பெரும்பள்ளி சோழன் நலங்கிள்ளி:
--------
சோழன் நலங்கிள்ளி தன்னை புறநானூற்றில் பள்ளி(அரசன்) என்று குறிப்பிட்டுள்ளான்.
இவரது காலம் கி.மு 2 ஆம் நூற்றாண்டு.
இவன் கச்சிப்பள்ளி கரிகாற்பெருவளத்தானின் மகன் ஆவார்.
--------
பாடல் - 33: புதுப்பூம் பள்ளி
====
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை.
துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
வெற்றி பெற்றோன் தனது அரசபள்ளி முத்திரையைப் பதிக்கும் மரபு பற்றிய செய்தி.
--------
(யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,ஒதுக்குஇன் திணிமணல்
புதுப்பூம் பள்ளி வாரின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே).
---------
நடு இரவில் தனிமகனாக இல்லாது காதலி துணையுடன் மட்டுமே இருக்கும் படியான பனிபொழியும் பூங்காவினுள்;
ஒதுக்குபுறமாக இருக்கும் மணல்மேட்டில் ; புதிதாக அங்கு புகும் அரசனின்(புதுப்பள்ளி) வருகையை எதிர்பார்த்து மாடங்களில் மைதீட்டிய விழியாலேயே காளைபோன்ற இளைஞனை வீழ்த்தக்கூடிய பார்வையுடன் புதுஅரசனுக்காகக்(புதுப்பூம்பள்ளி) காத்திருக்கும் அப்பெண்களுடன் ஊடாகச்சென்று (வசந்த) விழாக்கள் பல கொண்டாடியிருக்கின்றாய்.
(அப்பெண்களுடன் என்பது நாம் ஊகித்துக்கொள்ளளாம்).
------
புது-புதிய; பூம்-புகும்;பள்ளி-அரசன்.
புதுப்பூம்பள்ளி-புதியதாக அரண்மனையில் புகும் அரசன்(பள்ளி) ஆகும்.
எ.கா. காவிரிப் "புகும்"பட்டிணம் -காவிரிப்"பூம்"பட்டிணம்.
--------
சோழன் நலங்கிள்ளி உரையூரில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில்,
உறுபகை ஒடுக்கி உலகோம்புந் துறையில் மேம்பட்டு விளங்கினான்.
ஏனைவேந்தர் பலரும் இவனுக்கு அஞ்சியே வாழ்ந்தனர். ஒவ்வொரு
வேந்தரிடத்தும் வெற்றிகுறித் தூதும் வலம்புரிச் சங்கு இருந்ததெனினும், அதனை முழக்கின் சோழன் நலங்கிள்ளி செவிக் கெட்டும்; அது கேட்பின் அவன் பொறாது போந்து நம் வலியை யழிப்பனென அஞ்சி அதனைத் தம்
மனையின் ஒரு புடையே கட்டிவைத்திருந்தனர்.
வேந்தர் மனைகளில் பள்ளியெழுச்சிக்(அரச எழுச்சி) காலத்தில் அவ்வலம்புரி முழக்கப்படின், அதுகேட்டு,
நலங்கிள்ளியை நினைந்து என்னெஞ்சு வருந்துவது வழக்கம். மேலும்,
நலங்கிள்ளியின் படைமிக்க பெருமையுடையது. அவனது படை
புறப்படுங்கால் முன்னே செல்லும் தூசிப்படையிலுள்ளார் பனையின்
நுங்கினைத் தின்னுங் காலமாயின், இடைப்படையிலுள்ளார்
அப்பனையிருக்கும் இடம் சேரும்போது பனை நுங்கு முற்றிக் காய்த்துக்
கனிந்துவிடும்; அவர்கள் அதனைத் தின்னக்கூடிய காலமாகும்; படையின்
கடையிற் செல்வோர் அவ்விடத்தை யடையும்போது, பனங்கனியும் போய்ப்
பிசிரொடு கூடிய பனங்கிழங்கு பெற்றுச் சுட்டுத் தின்னும் காலமாகும்.
இத்துணைப் பெரும் படையை வைத்தாளும் பேராற்றல் படைத்தவன்
சோழன் நலங்கிள்ளி. இவன் வலிமுற்றும் இப்போது
புறங்காட்டிடத்ததாயிற்றே என அவன் இறந்துபட்ட போது, சோழநாட்டு
ஊர்களுள் காவிரிக்கரைக் கண்ணதாகிய ஆலத்தூரில் வாழ்ந்த சான்றோர்,
பிரிவாற்றாது இப் பாட்டைப்பாடி இதன் கண் மேற்கூறிய கருத்தெல்லாம்
தொகுத்துரைத்துக் கையற்று இரங்கினார்;
இச் சான்றோர் ஆலத்தூக்கிழார்
எனப்படுவர். இவர் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பல
பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
---------