அக்னி குல அப்பனுக்கு கோவில் கட்டிய அக்னிகுலதிலகன் வீ ரவல்லாளன்:
===============================================
குழந்தைச் செல்வம் இல்லாத வல்லாள மஹாராஜாவுக்கு அண்ணாமலையாரே ஒவ்வொரு வருடமும் சிராத்தம் செய்து வருகிறார்.
வல்லாள மஹாராஜா இறைவனை வேண்டிக் குழந்தைப் பேற்றுக்காகப் பிரார்த்திக்க ஈசன் ஒரு சிவனடியாராகக் காட்சி அளிக்கிறார்.
சிவனடியாரை வணங்கி அவருக்கு வேண்டிய சேவைகள் செய்த மஹாராஜாவிடம், தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும் என்று அடியார் கேட்கத் தன் மனைவியான சல்லமாதேவியை அனுப்பி வைக்கிறான் வல்லாளன்.
அங்கே சென்ற சல்லமாதேவியோ அடியாரைக் காணாமல் ஒரு பச்சிளங்குழந்தையைக் கண்டு திகைக்கிறாள்.
மன்ன்னை அழைக்க வியப்படைந்த மன்னன் வந்து பார்க்க, அசரீரியாய்க் குரல் கேட்கப் பின்னர் ரிஷபாரூடராய் ஈசன் காட்சி அளித்து, இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாத வல்லாள ராஜனுக்குத் தாமே குழந்தையாய் வந்ததாயும், அவனுக்குரிய ஈமக்கடன்களைத் தாமே செய்யப் போவதாயும் கூறி மன்னனை மகிழ்விக்கிறார் ஈசன்.
அது முதல் ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் மக நக்ஷத்திரத்தில் கொண்டப்பட்டு என்னும் கிராமத்தில் (முழுக்க முழுக்க வன்னியர்குலக்ஷத்ரியர் வாழும் கிராமம்) வல்லாளராஜனுக்கு ஈமக்கடன்கள் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் அங்கே எழுந்தருளுகின்றார்.
--------------------------------------------
இன்றளவும் தம் முப்பாட்டானான வீரவல்லாளனுக்கு ஈமக்கடன் வருடம் வருடம் செய்து வருபவர்கள் வீரவல்லாளனின் குல புத்திரர்களான எம் பள்ளிகுலத்தினரே என்பவை குறிப்பிடத்தக்கவை..!
----------------------------------------------