டப்பட்டது.


கி. பி.16-ம் நூற்றாண்டில் பரகாமணி மண்டபம், வரத ராஜர் சன்னதி,
ராமானுஜர் சன்னதிகள் கட்டப்பட்டன.

13-ம் நூற்றாண்டிலேயே  கிருஷ்ண
தேவராய மண்டபம், கண்ணாடி
 மண்டபம், ரங்கநாயக மண்டபம்
போன்றவை கட்டப்பட்டன. 

கி.பி. 15-ம் நூற்றாண்டில், கொடிகம்ப 
மண்டபம் கட்டப்பட்டது. 

கி.பி. 1470-ல்
 விஜயநகர சக்ர வர்த்தி சாளுவ
நரசிம்மராயுலு தன்னுடைய 
மனைவி, இரண்டு மகன்களின்
 பெயரில் சம்பங்கி மண்டபம் உட்பட மேலும் சில கட்டிடங்களைக்
 கட்டினார். 

இப்படி திருப்பதி
 ஏழுமலையான் கோயில் படிப்படியாக கட்டப்பட்டு,
நடைபாதை, வாகனப் பாதைகள்,
விடுதிகள், தேவஸ்தான அலுவலகங்கள் என வளர்ந்து
நிற்கிறது. 
-----------------

வன்னியபுரம்:இராஜேந்திரசோழன் ஆடி ஆதிரை 2016

=====================================
எதிரிகளின் செங்குருதி குடித்து வீரத்தின் விளை நிலமாய் நின்றவனே..!
செங்கழல் புழுதியிலே செங்குருதி குடித்து புலிக்கொடி நட்டவனே..!
ஈழ நாட்டு எல்ல வரை எசையோடு ஆண்ட ஆண்டையனே..!
வன்னி என்னும் நெருப்பில் தீத்தழலை உதித்தவனே..!
உன்னை காண வன்னியபுரம் நோக்கி ஓடோடி வருகிறோம் இவ்வருட ஆடி ஆதிரைக்கு..!
====================================

வன்னிய இன குரு:ராஜ ரிஷி சு.அர்த்தநாதீஸ்வர வர்மா

===================================

வன்னிய இன குரு:ராஜ ரிஷி சு.அர்த்தநாதீஸ்வர வர்மா:

=================
இந்திய விடுதலை, தமிழ் மொழி மேம்பாடு மற்றும் தான் பிறந்த வன்னியகுல க்ஷத்ரிய இனம் உயர்வு பெறவேண்டும் என்ற நோக்கங்களுக்காகவே வாழ்ந்தவர் சேலம் கவிச்சிங்கம் ராஜ ரிஷி சு. அர்த்தநாதீஸ்வர வர்மா அவர்கள். 
----------------------
வன்னியர் மேம்பாட்டுக்காக க்ஷத்ரியன், க்ஷத்ரிய சிகாமணி மற்றும் தமிழ் மன்னன் ஆகிய இதழ்களையும். நாட்டு விடுதலைக்காக வீரபாரதி என்ற இதழையும் நடத்தினார் வர்மா.
----------------------
வர்மா தனது பணிக்காக குடும்பத்தை இழந்தார். அவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகி இருக்கிறது என்பதையும், தீவிர சமூக பணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து மாண்டு போய் இருக்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்களை வைத்தும் அவரோடு பழகியவர்கள் சொல்லும் தகவல்களை வைத்தும் யூகிக்க முடிகிறது.
----------------------
தன்கென்று எந்த சொத்தும் இல்லாமல் துறவியை போல வாழ்ந்த வர்மா அவர்கள் வன்னியர் பூமியான   அதாவது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் தன் உயிர் பிரியவேண்டும் என்று விரும்பி இருக்கிறார். 
----------------------
தன் இறுதி காலத்தை திருவண்ணாமலையில் கழித்த வர்மா 07  -12  - 1964  ஆம் அன்று காலமானார்.
----------------------